Saturday, May 2, 2015

அருளுரை - பிராணாயாமம்-பிரத்யாகாரம்-தாரணை-தியானம்-சமாதி


 ஞான சபை வகுப்புகள் 


யோகவழியிலே சொல்லிக் கொண்டு வருகின்ற போது குறைந்தபட்சம் நாம் உடலில் கண் உறுப்பு எங்கேயிருக்கிறது என்று தெரிய வேண்டாமா.  காது எங்கே என்றால்? அது எனக்குத் தெரியுமே? அது தெரிகிறது அது செய்யும் தவறுகள் தெரியவில்லை. உடலில் பாயு என்று ஒன்று  இருக்கிறது.  அது என்ன பண்ணுகிறது என்று உனக்கு தெரியாது. ஆகவே எந்தெந்த கருவிகளால் லாபமும், நஷ்டமும் ஏற்படுகிறது என்பதை ஆசனத்தின் மூலம்  தெரிந்து கொண்டுவிட்டால், அந்த ஆசனத்தை பயன்படுத்தி நல்லவற்றை ஏற்று, தீயவைகளை அகற்றி, பலத்தைத் தருகிறது. ஆகவே இயமம், நியமம், ஆசனம். அதற்குப் பிறகு ஜீவசக்தி (Vital force) ஏற வேண்டும். அதாவது பிராண சக்தி. பிராண சக்தி என்றால் பிராணாயாமம்.  பிராணாயாமம் என்று சொல்வது மூச்சு விடுதல். மூச்சை ஒழுங்குப்படுத்துதல், எல்லோரும் மூச்சை விட்டுக் கொண்டுதானே இருக்கிறோம்.

 

ஆனால் ஒழுங்காக மூச்சு விடுகிறோமா என்று கண்காணிக்கத் தெரியுமாநம்முடைய உணர்வுகளுக்கு தக்க மாதிரி மூச்சு மாறிக் கொண்டிரு க்கின்றன. ஒவ்வொருவிதமான மூச்சு வந்து கொண்டிருக்கிறது. நாமே உணர்கிறோம். எடுத்துக்காட்டாக அலெக்சாண்டருக்கு எப்போது பிட்ஸ் (வலிப்பு) வரும் என்று தெரியும்.  அப்போது பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடுவான். அந்த உணர்வு பிட்ஸ் வருவதற்கு முன்பே உடலில் ஒரு விதமான மாற்றம் வரும். அதை வைத்துத் தெரிந்துகொண்டு விடலாம். ஆகவே உணர்விலிருக்கும் போதும், சிந்தனை செய்கின்ற போதும் அது உ ங்களுக்குத்தெரியும். பிராணாயாமத்தால்எல்லாவற்றிக்கும் ஆதாரமான உயிர்சக்தியினை அதிகப்படுத்தலாம். எந்த சக்தியும் வீணாகாது.

 

பிராணனை சரியான இடத்தில் வைத்துவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக
(Gain) பலன் கிடைத்துவிடும். பலன் வந்துவிட்டால் இவனுக்கும்  பலத்துக்கும் சம்பந்தமில்லை என்ற அளவிற்கு வந்துவிடும். நோய் என்பது எங்கேயிருக்கிறது என்று தெரியாமல் போய்விடும். 

நோய் என்பது  இரண்டு வகையில் வருகிறது. ஒன்று சூழ்நிலையால், மற்றொன்று கர்மாவினால். சூழ்நிலையால் வருகின்றதைச் சரிப்படுத்திக் கொள்ளலாம். ஆனால்  கர்மாவினால் வருவதை தீர்த்துக் கொள்ள முடியாது, ஆனால் தணித்துக் கொள்ள முடியும். பிராண வாயுவினால் நாளடைவில் பிராணாயாமத்தினால்  குண இயல்புகள் மாறி விடுகின்றன. ஒருவன் ஒழுங்காகப் பிராணாயாமம் செய்தால், எல்லா குணங்களும் நேர்பட்டு விடும். முக்குணங்கள் என்று  சொல்லக்கூடிய ராஜச, தாமச, சத்துவ ஆகிய குணங்களெல்லாம் பிராணாயாமத்தால், நேர் செய்யப் படுகிறது. எல்லாம் ஒருங்கிணைக்கப்படுகிறது.  


அடுத்து பிராணாயாமத்தில் பல உத்திகள், பல வழிகள் உன்னை தியானத்திற்குக் கொண்டு சொல்கிறது. பிராணாயாமம் என்பது (One of factor).


அடுத்து பிரத்தியாஹாரம் என்பது தியானம் செய்வதற்கு அடிப்படையான விஷயம். 

பிரத்தியாஹாரத்தினுள் உன்னுடைய தியானப்பொருளை  வைக்க வேண்டும். அது எதுவாக இருந்தாலும் வைத்துக் கொள்ளலாம் என்று பலமுறை உங்களுக்குச் சொல்லி விட்டேன். ஆகவே நீ தியானப்பொருளைத் தீர்மானித்து அதன்படி செய்து விட்டுப் பிறகு ஒழுங்குபடுத்தி நிறுத்துவது.

 

அடுத்து தாரணை, தியான சித்தி, சமாதி சித்தி, கைவல்ய சித்தி. மிக அழகாக நான்கு வார்த்தைகளிலே யோகத்தை முடித்து யோக முன்னேற்றத்தைச்  சொல்லி விட்டேன். அவ்வளவு எளிதல்ல. கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வர வேண்டும். அப்படி கிடைத்து விட்டால் பேரின்பத்தை அடைய  முடியும். அது அவர்களால் மட்டுமே உணரப்பட்டதாயிருக்கும். பலனை உணர்ந்தவர்களாக இருப்பார்கள். 


நீங்கள் சூத்திரங்களைப் படித்தால் மட்டும் போதாது   அதை வாழ்க்கையிலே எவ்வாறு கடைபிடிப்பது, எவ்வாறு நடப்பது, எவ்வாறு கைக்கொள்வது (Apply your life)  அறிந்தால் யோகத்திலே வெற்றி பெற்று விடலாம். அதுவே யோகத்திற்கு (Key) சாவியாக அமையும். யோகச் சித்தியும் வந்துவிடும்.


 ஏற்கனவே  சொன்ன பாடத்தைத்தான் சொல்கிறேன் ஒரு மனிதன் மனிதனாகப் பிறப்பதே பெரும் பாக்கியம். அதில் ஔவை சொன்னது போல் கூன், குருடுசெவிடு, பேடு நீக்கி பிறப்பது அரிது.  அந்த அளவு இறைவனால் நாம் புண்ணியத்தைப் பெற்றிருக்கிறோம். அதுமட்டுமல்ல அரிய மெய்யன்பர்களின் கூட்டு, ஒருவருக்கு ஒருவர் மிகுந்த பக்தியும், ஆழமான இறைநம்பிக்கையும், பத்துபேர் சேரும் போது ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து  கொள்ளப்படுவர். இதனை உணர்ந்து அந்த நேரத்தில் நல் உணர்வை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இறையை சிந்தியுங்கள், குருவை  வழிபடுங்கள். உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்.

 

மானிடப் பிறவியில்  கானகத்திலோ, வெறும் பாலைவனத்திலோ, பனி சூழ்ந்த மலைப்பகுதிகளிலோ, நாம் பிறக்கவில்லை. அங்கே நாம்  வாழவுமில்லை. நம்மை சமதட்பவெப்பச் சூழ்நிலையிலே பிறக்க வைத்திருக்கிறான் இறைவன். ஆகையால் நாம் பெரும் புண்ணியம் செய்திருக்க  வேண்டும். அமைதியான சூழ்நிலை கொண்ட நம் தென்னாடு ஒரு ஞானபூமி. நீ நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால், ஞானத்திற்கு அத்தனை வழிகளும்  இங்கிருந்தே கிடைக்கும். ஆனால் யாரும் அதைச் சிந்திக்கவில்லை. நாம் சிந்திக்காத வரை, நம் புகழை நாமே தெரிந்திருக்காத வரை, நம்முடைய  உலகிற்கும், நம்முடைய பகுதிக்கும் என்ன மரியாதையிருக்கிறது. ????? இங்கே என்ன சக்தியிருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்ளாத வரைஅதுவரைக்கும் உனக்கு அது கிடைக்காது.

 

உதாரணத்திற்கு மதுரை ஒரு கந்தக பூமி என்று. இவ்வாறு ஒவ்வொரு ஊரும் ஒரு தன்மையைப் பெற்றிருக்கிறது. இங்கு அடிப்படைத் தாதுக்கள் இ ருக்கிறது. பஞ்ச பூதங்களில் ஒன்றாக  இருக்கிறது. ஆகவே கவலைப்படவேண்டாம். எங்கிருந்தாலும் உன் உடல் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப  மாறிவிடும். எப்படி நாம் துன்பத்திலிருந்து கொண்டு சந்தோஷமாக நம்மை மாற்றிக் கொள்ளவில்லையா? அது போலத்தான். தானம் செய்தும், தனம்  பெற்றும் இந்தப் புண்ணிய பூமியில் சற்குரு பதஞ்சலியின் வாக்கும், ஆசியும் பெற்று, மேலும் மேலும் இந்தப் பிறவியில் ஒரு புண்ணியத்தை  அடைந்தோம். முக்குணங்களின் பரிமாணம், அல்லது பகிர்மானம் நியதியிலே, சத்வ குணங்கள் சேர்ந்து தேவ உடலை உண்டாக்கும் போது அதில்  சத்வ குணம் மேலோங்கியிருக்கும். இது எந்த அளவுக்கு இருந்தால் தேவ சாகரம் கிடைக்குமோ அது கிடைக்கும். ஒரு நந்திகேஸ்வரர் சாதாரண  மனிதராக இருந்து தேவ சாகரம் எடுத்தார் என்பதை   இனி வருங்காலங்களில் கைவல்ய பாதத்தில் நாம் பார்க்க இருக்கிறோம்.

 

ஆகவே நற்செயல்களைச் செய்து பிராரப்த கர்மாவை இந்தப் பிறவியிலே கழித்து, இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நமக்கு ஒவ்வொரு குணங்கள்  மேலெழும்புகின்ற போதும் நாம் பாவ, புண்ணியங்கள் செய்ய முற்படுகிறோம். இந்த உலகிலுள்ள எல்லா  ஜீவர்களுக்கும் முக்குணங்களின் கலப்பு இல்லாமல் பிறப்பதில்லை என்று கீதையில் கண்ணன் கூறுகிறார்.

இறையுணர்வை மையப்படுத்தி. புலனுணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். அறிவினால் அறிவினை இயக்கி, நல்லறிவு எதுவென அறிந்து, புத்தியி னால் அதைத் தீர்மானித்து, சித்தத்தில் பதிவு பெற்ற எண்ணிலடங்கா தேவையற்ற விஷயங்களை ஒழிப்பதோடு, மேலும் அது போன்ற சித்த விருத்திகளை வளரவொட்டாது, செய்யுங்கள். மேற்சொன்னவைகள் யாவும் இறைவனைச் சேரும் தவிப்பினாலும், வைராக்யம், (திடசிந்தை) பெற்றிருத்தலால் மட்டுமே சாத்தியப்படும். இதற்கு உன்னை தகுதியாக்கிக் கொள்ள தொடர் பயிற்சியினால் மட்டுமே அதனை அடையச் செய்ய முடியும்.

 

சற்குருவாகிய இறைவனின்  மனதில் நீ இடம் பிடிக்க வேண்டுமாயின் உன் தூய்மையான மனத்தை அவரிடம் நிபந்தனை, எதிர்பார்ப்பு இன்றி சரணடையச்செய். அப்போது  அவர் உன்னை அன்புடன் ஏற்றுக் கொண்டு, சாட்சியாக இருக்கும் உன் ஆன்மாவே நீ என்பதை நீயே அகவுணர்வால் அறிந்து விடும்படிஉன்னை இறைவனோடு சேர்த்து விடுவார். அப்போது தான் உன் பிறவி நோய் விலகி நீ வேறு இறைவன் வேறு என்றில்லாது இணைதல் என்ற யோகம்  கிட்டுகிறது.
 

இவற்றிற்கெல்லாம் சற்குரு ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் யோக சூத்திரம் மட்டுமே உதவும்.
 

முயற்சி செய்வாய் - வெற்றி பெறுவாய்
பயிற்சி செய்வாய் பலனடைவாய்
சத்குரு பாதம் போற்றி போற்றி
- திருச்சிற்றம்பலம்

 
ஆசிரியர்:
குருஜி. டி. எஸ். கிருஷ்ணன்
ஸ்வார்த்தம் சத் சங்கம்,
மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரம்,
பழங்காநத்தம், மதுரை.

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment