Monday, July 2, 2012

அரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 10 )


33. திருத்தேவனார்த்தொகை

[கீழ்ச்சாலை மாதவப் பெருமாள் ]


பெருமாள்                         : தெய்வநாயகப் பெருமாள் – மாதவன்
                                                      நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்


தாயார்                               : கடல்மகள் நாச்சியார்

விமானம்                           : சோபன விமானம்

தீர்த்தம்                              : சோபன, தேவஸபா புஷ்கரிணி

ப்ரத்யக்ஷம்                       : வசிஷ்டர்

மங்களாசாசனம்              : திருமங்கையாழ்வார் [ பாசுரங்கள் ]


இத்தலத்தை கீழ்ச்சாலை மாதவப்பெருமாள் கோயில் என்றும் அழைப்பர் . 



திருநாங்கூர் திவ்ய தேசங்களில் ஒன்று. சீர்காழி – திருவெண்காடு பேருந்து வழியில் திருவாலியிலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது.










34. திருவண்புருடோத்தமம்

[திரு நாங்கூர்]



பெருமாள்                               : புருஷோத்தமர் 
                                                             நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்


தாயார்                                      : புருஷோத்தம நாயகி 

விமானம்                                 : ஸஞ்ஜீவி விக்ரஹ விமானம்

தீர்த்தம்                                    : திருப்பாற்கடல் தீர்த்தம்

ப்ரத்யக்ஷம்                             : உபமன்யு


மங்களாசாசனம்                     : திருமங்கையாழ்வார் [ 10 பாசுரங்கள் ]


மணவாளமாமுனிகள், பிரதிவாதி பயங்கரம் அண்ணன் மங்களாசாசனம் செய்த தலம். திருநாங்கூரிலேயே உள்ளது.



35. செம்பொன் செய்கோயில்


பெருமாள்                                : பேரருளாளன்- செம்பொன்னரங்கர்

                                                           நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்

தாயார்                                       : அல்லி மாமலர் நாச்சியார்  

விமானம்                                 : கநக விமானம்


தீர்த்தம்                                     : நித்ய புஷ்கரிணி, கநக தீர்த்தம்

ப்ரத்யக்ஷம்                              : ருத்ரன், த்ருடநேத்ர முனி
  
மங்களாசாசனம்                      : திருமங்கையாழ்வார் [ 10 பாசுரங்கள் ]


திருநாங்கூரிலேயே உள்ள தலம்.






36. திருத்தெற்றியம்பலம்


[ பள்ளி கொண்ட பெருமாள் கோவில் ]


பெருமாள்                                : செங்கண்மால்- ரங்கநாதர்
                                                           புஜங்க சயனம் , கிழக்கே திருமுக மண்டலம்

தாயார்                                      : செங்கமலவல்லி  

விமானம்                                 : வேத விமானம்

தீர்த்தம்                                    : சூர்ய புஷ்கரிணி


ப்ரத்யக்ஷம்                            : செங்கமல நாச்சியார் , அனந்தன்  


மங்களாசாசனம்                  : திருமங்கையாழ்வார் [ 10 பாசுரங்கள் ]



சீர்காழியிலிருந்து 8 கி.மீ தூரத்திலுள்ள திருநாங்கூரிலேயே அமைந்துள்ள தலம். பள்ளி கொண்ட பெருமாள் கோயில் என்று தெரியப்பெறும் தலம்.





37. திருமணிக் கூடம்


பெருமாள்                                : மணிக்கூட நாயகன் – வரதராஜன்

                                                           நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்

தாயார்                                       : திருமகள்  நாச்சியார்  

விமானம்                                 : கநக விமானம் [ப்ரஸந்தவிமானம் ]

தீர்த்தம்                                     : சந்திர புஷ்கரிணி ப்ரம்ஹ தீர்த்தம்

ப்ரத்யக்ஷம்                              : பெரியதிருவடி, சந்திரன் 

மங்களாசாசனம்                      : திருமங்கையாழ்வார் [ 10 பாசுரங்கள் ]


சீர்காழியிலிருந்து 8 கி.மீ தூரத்திலுள்ள திருநாங்கூரிலிருந்து கிழக்கே 1 கி.மீ தூரத்தில் உள்ளது.






