Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Sunday, February 8, 2026

ஓம்: அழியாத பேரொலியும்... எமதர்மன் உபதேசமும்

 

   கட உபநிஷத்தில், மரணத்தின் ரகசியங்களை அறியச் சென்ற நசிகேதனுக்கு எமதர்ம ராஜா ஒரு உன்னதமான உண்மையை உபதேசிக்கிறார். உலகில் உள்ள அனைத்து வேதங்களும், தவசிகளும் எதை அடையும் இலக்கோடு பயணிக்கிறார்களோ, அந்த உன்னத இலக்கே "ஓம்" என்னும் மந்திரம்.

                                                                 


        

Tuesday, February 3, 2026

சத்குருவின் அருளும் ஆன்ம ஞானப் பாதையும்

இறைவன் மீதும் குருவின் மீதும் நாம் வைத்திருக்கும் பக்தி எப்போது ஆட்டம் காணுகிறது? குருவின் உண்மையான நோக்கம் என்ன? ஒரு ஆன்ம சாதகன் எதை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதை விளக்கும் கட்டுரை இது.

                                          



1. எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் :-

 

      ஒரு மனிதன் தனது லட்சியம், எதிர்காலம் மற்றும் விருப்பங்கள் குறித்து அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்கிறான். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது, அவனுள் எதிர்மறை சிந்தனைகள் தலைதூக்குகின்றன. இது அவன் இறைவன் மீது வைத்திருக்கும் பக்தியைச் சற்று அசைத்துப் பார்க்கிறது. "வணங்கினால் இன்பம் கிடைக்கும்" என்று தவறாகப் போதிக்கப்பட்டதே இந்தத் தடுமாற்றத்திற்குக் காரணம்.

 

2. இறைவனே மேலான இன்பம்

      இறைவனை வணங்குவது உலகியல் இன்பங்களைப் பெறுவதற்காக அல்ல; மாறாக, அடைய வேண்டிய இன்பங்களுள் எல்லாம் மேலான இன்பமே இறைவன்தான். அவனை அடைந்த பிறகு, இவ்வுலகில் அடைவதற்கு வேறொன்றும் இல்லை. இந்த உலகத்தையும், இந்தப் பிறவியையும் இறைவனை அறிவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, உடைமைகளைப் பாதுகாக்கும் காவலாளியாக இறைவனைக் கருதக்கூடாது.

 

3. உலகியல் பார்வையும் அறியாமையும்

      "இவ்வளவு காலம் குருவை வணங்கியும் உனக்கு ஏன் பொருளாதார முன்னேற்றம் ஏற்படவில்லை?" என்று கேட்பது அறியாமையின் வெளிப்பாடு. குருவை அடைவது என்பது போக விஷயங்களில் (உலகியல் இன்பங்களில்) உச்சத்தைத் தொடுவதற்காக அல்ல; அவரது திருவடிகளைப் பின்பற்றி ஆத்ம ஞானம் பெறுவதற்காகவே என்பதைச் சீடர்கள் அறிவார்கள்.

 

 

Friday, February 9, 2024

இறைவன், குரு , சாஸ்திரம் - அது தான் பதஞ்ஜலி யோகம்

    தனது நோக்கம் தனது விருப்பம் தனது இலக்கு தனது எதிர்காலம்  இவற்றையெல்லாம் குறித்து ஒரு மனிதனுக்கு எதிர்மறை சிந்தனைகள் அதிகமாகும் போதும்...

 

Saturday, February 5, 2022

இயற்கையிலும் இயல்பிலும் இறைவனை நேசி (TSK)

  குருவின் உபதேசங்கள் 

                

   இயற்கை தான் இறைவன் .இறைவன் தான் இயற்கை .ஆகவே இயற்கை சக்திகளுடைய முழு ஞானத்தை பெறுவதன் மூலமாக தான் நாம் இறைவனை அடைய முடியும்....

பிராணன்

 

 

Friday, April 26, 2019

நமது புதிய இணையதளம் (https://www.voiceofpathanjali.com/)

அன்புள்ளம் கொண்ட ஆன்மீக நெஞ்சங்களுக்கு,
                                                                        தமிழ் கூறும் நல்லுலகில் தனது ஆன்மீக மற்றும் யோகச் சிந்தனைகளால் ஆன்மீக உலகிற்கு தொண்டாற்றிக் கொண்டிருக்கும் யோக ஆச்சாரியார்  திரு. டி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் 

Saturday, February 27, 2016

மனம் - உடல் - உயிர்ப்பு ??????????????????????

         மனித வாழ்க்கை என்பது மனிதனாகப் பிறந்த பிறகு அவனுக்கு ஏற்படுகின்றது. அதற்கு முன்பாக அது எவ்வாறு தோன்ற முடியும்? மனிதனாகப் பிறந்த பிறகு தானே ஒரு ஞான வாழ்க்கை என்பது ஏற்படும். அவன் பிறப்பதற்கு முன்னால் வேறு ஒரு வாழ்க்கையிலே அவன் இருந்திருக் கிறான். அந்த வாழ்க்கையிலே அவன் தனக்காக என்னென்ன செய்திருக்கிறான் என்பது அந்த சூட்சம வடிவிலே இருக்கின்ற அவர்களுக்கு மட்டுமே தெரியும். 

Thursday, November 20, 2014

தர்க்கம் -விதர்க்கம்-குதர்க்கம் - பகுத்தறிவு என்பது யாது ?



 சீடர்திரு.வீரராகவன்எழுப்பியகேள்வி

கேள்வி எண் 6- 
     தர்க்கம் -விதர்க்கம்-குதர்க்கம் - பகுத்தறிவு என்பது யாது? சூத்திரம் இதுபற்றி என்ன கூறுகிறது?  


Tuesday, July 31, 2012

அரங்கனின் ஆலயங்கள் - 108 பகுதி (15 )


75. அட்டபுயகரம்

( காஞ்சிபுரம் )


பெருமாள்                                          :    ஆதிகேசவப்பெருமாள் – சக்ரதரன் 

                                                            :   நின்றதிருக்கோலம் , மேற்கே திருமுகமண்டலம் 

தாயார்                                               :   அலர்மேல்மங்கை – பத்மாஸனி

விமானம்                                           :   சக்ராக்ருதி விமானம் 

தீர்த்தம்                                              :   கஜேந்திரபுஷ்கரிணி

ப்ரத்யக்ஷம்                                        :  கஜேந்திரன் 

மங்களாசாசனம்                                :   திருமங்கையாழ்வார் , பேயாழ்வார்
                                                             (12  பாசுரங்கள் )

காஞ்சிபுரத்தில் திவ்யதேசம் 74 லிருந்து மேற்கே 2 கி.மி. தொலைவில் உள்ளது.


Tuesday, February 9, 2010

மஹா சிவராத்திரி

சிவராத்திரி  

சிவராத்திரி என்பது எம்பெருமான் சிவனுக்கு உரியது.
நவராத்திரி என்பது அம்பாளுக்கு உரியது.
இவ்விரண்டு பண்டிகைகளுமே இரவில் கொண்டாடப்படுபவைகளாகும்.


மஹா சிவராத்திரி
                                    மாசி மாதம் கிருஷ்ணபக்ஷம் -சதுர்த்தசி திதி , திருவோண நட்சத்திரத்தில் வருவதாகும்.

ஐந்து வகை சிவராத்திரிகள்


  1. நித்ய  சிவராத்திரி
  2. பக்ஷ சிவராத்திரி
  3. மாத சிவராத்திரி
  4. யோக சிவராத்திரி
  5. மஹா சிவராத்திரி

1 ) நித்ய சிவராத்திரி என்பது
 
                           ஒவ்வொரு சதுர்த்தசியிலும் சிவபூஜை செய்வது வருடத்தில் இருபத்தி நான்கு முறை சிவபூஜை செய்வது ஆகும்.


2) பக்ஷ  சிவராத்திரி என்பது
                                     தை மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தில் பிரதமை முதல் பதிமூன்று நாட்கள்  ஒரு வேளை (தினமும்) பூஜித்து , சதுர்த்தசியில் பூஜை செய்து முடிப்பது ஆகும்.

3 ) மாத சிவராத்திரி என்பது  
மாசி மாதத்தில்        
   கிருஷ்ண சதுர்த்தசி (14  வது  திதி)யன்றும் 

பங்குனி மாதத்தில்   
    முதலில் வரும் திருதியை  (3   வது  திதி)யன்றும்  

சித்திரை மாதத்தில்    
   கிருஷ்ண அஷ்டமி (8  வது  திதி)யன்றும்

 வைகாசி மாதத்தில் 
   முதலில் வரும் அஷ்டமி  (8  வது  திதி)யன்றும்  

ஆனி    மாதத்தில்      
   சுக்ல சதுர்த்தசி (4  வது  திதி)யன்றும் 

ஆடி  மாதத்தில்          
   கிருஷ்ண பஞ்சமி  (5  வது  திதி)யன்றும்

ஆவணி  மாதத்தில்      
  சுக்ல அஷ்டமி (8  வது  திதி)யன்றும்

 புரட்டாசி மாதத்தில்
   முதல் திரயோதசி (13  வது  திதி)யன்றும்

 ஐப்பசி  மாதத்தில்      
  சுக்ல துவாதசி   (12  வது  திதி)யன்றும்
  
கார்த்திகை   மாதத்தில்  
  முதல் சப்தமியும், அஷ்டமியும் ( 7 வது 8 வது திதி)களில்

 மார்கழி மாதத்தில்   
 இரண்டு பக்ஷ -கிருஷ்ண , சுக்ல சதுர்தசிகளில் (14  வது  திதி) களில் 

தை மாதத்தில்  
  சுக்ல திருதியை  (3   வது  திதி) யன்றும் சிவ பூஜை செய்வதாகும்.





4 ) யோக சிவராத்திரி என்பது
                                                   சோம வாரத்தன்று அறுபது நாழிகை அமாவாசை இருந்தால் அன்றைய தினம் சிவபூஜை செய்வதாகும். 

5) மஹாசிவராத்திரி என்பது

                                                மாசி மாதத்தில்  கிருஷ்ண சதுர்த்தசியன்று சிவபூஜை செய்வதாகும்.

விரத வழிபாடு

சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நித்ய அனுஷ்டானங்களுடன் திருநீறு, ருத்ராக்ஷமணிந்து  ' நமசிவாய ' நாமங்கள் சொல்லியபடியே சிவாலயதுட் சென்று சிவ சிந்தையுடன் இருப்பது.
          நான்கு கால பூஜைகளிலும் கலந்து கொண்டு பூஜா கைங்கர்யங்கள் செய்ய வேண்டும். வில்வதளம், அபிஷேகப் பொருட்கள் நெய், தயிர், பால், தேன், கரும்பு , இளநீர், சந்தனம் முதலிய பொருட்களை கொடுத்தல் வேண்டும்.
         அன்று முழு உபவாஸம் (விரதம்) இருத்தல் வேண்டும். வயது, உடல் நிலை கருதி இயலாதவர்கள் சத்துமாவை வெல்லத்துடன் கலந்து ஒரு வேளை உட்கொண்டு இருக்கலாம்.


         4  ஆம் கால பூஜை மறுநாள் காலை பொழுது புலர்ந்து விடுமாதலால் , உடன் சென்று நீராடி ஆலயம் சென்று இறைவனை தரிசித்து , சூரியன் உதித்து 6  நாழிகைக்கு பாராயணம் செய்ய வேண்டும்.  இவ்விதம் செய்வோர் சகல கீர்திகளும் செளபாக்யங்களையும்  பெறுவர்.

(குறிப்பு: மேலும் விபரங்கள் அறிய சிவாச்சாரியார்களை பெரியவர்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம். )
  





சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்

ந - நகாரம்


நாகேந்திர ஹராய திரிலோச்சனாய ,

பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய ,

நித்யாய சுத்தாய திகம்பராய , 

தஸ்மை ' நகாராய' நம; சிவாய !



ம  - மகாரம்
மந்தாகினீ  சலீல சந்தன சர்சிதாய


நந்தீஸ்வராய ப்ரமத நாத மகேஸ்வராய ,

மனதார புஷ்பா பஹீ , புஷ்ப ஸீபூஜிதாய 


தஸ்மை 'மகாராய' நம; சிவாய !




சி  - சிகாரம்

சிவாய கெளரீ வதனாப்ஜ வ்ருத்த

சூர்யாய தக்ஷாத்வர நாகாய 


ஸ்ரீ நீலகண்டாய வருஷத் வஜாய 


  தஸ்மை 'சிகாராய' நம; சிவாய !








வ   - வகாரம்

வசிஷ்ட கும்போத்பவ கெளத மாய ,

முனீந்திர தேவார்ச்சித ஸேகராய ,

சந்த்ரார்க வைஸ்வானர லோசனாய,

தஸ்மை 'வகாராய' நம; சிவாய !





ய   - யகாரம்

யக்ஷ்ஸ் வரூபாய ஜடாத ராய ,

பிநாக ஹஸ்தாய  ஸநாத னாய,

திவ்யாய தேவாய திகம்ப ராய,

தஸ்மை 'யகாராய' நம; சிவாய !



மஹா சிவராத்திரி விரதம் காண இருக்கும் அன்பர்கள் அனைவருக்கும் இறைவன் அருள் உரித்தாகுவதாக .



அன்பே சிவம்


நன்றி

Sunday, August 16, 2009

முக்குண இயல்புகள்

சத்துவ குணவியல்பு தேவ குணம்:
அன்பு,
அமைதி,
அறநெறி,
நன்மைகளையே நோக்கும் தன்மை,
நெறி பிறழாமை ,
தனக்கென வாழாமை , உயரிய நோக்கம்,
உள்ளத்தூய்மை, நல்லோர் சேர்க்கை,
பொது நிலையாமை தத்துவம் பற்றி உணர்ந்து உலகபந்தங்களில் ஒட்டாது விலகியே நிற்றல்,

பற்று,
பயம்,
கவலை,
எதிர்பார்த்தல் எதுவும் அற்ற நிலை, போன்ற உயர் குணங்கள் .  

தமோ குணவியல்பு 
  மிருக குணம்
காமம், வெகுளி, மயக்கம், இச்சை, உலக பொருட்களிலும் சுகங்களிலும் தணியாத ஆசை கொண்டவர்கள்.

தன்னலம் ,பெருமை, பிறர் குற்றம் பேசல், யாவையும் தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் இறங்குபவர்கள் ,

தர்மம், நியாயம் , நீதி, உண்மை மற்றும் நல்லறங்களை நடத்தாது . இவையனைத்திற்கும் புறம்பாக எதிராகச் செயல்படுவார்கள். ரஜோ குணவியல்பு : ஆளுமைத் தன்மை,

அடக்குதல்,

அடங்காமை,

மேலாண்மை,

சுகபோகம்நாடல்,

இரக்கமில்லா அரக்க குணம்,

தோல்விபயம்,

எளிமை விரும்பாமை,

எளியோரை மதியாமை,

படாடோப வாழ்க்கை ,

வஞ்சகம், நெஞ்சிலொன்றும் வாக்கிலொன்றுமாய் உரைப்பவர்கள்,

மிக உற்றவர்களிடம் கூட உண்மை உரைக்காதவர்கள்.

தற்புகழ்ச்சி விரும்பிகள்,

பிறர் தலைமை விரும்பாதவர்கள்.  

முக்குணங்களும் அதன் இயல்புகளும் அதற்கேற்ற செயல்பாடுகளும் அனைத்து மனித ஜீவிகளிடம் கலந்தே காணப்படுகின்றன.

தேவர்களும் இதற்கு விலக்கானவர்கள் அல்ல .


சத்துவ , ரஜோ, தமோ, இம்மூன்றின் கலப்பின் விகிதத்தின் (விழுக்காடு) பொறுத்தே அவர்களுடைய குணாதிசயங்கள் அவர்களிடம் பதியப் பெறுகின்றன. முக்குணங்களில் எக்குணம் மேலோங்கி இருக்கிறதோ (விழுக்காடு அதிகப்பட்டிருக்கிறதோ ) அதுவே அவர்களின் முக்கிய செயல்பாடுகளை நிர்ணயிக்கின்றன.

தீமை அளிக்க வல்ல , பாவங்களைப் புரிய வைக்கும் ரஜோ ,தமோ குணங்களின்றும் சத்துவ குணம் மேலோங்கி சத் புருஷர்களாக நம்மை மாற்றவல்ல சக்தி வழி அல்லது முறை தான் என்ன?

யோகத்தினால் மட்டுமே அது இயலுமாயின் அதைப் பின்பற்றி மேலேறுவதற்கு சத் குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் 196 சூத்திரங்களின் கூறப்பட்டுள்ளவைகளை எளிதாக அறிந்து கொள்ளவும், அறிந்த பின் பயிற்சி மேற்கொண்டு வெற்றியடையவும் இத்தொடர் உதவுமாயின் அதுவே இந்த அடியவனின் (குருவருளால், திருவருளால்) அளித்த பெரும்பேறாகும் என்று மகிழ்வேன்.  

வாழ்க அனைத்து உயிரினங்களும் , வெல்க , மீழ்க இம்மானுடம்.

ஓரளவேனும் சத்துவம் பொருந்தியவர்கள் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் அவர்கள் நிச்சயமாக ஆன்மீகத்துட் புகுந்து அறவழி மேற்கொள்வார்கள். மேலும் அவர்கள் எவ்வளவு தரமாறியவர்களாய், தடம்மாறியவர்களாய் இருந்திருப்பினும் தன்னை மாற்றிக்கொள்ள திருந்தி விட வாய்ப்பு கிட்டும்போது அதைத் தவற விடாமல் பற்றிக்கொண்டும் , உலகபற்றுகளை விலக்கிவிடவும் நிச்சயம் வாய்ப்பு பெறுவார்கள்.


தமோ, ரஜோ, மிகுந்தவர்கள் ஊழின் காரணமாக ஆன்மீக உணர்வு அவர்களை அழைக்கவில்லை எனினும் ஏதாவது ஒன்றிரண்டு நற்பண்புகளையாவது தவறாது கடைபிடித்து வந்திருப்பார்களேயானால் எதிர்பாராது ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டு பின் எதிர்மறைத் தாவல் செய்து ஞானமடைவார்கள்.

பின் இவர்கள் ஒருபோதும் முந்தைய தீய வழிகளை நாடாமல் நல் வழியில் நின்று நிலைத்திருப்பார்கள். இது போன்ற மாற்றிடும் சந்தர்ப்பங்கள் மனித குலத்திற்கு மட்டுமே சாத்தியமுள்ளதாக இருக்கின்றன எனில். மனிதன் ஒவ்வொருவனும் தன்னுள்ளே இறைவனின் ஒரு சிறு கூறு பெற்றவனாக இருப்பதே ஆகும். மேலும் எந்த ஒரு மனிதனும் சிறுகச் சிறுக , மாறி மாறி என்றாவது ஒரு பிறவியில் முக்தியடையும் பேறைக் கொண்டிருப்பார்கள். என்பதே சித்தர்களின் வாக்கு.

அவர்களின் பிறவி எண்ணிக்கை கூடலாமே தவிர, ஞானம் பெறும் வரை அவர்களுக்கு வாய்ப்பு கிட்டிக்கொண்டேயிருக்க ஞானியர்கள் அவர்களை விடாது தொடர்ந்து வழிபடுத்துவதே பணியாகக் கொண்டு கருணை செய்கிறார்கள் என்பதும் அவர்கள் திருவாக்காகும்.  
இயமம், நியமம், ஏற்போம், 

ஆசனம் செய்வோம்,

பிராணயாமம் கற்போம், 

பிரத்யாகாரம் பரிந்துனர்வோம்.
தாரணை , தியானம், எனும் உறு தவத்தில் ஒன்றி நிலைப்போம். 

சமாதி நிலை என்ற ஆன்ம உணர்வால் சூட்சமம் பெற்று சாதிப்போம்.

விதியை நாமே உற்பத்தி செய்தோம், விதியைப் பரவீதியில் வீசுவோம்.  

இகத்தில் பரத்தைக் கண்டு , இறையினை அறிந்து இறையில் கலப்போம். 

நித்தியம் நித்தியம் நிச்சயம் நிச்சயம்

"சத்குரு பாதம் போற்றி போற்றி "

Saturday, July 18, 2009

நிறங்களில் குணங்கள்

ஒவ்வொரு நிறங்களும் ஒவ்வொரு குணங்களினை கொண்டிருப்பதாக சான்றோர்கள் கூறுகின்றனர். பச்சை = வலிமை, உண்மை நீலம் = அன்பு, சுகம், பரந்த உணர்வு மஞ்சள் = தெய்வீகம், ஞானம் , மங்களம் பழுப்பு = மர்மத்தன்மை ஊதா = குழப்பம், சூழ்ச்சி, தாக்குதல் வெள்ளை = உயர்வு, உயர்நிலை, கள்ளமற்ற தன்மை

எட்டு காலங்கள்

எட்டு காலங்கள் விடியலுக்கு முன் 3 மணி முதல் 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம்.

அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை தேவர்கள் காலம்.

முற்பகல் 9 மணி முதல் 12 மணிவரை ரிஷிகளின் காலம்.

நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை பிதுர்க்களின் காலம்.

பிற்பகல் 3 மணி முதல் 6 மணிவரை சந்தியா காலம்.

முன் இரவு 6 மணி முதல் 9 வரை பூத காலம். நடு இரவு 9 மணி முதல் 12 மணி வரை பிரேத காலம்.

பின் இரவு 12 மணி முதல் 3 மணிவரை ராக்ஷச காலம் 

 இதில் பிரம்ம முகூர்த்த காலத்தில் யாவற்று சுபகாரியங்களும் திதி,நக்ஷத்ரம் ,சரியில்லாவிட்டாலும் செய்யலாம்.

உதய காலம் தேவர்களுடையதால் வேளையும், நக்ஷத்ரமும் உகந்ததாய் இருக்க வேண்டும்.

ரிஷிகளின் காலத்தில் நற்காரியங்கள் செய்ய நல்ல ஓரை,திதி, நக்ஷத்ரம் , வேளை அடுத்தபடியாகவும், தேர்ந்து செய்ய வேண்டும்.

பிதுர்க்களின் காலத்தில் திதியினை பிரதானமாகவும் , நக்ஷத்ரத்தை அடுத்தபடியாகவும் தேர்வு செய்ய வேண்டும்.

சந்தியா காலத்தில் மனித விருப்பங்கள், கேளிக்கைகள் போன்ற எக்காரியமும் செய்யாது, இறை வழிபாட்டிற்கும்,ஜெபம், தவம், போன்றவற்றை மட்டுமே செய்ய வேண்டும்.

நடுப்பகல் சரியாக 12 மணி அல்லது , நடு இரவு சரியாக 12 மணியில் எந்தக் காரியத்தையும் துவங்கவோ , முடிக்கவோ கூடாது.

TRANSLATE

Click to go to top
Click to comment