இந்த கட்டுரையை நான்
சிந்திக்கும்போதும் எழுதும் போதும் என் மனதில் கவலை,
மகிழ்ச்சி, வேகம், கோபம் என நவரசங்கள்
அனைத்தும் ஒருங்கே கலந்த ஒரு குறுகுறுப்பு தென்படுகிறது என்பதை நான் உணர்கிறேன்...
ஏனென்றால் காலம் காலமாக நாமும் குருநாதரும் பேசிக் கொண்டிருந்த இந்த சித்தத்தை பற்றிய விஷயங்கள் என்பது இப்போதும் புதிதாக இருக்கின்றது என்பதுதான்...
ஏனென்றால் காலம் காலமாக நாமும் குருநாதரும் பேசிக் கொண்டிருந்த இந்த சித்தத்தை பற்றிய விஷயங்கள் என்பது இப்போதும் புதிதாக இருக்கின்றது என்பதுதான்...
அவர் அடிக்கடி சொல்வார்.. ஒவ்வொரு நாளும் புதியது ஒவ்வொரு நிமிடமும் புதியது ஒவ்வொரு காலமும் புதியது என்பார்...
அதைப்போலவே நம்முடைய சிந்தனைகள் எப்போதும் பழமையானதாக இருந்தாலும் அவை புதிய எண்ணங்களை நோக்கியே பாய்கின்ற வகையில் அமைந்துள்ளன...
இந்த விதியானது சித்தத்தின் வடிவில் ,சித்தத்தின் வழியில் எல்லோருக்கும் ஒரு இலக்கை வைத்து விடுகிறது. இலக்கின்றி சும்மா இருப்பது என்பது இந்த சித்தத்திற்கு பழக்கமாக இல்லை என்ற போதும் விதி அதை விடுவதில்லை என்பதுதான் உண்மை...
ஒவ்வொருவருக்கும் ஒரு வலுவான எண்ணத்தை தந்து அந்த எண்ணத்தை நோக்கி நமது வாழ்க்கை அமைத்துக் கொள்ளும்படி விதி வழி வகை செய்கிறது...
ஆம்!
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு ஆன்மாவுக்கும் தனித்தனி லட்சியங்கள் உள்ளன. தனித்தனி கொள்கை கோட்பாடுகள் உள்ளன. இவை எல்லாம் அவர்களுடைய புரிந்துணர்வின் அடிப்படையிலே அமைகின்றன என்றாலும்...
தன்னுடைய குற்றத்தை பார்க்காமல் தன்னுடைய சோம்பலை முறிக்காமல் பிறருக்கு அறிவுரை சொல்வதிலே எப்போதும் தன்முனைப்பு காட்டும் இந்த மனதின் தன்மையை குரு ஒருவரால் மட்டுமே அடையாளம் கண்டு சீர் செய்ய முடியும் அல்லது சீர் செய்வதற்கு உதவ முடியும் என்ற வகையில்...
இன்று நமக்குள்ளே பெரிதாக இருக்கின்ற, அதாவது நமக்குள்ளே என்று சொல்கிற போது யார் யாரெல்லாம் அந்த அந்த ஆன்மாவை அறிதலை தன்னை அறிதலை, பிறவியில்லா பெருநிலைக்காக பாடுபடுவதை லட்சியமாகக் கொண்டிருக்கிறாரோ அவர்களை எல்லாம் ஒரே உள்ளமாக கருதுகின்ற நமது ஆச்சாரியாரின் வழியிலே...
இலக்கின் மீதான பிடிவாதத்திலிருந்து மனதை சற்று தளர வைத்து உண்மையில் இலக்கு என்பது நிகழ்காலம் அதை அடையும் வழி தான் பதஞ்சலி யோகம் என்று மீண்டும் மீண்டும் உணர வைக்கின்ற வழியை நமது ஆன்ம அறிவு மனதுக்கு உபதேசமாக செய்து கொண்டிருந்த போதும்...
எண்ணங்களில் விழுவதும் பிறகு நல்ல சிந்தனைகளில் எழுவதுமாக இருக்கக்கூடிய நமது வாழ்க்கை என்பது...
அது கொண்டிருக்கின்ற உயர்வான இலக்கு மற்றும் அது வகுத்துக் கொண்ட பாதை என்பதும் நமக்கு குருநாதர் கொடுத்த பரிசாகவே தென்படுகிறது...
இல்லையென்றால் இந்தப் பிறவி என்ற ஒரு நீண்ட நெடும் பயணத்தில் களைப்பின்றி, அலுப்பின்றி எடுத்துக் கொண்ட காரியத்தை தினமும் புதியதாக பார்ப்பது போல நம்மால் செயல்பட முடியுமா என்றால் அவர்களுடைய ஆசிர்வாதம் இல்லை என்றால் அது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது .................
வெகு தொலைவில் இருந்தாலும் ஆன்மா என்ற லட்சியத்தை தன்னுடைய இலக்கமாகக் கொண்டவர்கள் அனைவரும் நமக்கு உறவுகளே...
மிக அருகாமையில் இருந்தாலும் கொள்கை கோட்பாடுகளில் ஆன்மீக அளவில் நமது உள்ளத்தை புரிந்து கொள்ளாதவர்கள் என்பவர்கள் நமக்கு எப்போதும் ஒரு சக பயணியை போன்றவர்களே என்ற புரிதலில்...
அன்புச் சகோதரர் சொல்வது போல ஒரு ஐந்து பத்து கிடைக்கும் என்றால் பரவாயில்லை என்று நீங்கள் இதை நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார் ...
அவரே எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு எண்ணில் அடங்காத ஆன்மலாபம் என்பது குரு காட்டிய வழியில் செல்வதால் கிடைக்கக்கூடியது. அது தருகின்ற மனத்தெளிவும் மன மகிழ்வும் என்பதை மதிப்பிடுவதற்கு டாலர்களில் கூட சாத்தியம் இல்லை என்பது தான் அடியேனது கூற்று...
ஆன்ம விடுதலை நமது பிறப்புரிமை அதுதான் நமது பிறப்பின் கடமையும் கூட என்று லட்சிய பாதையை வகுத்துக் கொடுத்த யோக ஆச்சாரியாரின் வழியிலே...
நாமெல்லாம் ஆன்ம முன்னேற்றம் பெற வேண்டும். ஆன்ம விடுதலை அடைய வேண்டும் ஆத்ம ஞானத்தை அறிந்து அதை போற்ற வேண்டும் என்று அவருடைய கனவு ஆசை மெய் பட வேண்டும்... நம்முடைய பிறவியின் லட்சியமாக இருக்கும் அதற்கு யாரெல்லாம் துணையாக இருக்கிறார்களோ அவர்களை நமக்கு உயர்வான உறவுகள் என்று நாளும் நமது நெஞ்சத்தில் இருந்து பறைசாற்றிக் கொண்டிருக்கிறது குருவின் அருள்.
ஆக சத்குரு பதஞ்சலி மகரிஷியை மீண்டும் மீண்டும் வணங்கி இந்த பிறவி மட்டுமல்ல இனி எந்த பிறவி என்றாலும் அவரே நமக்கு சத்குருவாக வர வேண்டும் என்ற ஆவலை அவர் திருவடிகளில் சமர்ப்பித்து இன்றைய குருபூஜையும் அதனால் உண்டான மகிழ்வையும், செயலையும் அதனால் உண்டாகும் பலனையும் அவரது திருவடிகளிலே சமர்ப்பிப்போம்...
ஏனென்றால் குருவின் வடிவிலே நம்மை ஆட்கொண்ட சத்குருவை அன்றி நமக்கு உற்ற துணை என்பது இங்கு
யாரும் இல்லை என்பது தான் உண்மை...
நீங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருங்கள். அதே நேரம் உங்களுடைய ஆன்ம உயர்வுக்காக தனித்தனியாக நீங்கள் பாடுபாடுங்கள் என்ற குருவின் அறிவுரையை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம் என்பதை இந்த தருணத்தில் நினைவு கூற கடமைப் பட்டுள்ளேன்
நீங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருங்கள். அதே நேரம் உங்களுடைய ஆன்ம உயர்வுக்காக தனித்தனியாக நீங்கள் பாடுபாடுங்கள் என்ற குருவின் அறிவுரையை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம் என்பதை இந்த தருணத்தில் நினைவு கூற கடமைப் பட்டுள்ளேன்
ஓம் சத்குருவே
சரணம்
No comments:
Post a Comment