38.திருக்காவளம்பாடி


பெருமாள்                                : கோபாலகிருஷ்ணன் 

                                                           நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்

தாயார்                                      : செங்கமல நாச்சியார்- மடவரல் மங்கை   

விமானம்                                : சுயம்புவிமானம் [வேதாமோதவிமானம் ]

தீர்த்தம்                                    : தடமலர்ப்பொயாகை தீர்த்தம்


ப்ரத்யக்ஷம்                            : சேனைத்தலைவர், மித்ரதேவர், ருத்ரன் 


மங்களாசாசனம்                    : திருமங்கையாழ்வார் [ 10 பாசுரங்கள் ]


திருமங்கையாழ்வார் அன்னதான கைங்கர்யம் செய்த மங்கை மடமும் அவரது அவதாரஸ்தலமான திருக்குறையாலூரும் அருகே உள்ளது.


சீர்காழியிலிருந்து  பூம்புகார் செல்லும் பாதையில் திருவெண்காட்டிற்கு அருகில் உள்ளது. திருநாங்கூரிலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. திருநகரியிலிருந்தும் செல்லலாம் .






39. திருவெள்ளக்குளம்


[திருநாங்கூர் – அண்ணன்கோவில் ]


பெருமாள்                                : கண்ணன் நாராயணன் – சீனிவாசன்

                                                           நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்


தாயார்                                      : பூவார் திருமகள் – பத்மாவதி    

விமானம்                                : தத்வரசித விமானம்

தீர்த்தம்                                     : வெள்ளக்குள தீர்த்தம்

ப்ரத்யக்ஷம்                             : ருத்ரர், ஸவேதராஜன் 

மங்களாசாசனம்                   : திருமங்கையாழ்வார் [ 10 பாசுரங்கள் ]


மணவாள மாமுனிகளுக்குப் பெருமாள் காட்சி கொடுத்த தலம்.

சீர்காழி தரங்கம்பாடி சாலையில் சீர்காழியிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.


40.திருப்பார்த்தன்பள்ளி

பெருமாள்                                 : தாமரையாள் கேள்வன் 

                                                           நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்


தாயார்                                      : தாமரை நாயகி    

விமானம்                                 : நாராயண விமானம்


தீர்த்தம்                                     : ஸங்கரஸரஸ் [கங்கா தீர்த்தம்]

ப்ரத்யக்ஷம்                              : பார்த்தன், 11 -ருத்திரர்கள், இந்திரன் 

மங்களாசாசனம்                     : திருமங்கையாழ்வார் [ 10 பாசுரங்கள் ]


சீர்காழியிலிருந்து  1 கி.மீ தூரத்தில் திருவெண்காட்டிலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது.





41. திருமாலிருஞ்சோலை அழகர்கோவில்


பெருமாள்                                : அழகர் – கள்ளழகர், மாலாங்காரர் 

                                                           நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்


தாயார்                                     : ஸுந்திரவல்லி நாச்சியார்      

விமானம்                                : ஸோமஸுந்திர  விமானம்

தீர்த்தம்                                    : சிலம்பாறு எனப்படும் நூபுரகங்கை

ப்ரத்யக்ஷம்                            : தர்மதேவதை, மலையத்வஜ பாண்டியன் 
  

மங்களாசாசனம்                    : பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், பேயாழ்வார்,

                        பூகத்தாழ்வார், திருமங்கையாழ்வார் [128பாசுரங்கள் ]



மதுரையிலிருந்து  20 கி.மீ தொலைவில் உள்ளது. அழகர் கோவில் என்று பிரசித்தம். 
மதுரையிலிருந்து பேருந்து வசதி உள்ளது. 

















No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment