Thursday, January 30, 2014

சுழுமுனை நாடி சக்தியை உயர்த்தும் பஸ்சி மோத்தாசனம்

பஸ்சி மோத்தாசனம் 

 





மனம் 
                             முதுகெலும்பு, வயிறு, கால் நரம்புகள்                     


மூச்சின் கவனம்

                குனியும்போது வெளி மூச்சு , ஆசனத்தின் போது இயல்பான மூச்சு ,நிமிரும் போது உள்மூச்சு 

உடல் ரீதியான பலன்கள்

                                           
  •  உடம்பின் பின்புறம் முழுவதும் மற்றும் வயிற்றின் முன்பகுதியில் உள்ள தசைகள் நன்கு இழுக்கப்பட்டு வலுவடைகின்றன. 

  • உடல் பொதுவாக நல்ல வடிவமைப்பை பெறுகிறது.

  • கல்லீரல் , கணையம் , குடல் இவற்றில் ஜீரண சக்தி தூண்டப்பட்டு அதிகரிக்கிறது.

  • வளரும் வயதினரின் உயரத்தைக் கூட்டுவதில் துணை புரிகிறது.



 குணமாகும் நோய்கள் 


  •  அஜீரணம் , மலச்சிக்கல், இடுப்பு வாயுப் பிடிப்பு,  விந்தணு பலவீனம் , மூல நோய் , ஜீரணக் கோளாறுகள் முதலியவற்றுக்கான சிகிச்சையில் பலனளிக்கிறது.

 
  • வயிற்றுப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது   


ஆன்மீக பலன்கள்

                             மறைந்திருக்கும் ஆன்மீக சக்தியை எழுப்புகிறது. சுழுமுனை நாடி சக்தியை உயர்த்துகிறது

எச்சரிக்கை :
                       உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கழுத்துப் பிடிப்பு , நாட்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது. இந்த ஆசனத்தை அதிக நேரம் செய்தால் ஜீரண கோளாறுகளுக்கு வழிவகுக்கும். குறைந்த நேரம் மட்டுமே செய்ய வேண்டும் என்பது ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் நிலைப்பாடு




தொடரும்.......
குருஜி டி.எஸ்.கிருஷ்ணன்

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment