Sunday, February 4, 2024

பொன்னுருவில் எழுந்தார் ஆதிசேஷ பதஞ்ஜலி மஹரிஷி

 அன்புடையீர் !

அனைவருக்கும் ஆன்ம வணக்கங்கள் 


       மிகவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு அற்புதமான பதிவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். பிரதி மாதம் முழுமைக்கும் தொடர்ந்திருக்கும் குரு சேவை மற்றும் பதஞ்சலி சபையின் அன்றாடஅலுவல் பணிகளோடு நம்முடைய ஜீவனத்திற்கான வேலையும் பின்தொடர ............

 

             மேலும் பேஸ்புக், வாட்ஸ்அப் குரூப் என்ற வகையில் நமது பணியும் விரிவடையும் போது இவை அனைத்திற்கும் முதலாவாதாக இருந்தவலைப் பூவில் பதிவு செய்வது என்பது நாளடைவில் இயல்பாகவே குறைந்து போனது என்றாலும், இனி வரும் காலங்களில் சமீபத்திய நிகழ்வுகளை பதிவுகளாக தொடர்வது என்று நான் முடிவெடுத்திருக்கிறேன்....

 


    ஏனென்றால் வலைத் தளத்தில் நான் பதஞ்ஜலி யோகம் மற்றும் ஆன்மீகம் பற்றிய செய்திகளை பதிவு செய்யும் பணியானது  துவங்கியது  அடியேன் குருநாதரிடம் பாடங்களை பயின்று கொண்டிருந்த காலம் ஆகும். அந்த வகையில் என்னுடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது இந்த வலைத்தளம்...

 

   செய்யக் கூடிய பணியில் ஒருவருக்கு பூரண திருப்தி ஏற்பட்டு விட்டால் பிறகு இயற்கை அந்த பணியில் இருந்து அவரை திரும்ப அழைத்துக் கொள்ளும் என்று எதிலோ படித்த ஞாபகம். ஆக என்னுடைய என்ற சரீரம் ஆற்றுகிற இந்த பணியில் எனக்கு பூரண திருப்தி இல்லை என்பதே உண்மை ...

                                                                             



  நேராக விஷயத்திற்கு வருகிறேன். கடந்த வருடம் ஆடி மாதம் அன்று பதஞ்ஜலி சபையின் மதுரை மாநகர் தியான பீடம் புதிய முகவரியில் மீள் துவக்கம் ஆனது. அதனைத் தொடர்ந்து சத்குருவின் ஜீவ நாடியில் வந்த உத்தரவை பின் பற்றி நமது தியான பீடத்திற்கு ஸ்ரீ ஆதிசேஷ பதஞ்ஜலி           மஹரிஷியின் சிலையை பிரதிஷ்டை செய்வதென்று முடிவு செய்யப் பட்டது.

 

சுமார் நான்கு மாத காலங்களுக்கு மேலாக நடைபெற்ற  இந்த பணியானது எல்லாம் வல்ல சத்குருவின் ஆசியோடு நிறைவு பெற்றது. அடியேன் ஆசைப் படி அதைசத்குருவின் ஆஸ்தான தேசமாக அவர் பதஞ்ஜலி என்ற காரணப் பெயர் கொண்ட , 

 

    அவர் மூவாயிரம் அந்தணர்களை அழைத்து வந்து அன்னை சிவகாமி உடனாய  சபாநாயகர் நடராஜ பெருமானை பூஜை செய்து வணங்க அவர்களுக்கு ஆகமும் வகுத்த  தில்லை வனம் என்று முன்பொரு காலத்தில் அழைக்கப் பட்ட இந்த உலகின் பஞ்ச பூத உற்பத்தி ஸ்தானமாக இருக்கக் கூடிய சிதம்பரம் திருக்கோவிலில் வைத்து வழிபட்டு எடுத்து வர வேண்டும் என்ற அடியேனின் விருப்பத்தை

       




   பல கட்டங்களுக்கு பிறகு ஐயா தனது பிறவி நோக்கத்தை அடைந்த புண்ணிய பூமி ஆன சிதம்பரத்திலிருந்து நடராஜருடைய சன்னிதானத்தில் இருந்து அவரை நாம் பெற வேண்டும் என்று என்னுடைய ஆசையை ஜீவ நாடி நூல் ஆசான் கணபதி அய்யா முதல் அனைவரும் ஏற்றுக் கொண்ட பிறகு...


