இது நாள்வரை பள்ளி , கல்லூரி மற்றும் பல அரங்கங்களில் யோகா முகாம் நடத்தியுள்ளோம். இந்த முறை சற்று வித்தியாசமாக மதுரை பைக்காரா பாரதி ஆதரவற்றோர் அன்பு இல்லத்தில் உள்ள வயதானவர்களுக்கு நடத்துமாறு ஆச்சாரியார் கேட்டுக் கொண்டார். அதன் படி இரண்டு நாட்கள் வயதானவர்களுக்கு ஏற்ற சில பயிற்சிகளையும், வயோதிகத்தை எதிர்கொள்வதற்குரிய தன்னம்பிக்கை வளர்ப்பையும் பற்றி கமலக்கண்ணன் அவர்கள் விளக்கினார்.
