Showing posts with label யோக தீபம். Show all posts
Showing posts with label யோக தீபம். Show all posts
Thursday, June 23, 2016
Saturday, February 27, 2016
மனம் - உடல் - உயிர்ப்பு ??????????????????????
மனித
வாழ்க்கை என்பது மனிதனாகப் பிறந்த பிறகு அவனுக்கு ஏற்படுகின்றது. அதற்கு முன்பாக
அது எவ்வாறு தோன்ற முடியும்?
மனிதனாகப் பிறந்த பிறகு தானே ஒரு ஞான வாழ்க்கை என்பது ஏற்படும்.
அவன் பிறப்பதற்கு முன்னால் வேறு ஒரு வாழ்க்கையிலே அவன் இருந்திருக் கிறான். அந்த
வாழ்க்கையிலே அவன் தனக்காக என்னென்ன செய்திருக்கிறான் என்பது அந்த சூட்சம வடிவிலே
இருக்கின்ற அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
Saturday, May 2, 2015
அருளுரை - பிராணாயாமம்-பிரத்யாகாரம்-தாரணை-தியானம்-சமாதி
ஞான சபை வகுப்புகள்
யோகவழியிலே
சொல்லிக் கொண்டு வருகின்ற போது குறைந்தபட்சம் நாம் உடலில் கண் உறுப்பு
எங்கேயிருக்கிறது என்று தெரிய வேண்டாமா. காது எங்கே என்றால்? அது எனக்குத் தெரியுமே? அது தெரிகிறது அது செய்யும் தவறுகள் தெரியவில்லை. உடலில் பாயு என்று ஒன்று
இருக்கிறது. அது என்ன பண்ணுகிறது என்று
உனக்கு தெரியாது. ஆகவே எந்தெந்த கருவிகளால் லாபமும், நஷ்டமும்
ஏற்படுகிறது என்பதை ஆசனத்தின் மூலம் தெரிந்து
கொண்டுவிட்டால், அந்த ஆசனத்தை பயன்படுத்தி நல்லவற்றை ஏற்று,
தீயவைகளை அகற்றி, பலத்தைத் தருகிறது. ஆகவே
இயமம், நியமம், ஆசனம். அதற்குப் பிறகு
ஜீவசக்தி (Vital force) ஏற
வேண்டும். அதாவது பிராண சக்தி. பிராண சக்தி என்றால் பிராணாயாமம்.
பிராணாயாமம் என்று சொல்வது மூச்சு விடுதல். மூச்சை
ஒழுங்குப்படுத்துதல், எல்லோரும் மூச்சை விட்டுக் கொண்டுதானே
இருக்கிறோம்.
Wednesday, April 22, 2015
அதுதான் ஆசனம் - யோகாசனம் (ஞான சபை வகுப்புகள்)
அருளுரை தொடர்ச்சி
ஞான சபை வகுப்புகள்
முதலில் நீ தர்மத்தைக் கடைப்பிடிக்க
வேண்டும். தர்மத்தின் படி ஒழுக வேண்டும், இயமம்,
நியமம், இந்த இரண்டும் வந்துவிட்டால், மற்றவையெல்லாம் படிப்படியாக வந்துவிடும். இந்த இரண்டிலும் சீர்பட்டு
விட்டால், உலகாதயமான விஷயங்கள் சரியாகி விடும். அதிலே
நேர்த்தியான வாழ்க்கை வாழ்ந்து விடுவாய். முதலில் மன
நிம்மதி கிடைக்கும்.
யாருக்கு என்ன கொடுக்க வேண்டும். யார் நமக்கு என்ன தருவார்கள்
என்ற எண்ணங்களெல்லாம், போய்விடும்.
அப்படியானால், நான் ஒட்டாண்டியாகி விடுவேனா அப்படியில்லை,
உன் தேவைக்கு ஏற்ப, உழைப்புக்கேற்ப
ஊதியம் கிடைக்கும். அதிலிருந்து கிடைக்கின்ற வருமானம் போதுமானதாக
இல்லாவிட்டாலும், அதைப் போதுமானதாக மாற்றிக்கொள்ள முடியும்.
அப்போது உண்மையான நிம்மதி கிடைக்கிறது.
Saturday, March 28, 2015
அருளுரை - மனதை வெற்றிகொள்
Friday, March 27, 2015
அருளுரை - ஆன்மீகமும் பதஞ்சலி யோகமும்
Subscribe to:
Posts (Atom)

