Tuesday, May 11, 2010

ஏன் வேண்டும் சைவம் ? எதனால் வேண்டாம் அசைவம் ?

--> விஞ்ஞான ரீதியாகவும் , மெய்ஞான ரீதியாகவும் (ஆன்மீக) சைவ உணவே சாலச் சிறந்தது என்று நிருபிக்கப் பட்டுள்ளது. ஏன்? எதனால் ? வேண்டும் சைவம், மற்றும் வேண்டாம் அசைவம் என்று ஆன்மீக அன்பர்களுக்கு விளக்கமளிப்பது இக்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும். அது ஸ்வார்த்தம் சத் சங்கத்தின் கடமையும் ஆகும்.


                                                         
சைவ உணவு உண்ணும் மனிதர்களின் உடல் அமைப்பும் தாவர உணவுகளை மட்டும் உண்ணும் விலங்குகளின் உடல் அமைப்பும் ஒன்றை ஒன்று ஒத்துப் போவதாகவே இருக்கின்றது.


ஆனால் அசைவ உணவினை உட்கொள்ளும் புலி, சிங்கம், நாய், பூனை மற்றும் சைவ உணவினை உட்கொள்ளும் விலங்குகளோடு சிறிதும் ஒத்துப் போகாமல் பல்வேறு மாறுபட்ட ஜீரண உறுப்புகள் மற்றும் உடல் அமைப்பினைக் கொண்டதாக உள்ளது.


மனிதன் மற்றும் சைவ உணவு உண்ணும் விலங்குகளின்
கடவாய்ப் பற்கள் தட்டையாக அரைத்து விழுங்குவதற்கு ஏற்றதாக உள்ளது.

உமிழ்நீர் உணவின் ருசிக்கு ஏற்றபடி குறைந்த அளவு சுரப்பதோடு அதில் கார சக்தி அதிகம் உள்ளதாகவும், ஜீரண சக்தியினை தரும் வகையில் பெரிய உமிழ் நீர் சுரப்பிகளைக் கொண்டதாகவும் உள்ளது.

உதடுகளால் நீரினை உறிஞ்சிக் குடிக்கும் வண்ணம் வாய் அமைப்பினை பெற்றிருக்கிறது.
உணவினை இரவிலோ அல்லது இருளிலோ பார்க்கும் தன்மை சைவ உணவு விரும்பிகளுக்கு இல்லை.

கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகங்கள், இரைப்பை, போன்ற வயிற்றின் உள்ளுறுப்புகள் சைவ உணவு விரும்பிகளுக்கு சிறியவைகளாகவும் உள்ளது.

மேலும் உணவுக் கழிவுகளை அதிக அளவில் வெளியேற்ற இயலாதவாறு உள்ளது.

இன்னும் கெட்டுபோன உணவுகள் பல சமயங்களில் விஷமாகவிடுவதால் மேற்படி உறுப்புகள் அந்த விஷத்தில் இருந்து தன்னையும் (தன் உறுப்புகளை), உடலையும் பாதுகாக்க முடியாமல் செயல்பாடுகளில் தோல்வி அடைகின்றன.

இந்த நிலையில் மருந்தின் உதவியாலோ அல்லது உண்ணா நோன்பினாலோ அந்த ஜீரணக் கருவிகள் சரி செய்யப்படுகின்றன.

மேலும் மனித உடலின் தன்னைத் தானே காத்துக்கொள்ளும் அமைப்பின் படி இயல்பாகவே உடல்கோளாறுகள் சரி செய்யப்படுகின்றன.

மேலும் ஜீரண மந்தம் வயிற்று உபாதைகள் வருகின்றபோது ஜீரண கருவிகளுக்கு வேலைப்பளு ஏற்படாமல் தவிர்க்க பசியற்ற நிலை உணவில் விருப்பமின்மை, ஆகியவைகளால் உணவு மறுப்பு செயல்கள் இயல்பாக நிகழ்கின்றன.

சைவ உணவு உட்கொள்கின்ற மனித மற்றும் விலங்கினங்களின் குடல் அவைகளின் உடல் நீளத்தைப் போல 10 மடங்கு அதிகமாக அமையப் பெற்றிருக்கிறது.

தாவர உணவினில் இருந்தும், பெறப்பட வேண்டிய வெவ்வேறு உயிர்ச் சத்துக்கள் , தாதுக்கள், உடலில் முழுமையாக சேரும் வண்ணம் அந்த உணவு உண்ட பிறகு நீண்ட நேரம் குடலில் தங்குகிறது.

அவ்வாறு தங்குவதால் தாவர உணவினை தவிர வேறு கடினமான மாமிச உணவை எடுத்துக் கொள்ளும்போது அந்த உணவு நீண்ட நேரம் குடலில் தங்குவதால் விஷத் தன்மை பெற்று அந்த விஷம் சிறிது சிறிதாக உடலில் சேர்வதால் பல வித நோய்களுக்கு மனிதன் ஆளாகின்றான்.

நீர்க் கழிவுகள் தொடர்பான வரையில் வியர்வை மூலம் வெளியேறும் வகையில் தோல் அமைப்பில் நுண்ணிய பல லட்சம் துளைகளின் மூலம் வெளியேற்றப் படுகின்றது.

இந்த அமைப்பு மாமிச பட்சிணிகளுக்கு இல்லை. அவைகள் உடலில் விஷ நீர் வெளியேற்றத்திற்கு தனது நாக்குகளை தொங்கப் போட்டு, வெளியே தொங்க வைத்து அதன் மூலம் வடிகால் நிகழ்வு நடைபெறுகின்றது.

இன்றைய விஞ்ஞான உலகின் மக்கள் தொகை , அதிக அளவு உணவின் அவசியம் மற்றும் குறைந்த கால உற்பத்தி என்ற நோக்கில் ரசாயன உரம் தாவரங்களுக்கு அளிப்பதால் அவற்றின் விஷத் தன்மை தாவர உணவின் மூலம் மனித உடலுக்கு கேடு தருகின்றவையாக இருக்கத்தான் செய்கிறது.



இதன் காரணமாக உரங்களின் விஷத் தன்மை மனித மற்றும் இதை உண்ணும் உயிர்கள் அனைத்தும் சிறிது சிறிதாக உடல் பாதிப்பை பெறுகின்றன.



இதன் தீர்வாக ரசாயன உரத்திலிருந்தும் விலகி இயற்கை உரத்திற்கு மாறுதலுக்கு உரிய சூழல்கள் வந்து கொண்டிருக்கின்றன.



இந்த நிலையில் நேரடியாகவே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அசைவ உணவினை பற்றிய ஒரு நீண்ட கட்டுரையினை பல்வேறு விளக்கங்களுடன் மனித நலம், நேயம் கருதி ஸ்வார்த்தம் சத் சங்கம் வெளியிட முனைகிறது.



இதனுடைய வரவேற்பு ஒரு விளம்பர செய்தியாக இல்லாமல் மனித உயிரிகளின் விலையினை உணர்வோர்கள் நிச்சயம் இதற்கு வரவேற்பு அளிப்பார்கள் அத்துடன் அந்த நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். பலன் பெறுவார்கள் என்ற நம்பிக்கை பெரிதும் எங்களுக்கு இருக்கின்றது.


                                                                                                             (தொடரும்)







5 comments:

  1. அய்யா, உங்களின் பார்வை நியாயமானது தான் ஆனால் இந்த கட்டுரையின் மறுமொழி விவாதங்கள் இன்னும் இந்து மதத்தின் பார்வையை சரியாக காட்டுகிறது என நினைக்கிறேன். அவற்றையும் உங்கள் ஆய்வுகளில் இணைத்துக் கொள்ளுங்கள்

    கார்யகர்த்த,
    விவேகனந்த கேந்திரம்

    ReplyDelete
  2. nalla visayangalai enge irunthum eduththu kollalaam nanbare



    thaMIL MUSLIM

    ReplyDelete
  3. every body knows very well that our origin is from MONKEY.Is monkey a vegetarian or nonvegetarian?

    ReplyDelete
  4. இது மனித ஆரோக்கியத்தைப் பற்றிய கட்டுரை. இங்கே குரங்குகளுக்காக கட்டுரை எழுதப் படவில்லை. மனித உடல் , மன, ஆன்ம நலன் மட்டுமே இங்கு முக்கியப் படுத்தபடுகிறது.

    ReplyDelete
  5. நாம் உண்ணும் உணவு நமது குணத்திலும் பிரதிபலிக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று படித்திருக்கிறேன்.
    அப்படிப் பார்த்தாலும் சைவமே சிறந்தது.
    பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் மாதிரி பிரச்சனைகள் வரும் போது உணவுக்காக வளர்க்கப் படும் மிருகங்களை பிடித்து கொல்ல வேண்டியதில்லை. மனிதர்கள் அந்த வகை உணவுகளை எத்தனை காலம் தவிர்ப்பது என்று தவிக்கவேண்டியதில்லை

    http://www.virutcham.com

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment