Saturday, October 29, 2011

அரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 9 )


30 .திருமணிமாடக்கோவில் 

(திருநாங்கூர்)



பெருமாள்               : நந்தா விளக்குப் பெருமாள் –நாராயணன் . 

                 வீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே   திருமுக மண்டலம் 


தாயார்                       : புண்டரீக வல்லி 


விமானம்                 : ப்ரணவ விமானம்


தீர்த்தம்                   : இந்திர, ருத்ர, புஷ்கரிணி


ப்ரத்யக்ஷம்           :  ருத்ரர்கள், இந்திரன் , மதங்கர்


மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் ( 11 பாசுரங்கள்)


தை அமாவாசைக்கு அடுத்த நாள் திருநாங்கூர் கருட சேவை இத்தலத்தில்தான் நடைபெறுகிறது.


சீர்காழியிலிருந்து 8 கி.மீ தொலைவில் நகரப் பேருந்து வசதியுள்ள தலம். திருநாராயணப் பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது. 







31.வைகுந்த விண்ணகரம் 


பெருமாள்               : வைகுந்த நாதன் – தாமரைக்கண்ணன் 

                  வீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே   திருமுக மண்டலம் 


தாயார்                       : வைகுந்த வல்லி 


விமானம்                 : அகந்தஸத்யவர்த்தக விமானம் 


தீர்த்தம்                   : லட்சுமி, உதங்க புஷ்கரிணி, விரஜா தீர்த்தம் 


ப்ரத்யக்ஷம்           : உதங்க மஹரிஷி உபரிசரவஸீ


மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் ( 11 பாசுரங்கள்)


சீர்காழியிலிருந்து கி.மீ தொலைவில் உள்ள திருநாங்கூரிலேயே உள்ள தலம்.




32. அரிமேய விண்ணகரம்

(திருநாங்கூர் குடமாடுகூத்தர் கோயில் )




பெருமாள்               : குடமாடுகூத்தர்

    வீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே   திருமுக மண்டலம்


தாயார்                       :  அம்ருதகட வல்லி 



விமானம்                 : உச்சச்ருங்க விமானம் 



தீர்த்தம்                   : கோடி, அமுத தீர்த்தம் 



ப்ரத்யக்ஷம்           : உதங்க மஹரிஷி 



மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் ( 10 பாசுரங்கள்)


சீர்காழியிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள திருநாங்குரில் உள்ள தலம். கூடமாடு கூத்தர் கோயில் என்று அழைக்கப்படும் தலம். 



(தொடரும் )

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment