Friday, May 14, 2010

ஏன் வேண்டும் சைவம் ? எதனால் வேண்டாம் அசைவம் ? பகுதி - 2

அசைவ உணவு உண்ணும் பிராணிகளின் உடல் அமைப்பு

பற்கள் -

மாமிச உணவினை கிழித்து தின்னும் வகையில் அமைந்துள்ள நெடிய கூரிய கோரைப்பற்கள் , இதற்கு உதவி செய்யும் வகையில் அவைகளின் கைகால்களில் அமைந்துள்ள வலுவான கூரிய நகங்கள்.

உமிழ்நீர் -

அதிக அமில சக்தியினை கொண்டதாக கொண்டதாக இருப்பதோடு அதிகம் சுரப்பதாகவும் உள்ளது.நீர் அருந்துதல் -

நாக்குகளால் நக்கிக் குடிக்கும் வகையில் அமைந்துள்ள நீண்ட நாக்கு.கண்கள் -

தனது இரையினை இரவில் மற்றும் இருளிலும் தேடிப்பிடிக்கும் வசதி உடைய கூரிய பார்வை மற்றும் சக்தி பெற்றதாகயிருக்கிறது.

கல்லீரல், பித்தப்பை , சிறுநீரகங்கள், இரைப்பை ஆகிய முக்கிய உறுப்புகள் அளவில் பெரியதாகவும், கழிவு நீக்கும் பணி விரைவாகவும் , அதிகமாகவும் நடைபெறும் வண்ணம் அமையப் பெற்றது.


குடல் அமைப்பு -

மாமிச பட்சிணியின் உடல் நீளத்தைப் போல் மூன்று மடங்கு மட்டுமே நீளம் உடையதாக இருக்கிறது .

இதனால் அவைகள் உண்ணும் உணவுகள் கழிவுகள் வேகமாக விரைவாக வெளியேறி குடலில் தங்க வாய்ப்பில்லாமல் செய்கிறது.

இது போன்ற எத்தனையோ மாறுபட்ட குடல் அமைப்புகளை அசைவ உணவிற்கேன்றே அமையப் பெற்றிருத்தல் ஏன் என்ற வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் மனிதன் மாமிச உணவினை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்க உடல் அமைப்பினை பெற்றிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது.


பொதுவான தகவல்கள்

மனிதர்களை அவர்கள் நடமாட்டம் மற்றும் வெளித் தோற்றத்தில் அவர்களுக்கு இருக்கும் சாதாரண நோய் முதல் கடுமையான நோய்கள் வரை (தொற்று ஏற்படும் நோய்கள்) கண்டறிந்து கொள்ளலாம்.

ஆனால் மாமிசத்திற்கு பயன்படும் ஆடு, மாடு, கோழி, மற்றும் சில பறவையினங்கள் அவைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் , கல்லீரல் நோய், குடல் நோய், சுவாச நோய், பெரும்பான்மையான தொற்றுநோய்கள் ஆகியவைகளால் அவைகள் பாதிப்படைந்திருக்கின்றன என்பதை வெளிப்படையாகப் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் இல்லை.

ஆகவே மேற்குறித்தவைகளின் மாமிசங்களை புசிப்பதால் நமக்கு ஏற்படும் நோய் பற்றி சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை.

மேலும் அந்த விலங்கினங்களின் வெட்டப்பட்ட சதைப்பகுதி அழுகுதல் (கெட்டுப் போகுதல்) புறச் சூழலால் காற்று, நீர், ஆயுதம் , பயன்படுத்தும் கைகள், இடம் முதலியன மாசு உடையதாகவே 99 விழுக்காடு இருந்து வருகின்றது.

இதனால் நோய்த் தொற்று கிருமிகள், மாமிசத்தில் பரவி அதை உண்பவர்களை ( எவ்வளவு கொதிக்க வைத்தாலும் வேக வைத்தாலும் ) நீங்காத நிலையில் மனித உடல் நோய்க்கு காரணமாகிறது.


மிருகங்களை உணவிற்காக அவை கொல்லப் படும்போது அவற்றிற்கு இறப்பு பயம் ஏற்பட்டு வேதனையால் அவற்றின் உடலில் அட்ரினலின் என்ற விஷ நீர்ச்சுரப்பு அதிகம் சுரந்து மாமிசத்திலும், உடல் உறுப்புகளிலும் கலந்து விடுவதால் அந்த விஷம் அதை உண்பவர்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.

இதனால் ஏற்படும் நோய் (பாதிப்பு ) என்னென்ன என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் விஞ்ஞான உலகம் அதிகம் வெளியிடாதது ஏன் என்று தெரியவில்லை.

மாமிசத்திற்கு பயன்படும் மிருகங்களை அவற்றிற்கு ஏற்படும் மாமிசத்திற்கு பயன்படும் மிருகங்களை அவற்றிற்கு அளிக்கப்படும் நோய்த் தடுப்பு மருந்துகள் , எடை கூட்டுவதற்கு மருந்துகள் , எடை கூட்டுவதற்கு அளிக்கப் படும் மருந்துங்கள் விரைவு வளர்ச்சிக்காக கொடுக்கப் படும் மருந்துகள், என்னென்ன ?

அவைகள் மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பவையா இல்லையா என மனிதனுக்கு மருத்துவ அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் (குறிப்பாக) பெனிசிலீன் போன்ற நூற்றுக்கணக்கான வகை மருந்துகளால் ஏற்படும் தீய (விளைவுகள்) பற்றி மனித குலத்திற்கு தெரிவித்திருக்கின்றனரா ?


ஒரு வேலை அறிவித்திருந்தும் மக்கள் உணராமல் இருக்கின்றார்களா????????


உலகம் முழுவதும் உள்ள அசைவ உணவுப் பிரியர்களுக்கு இதற்கான விடையினை அளிக்க யார் முன்வருவார்கள்.

மேலும் ஆடு, மாடு மற்றும் கறிக் கோழிகளின் உடலில்
டைதில்ஸ்டில் பெஸ்ட்ரேல் ஆர்சேனிக் , 

சோடியம் நைட்ரேட்,

போன்ற மனித உடலுக்கு பெரும் சீர்கேட்டினை விளைவிக்கும் விஷங்கள் இருப்பதை உறுதி செய்து அவற்றை அசைவ உணவுப் பிரியர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு சம்மந்தப் பட்ட துறைகள், பொது அறிக்கை உலகளாவிய நிலையில் வெளியிடுவது மனித குலத்திற்கு செய்யும் பெரும் பேருதவியும் கடமையும் ஆகும்.


இன்றைய மனிதர்களின் எதிர்பாராத திடீரென வரும் உயிரிழப்பிற்கு காரணமான ( இரத்தக் கொதிப்பு நோய்) இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் ( LD ) அளவு அதிகமாதலே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொழுப்புச் சத்து அதிகம் காரணாமாக
இரத்தக் குழாய் அடைப்பு,
இதயத்தின் செயல்பாடு முடக்கம்,
மூளை இரத்தக் குழாய்கள் அடைப்பினால் பாதிப்பு,

இவற்றால் வரும் ஏனைய அனைத்து முக்கிய உறுப்புகளின் செயலிழப்பு முன்னறிவிப்பின்றி திடீரென மனித உயிர்களை குடிக்கின்றன.

அந்த வகையில் கொழுப்பில்லாத உணவு அல்லது கெட்ட கொழுப்பினை குறைக்கும் உணவு அவசியம் ஆகிறது.இதற்கு மாமிச உணவு எந்த வகையிலும் உதவிகரமாக இல்லாமல் எதிர்மறையான பலன்களையே தருவதாக இருப்பது அனைவரும் ( மருத்துவர் உட்பட) அறிந்ததே.

அதிக கொழுப்பைத் தரும் அசைவ அசைவ உணவு மற்றும் மசாலாப் பொருட்கள் பொறித்த உணவு என்று நீண்ட பட்டியலை நாம் நன்கு உணர்ந்திருந்தும் அந்த எச்சரிக்கைகளை உணராது சுவைக்கு எனவும் , உடல் மிகைக்கு எனவும் அதிக கொழுப்பு தருகின்ற உணவுகளையே உட்கொள்கின்றோம்.

இதனால் மேலே கூறிய மாரடைப்பு, போன்ற உயிர்க் கொல்லி நோய்கள் சிறுவயதினரையும் விட்டு வைக்காமல் மரணத்தை அளிப்பதாக இருக்கிறது.

இந்த மாரடைப்பு மற்றும் கூறிய அறிவுக் குறைவு எதையும் தீர்மானிக்க முடியாத பொறுமையற்ற பரபரப்பான , பயம் மற்றும் சோர்வு தருகின்ற நிலைக்கு தள்ளக் கூடிய வகைவகையான வாழ்வின் நற்பண்புகள் அற்ற துன்பியல் முடிவுகளை தரக் கூடியதுமான அசைவ உணவுகளை நாம் ஏன் ஒதுக்கக் கூடாது அல்லது தவிர்க்கக் கூடாது.?

நம் மீது நமக்கு , சுருங்கக் கூறினால் நம் வாழ் நாட்களை நாமே குறைத்துக் கொள்ளுதல் நம் மீது நமக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.

இங்கே   இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சைவ, அசைவ உணவுகளின் சத்துக்களின் விவரப் பட்டியல் இணைக்கப் பட்டுள்ளது. வாசககர்கள்பயன்படுத்திக்கொள்ளவும்.

பின்குறிப்பு - தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மற்றும் சந்தேகங்களை pathanjaliyogakendhram@gmail .com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

No comments:

Post a Comment

There was an error in this gadget

TRANSLATE

Welcome To Pathanjali Website