   ஐயாவின் ஐம்பொன் உருவம் செய்த பிறகு சிதம்பரம் கீழ ராஜ வீதியில் உள்ள குருநாதர் தீட்சிதரின் வீட்டில் ஒரு வாரம் ஐயா இருந்து பூஜை ஏற்றார்...


   நாங்கள் கேட்டது போலவே குரு நாதர் தீட்சிதர் அவர்கள் சத்குருவின் திருவுருவை அனைவரது கரகோஷத்துடன் பொன்னம்பலத்தார் சன்னதியில் இருந்து வெளிக்கொண்டு வந்து நமது கையில் ஒப்படைத்தார்...


    கணபதி ஐயா தலைமையில் இதைப் பெற்று ஆகாச லிங்கத்தில் அர்ச்சனை செய்து...


   பிறகு திருநாங்கூர் சென்று மாதங்கி தரிசனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அருள்நிலையில் கணபதி ஐயா உத்தரவாக நமக்கு விதித்ததால்


    சிதம்பரத்திலிருந்து புறப்பட்டு திருநாங்கூர் சென்று அங்கே ராஜமாதங்கி அன்னையின் சன்னதியில் ஐயாவை வைத்து வணங்கி அர்ச்சனை செய்யப்பட்டது...


பிறகு நல்லபடியாக இரவு பத்து மணி அளவில் நாம் சபை வந்து சேர்ந்தோம் 🪷

யோக ஆச்சாரியார் அருமை குருநாதரின் சூட்சும வழிகாட்டலோடு 


   கடந்த 21 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் பதஞ்ஜலி அய்யா பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டார் 🪷


இதில் விசேஷம் என்னவென்றால் ஐயாவை கொண்டு வந்ததும் ரோகிணி நட்சத்திரம் ஐயா பிரதிஷ்டை செய்யப்பட்டதும் ரோகிணி நட்சத்திரம் 🪷

     பிறகு நடைபெற்ற அஷ்டபந்தன பிரானப்பிரதிஷ்டை விழாவின் பத்திரிக்கை வடிவமைப்பு முதல் கொண்டு நிகழ்ச்சிகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்று நாடி மூலமாக சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி வழிகாட்டியதன் படி இதுவரை அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம் 🪷


இதுவரை என்ன நடந்ததோ அது அய்யாவின் செயல் 🪷


இதற்குப் பிறகு என்ன நடக்குமோ அதுவும் ஐயாவின் செயல் 🪷🪷


இதில் எனக்கு மற்ற சபையின் உறுப்பினர்களுக்கோ தனிப்பட்ட விருப்பம் என்பது இல்லை 🪷

 ஐயாவின் விருப்பமே எங்களுடைய விருப்பம் 🪷


இனி நடக்க இருப்பதையும் அவரே நமக்கு அறிவிப்பார்..

அவரே வழிநடத்துவார்...


   ஐயா இருந்த காலத்தில் அவரை முகம் பார்க்காதவர்கள் கூட இன்று நமது சபைக்காக பணி செய்கிறார்கள் என்றால் அதை அய்யாவின் திருவருள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது 🪷

   எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய லட்சியம் எல்லாம் பதஞ்சலி யோகத்தின்படி வழி நடந்து ஆன்ம விடுதலை அடைவதே 🪷


   ஒரு பரந்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருப்பதால் இங்கே உபதேச மந்திரத்தை தவிர ஒளிவு மறைவு என்பது எங்களுக்குள் எப்போதும் இல்லை 🪷


    ரகசியம் என்று சொல்லப்படுவதை எல்லாம் தவிர மற்றவற்றை பகிர்ந்து கொள்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை...



  எது கிடைக்கிறது அதை ஏற்றுக் கொள்வோம்
எது நடக்கிறதோ அதை கவனிப்போம்
சங்கம் என்ன செய்ய வேண்டும் சங்கத்தை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதை எல்லாம் சத்குரு முடிவு செய்வார்...


  ஏனென்றால் அவரே இந்த சத்சங்கத்தின் தலைவர்

அறிந்தாலும் அறியாமல் இருந்தாலும் அவரை குருவாக தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு அவர் எல்லாமும் ஆக இருந்து குடும்பத்திலும் ஆன்மீகத்திலும் பல வெற்றிகளை அவர்களுக்கு பரிசளிப்பார்...

                          

                                                  

 இந்த பணியில் துணை நின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்


மீண்டும் அடுத்த ஒரு பதிவில் சந்திப்போம்.

 

                                                                                                                                            இப்படிக்கு 

பதஞ்ஜலி சபை


  


No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment