Wednesday, February 19, 2014

சிவயோகம் அருளும் சவாசனம் (முழுமையான் தளர்வுப் பயிற்சி)

            சாந்தியாசனம்

  



                 

               



தூங்கிக் கண்டார் சிவலோகம் தம்முள்ளே

தூங்கிக் கண்டார் சிவபோகம் தம்முள்ளே

தூங்கிக் கண்டார் சிவயோகம் தம்முள்ளே

     தூங்கிக் கண்டார் நிலை சொல்வ தெவ்வாறே


                                                                   - திருமூலர்


சவம் என்றால் பிணம், உச்சந்தலையில் உடல் ஒருசவம்போன்று தோன்றுகிறது. இந்த ஆசனம் செய்வோர் உள்ளேயும், வெளியேயும் ஏற்படும் எல்லாத் தூண்டுதல்களுக்கும் ஆட்படாமல் எந்தஎந்த எதிர்ச் செயலுமின்றி பிணம் போல ஆக வேண்டும் என்பதை குறிக்கிறது.


மனம்  
               கால் கட்டை விரல்களில்துவங்கி மற்றும் உடல் முழுவதும் பரவி இறுதியில் தலை (மூளை )வரை படிப்படியாக நினைவை செலுத்த வேண்டும்.





மூச்சின் கவனம்

                     ஆழ்ந்த மூச்சு



உடல் ரீதியான பலன்கள்     
                          
  •  ஆசனங்கள் முடிந்த பின் கண்டிப்பாக இந்த ஆசனம் செய்ய வேண்டும் 

  • 5 முதல் 20 நிமிடம் வரை செய்யலாம் 

  • அற்புதமான பலன்களை கொடுக்கக் கூடியது

  • மூளைக்கு நல்ல ஒய்வு அளிக்கிறது 

  • உடல் முழுவதையும் உறுதிப்படுத்தி ஊக்கமளிக்கிறது.

  • எல்லாத் தசைகளும், மூட்டுகளும் தளர்த்தப் படுகின்றன.

  • தினமும் இருவேளை செய்யலாம்.

  • பிராணாயாமம் செய்வதற்கு உடல் ஏற்றதாகிறது.

  • 30 நிமிடப் பயிற்சி 3 மணி நேர ஆழ்ந்த தூக்கத்திற்கு சமமாகிறது 



 குணமாகும் நோய்கள் 
  •   அதிக இரத்த அழுத்தம், மன இறுக்கத்தால் உண்டாகும் தலை வலி ஆகியவற்றால் ஏற்படும் மன நோய் பிரச்சனைகளுக்கு வெகுவாக பலன் அளிக்கிறது.

  • தூக்கமின்மை , சர்க்கரை நோய், இதய நோய் , வலி உபாதைகள் , நினைவாற்றல் ,இயலாமை மற்றும் பலவாற்றும் இது அற்புத மருந்து.

  • களைப்போ அல்லது சோர்வோ இருக்கும்போது இந்த பயிற்சியை செய்யலாம்.

  • ஒலிநாடாவின் உதவியுடனும் செய்யலாம்.



ஆன்மீக பலன்கள்: 

  • மனம் ஆழ்ந்த ஓய்வை பெறும். அந்தரங்க யோகப் பயிற்சி வெகுவாக பயன்படுகிறது. 

  • பயிற்சி செய்பவரின் உடல் நலனை அதிகரிக்க செய்கிறது.

  • பஞ்சகோசங்களையும்  சுத்திகரிக்கும் ஆசனம் இது.

  • வயது, உடலின் நிலை போன்ற வரம்பின்றி அனைவரும் பயிற்சி மேற்கொள்ளலாம்.

  • செய்யும் நேரம் முழுமையும் சுவாசம் மெதுவானதாக , ஆழமானதாக, ஒய்வானதாக , சீரானதாக ஏக காலத்தில் நிகழ்கிறது .


சவாசனம் மல்லாந்து படுக்கும் நிலை மட்டுமல்லாது வேறு சில நிலையிலும் செய்யலாம்





தொடரும் 
குருஜி .டி.எஸ்.கிருஷ்ணன்

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment