யோகாசன பயிற்சி பதிவுத் தொடரின் நிறைவுப் பகுதி
யோகாசன பயிற்சி பதிவுத் தொடரின் நிறைவுப் பகுதிக்கு வந்துவிட்டோம். ஆரம்பம் முதல் இறுதிவரை பலன்தரும் ஆசனப் பயிற்சிகளை நாம் ஒவ்வொன்றாக பார்த்திருக்கிறோம்.
லோகாயதமான விஷயங்களில் இருந்து சற்றே விலகி உடலும் ,மனமும், வளமும், நலமும் பெற விழையும் ஆன்மீகம் சார்ந்த மற்றும் பொதுவியல் ரீதியான வாசகர்களுக்கிடையே இந்த ஆசனத் தொடர் கட்டுரைகள் சிறந்த வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
மனித வாழ்வுக்கு பயன் உள்ள விஷயங்கள், அதுவும் மன விகாரங்களை தவிர்த்து எந்த வகையில் எல்லாம் இந்த மனித வாழ்வுக்கு மேன்மை சேர்க்க முடியுமோ, எந்த ஒன்று அழிவற்ற இன்பத்தை தருமோ அந்த ஆன்மீக ஞானத்தை நோக்கி நம் மனிதம் இயல்பாகவே நகர்வதைப் போல இந்த வலைத்தளம் கொண்டுள்ள கட்டுரைகள் அந்த வெற்றிப் பயணத்தினை நோக்கி ஆன்மீக சாதகர்களுக்கு சிறப்பு சேர்க்கும். சேர்த்துக் கொண்டிருக்கிறது என்பதில் முழு நம்பிக்கை உள்ளது.
பிறர் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள், மன விகாரங்களை விடுத்து மெய்ஞானம் என்ற லட்சியத்தை நோக்கி தானும் பயணித்து பிறருக்கும் அந்த பயணத்தில் துணை செய்வதை ஒன்றையே ஸ்வார்த்தம் சத்சங்கம் ஒரு விரதமாக பூண்டுள்ளது.
அந்த வகையில் காசி விஸ்வநாதர் ஆலய சேவை , வலைத்தளத்தில் ஆன்மீக பதிவுகள். களத்தில் ஏழை மாணவர்களுக்கு விலையில்லா யோகப் பயிற்சி (ஆசனம் +தியானம் ) வகுப்புகள் போன்றவற்றை தொடர்ந்து அளிப்பதில் ஸ்வார்த்தம் சத்சங்கம் உறுதியுடன் இருக்கிறது. தொடர்ந்து பணியும் ஆற்றும் .
இந்த பதிவுடன் யோகாசனப் பயிற்சி சாதகர்கள் மேற்கொள்ள வேண்டிய ஆசன பயிற்சிகளின் வரிசைப் பட்டியல் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. சாதகர்கள் இதை கண்ணுற்று பயன்பெறவும்.
பட்டியல் இணைப்பு
மொத்தம் = 62 நிமிடங்கள்
தங்களுக்கு
ஏற்ற ஆசனங்களை இனம் கண்டு அதை சரியாக செய்பவர்களுக்கு அந்த ஆசன வெற்றியை
அருள்வதற்கு அந்த யுக நாயகன் ஆதிசேஷனை பிரார்தத்தனை செய்து கொள்கிறோம்.
உங்களுக்கு வெற்றி
உண்டாவதாக .................
அன்புடன்
சிவ.உதயகுமார்
namasgar, i am ramkumar, i am doing mphil in yoga (surya namasgaram ) so pls give the gain for surya namasgaram.
ReplyDeleteவணக்கம் ராம் குமார் . யோகாசனம் பற்றிய நமது கட்டுரைகளை முழுவதையும் படியுங்கள். அதில் முதல்வாதகாக சூரிய நமஸ்காரம் பற்றி தனிக்கட்டுரையே உள்ளது. நன்றி
Delete