Thursday, September 29, 2011

அரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 5 )


10. திருவழுந்தூர்
[தேரழுந்தூர்]


பெருமாள்                                : ஆமருவியப்பன் – தேவாதிராஜன்
                                          நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்

தாயார்                                      : செங்கமலவல்லி 


விமானம்                                : கருடவிமானம் 

தீர்த்தம்                                    : தர்சன புஷ்கரிணி , காவேரி 

ப்ரத்யக்ஷம்                             : காவேரி, தர்மதேவதை, அகஸ்தியர், கருடன் 

மங்களாசாசனம்               : திருமங்கையாழ்வார் [ 45 பாசுரங்கள் ]

கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊர்.

மாயூரம் – குத்தாலம் – கோமல் வழியில் மாயவரத்திலிருந்து 21 கி.மீ.




11. திருச்சிறுபுலியூர்


பெருமாள்                       : அருமாகடல், ஸ்தல சயனப்பெருமாள்
                                                     பூஜங்க சயனம் , தெற்கே திருமுக மண்டலம் 

தாயார்                             : திருமாமகள் நாச்சியார் – தயாநாயகி 

விமானம்                      : நந்தவர்த்தன விமானம் 

தீர்த்தம்                          : மானசபுஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்                   : வ்யாசமுனி, பாலவியாக்ரமுனி  

மங்களாசாசனம்     : திருமங்கையாழ்வார் [ 10 பாசுரங்கள் ]

மிகவும் சிறிய திருவுருவிலான புஜங்கசயனம் பெருமாளின் கோலம். வ்யாக்ரபாதர் மோக்ஷம் பெற்ற தலம்.
 மாயவரம் – பேறளம் பாதையில் கொல்லுமாங்குடியிலிருந்து கிழக்கே கி. மீ தொலைவில் உள்ளது 




12. திருச்சேறை
[ பஞ்சஸாரக்ஷேத்ரம் ]

பெருமாள்                             : ஸாரநாதன்
                                                        நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்

 தாயார்                                    : ஸாரநாயகி  – பஞ்ச லக்ஷ்மி  

விமானம்                              : ஸார விமானம் 

தீர்த்தம்                                  : ஸார புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்                           : காவேரி , மார்க்கண்டேயன்  

மங்களாசாசனம்               :  திருமங்கையாழ்வார் [ 13 பாசுரங்கள் ]

கும்பகோணம் – குடவாசல் – திருவாரூர் மார்க்கத்தில் கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது. நாச்சியார் கோவிலிலிருந்து 5 கி.மீ. தொலைவு.

 (தரிசனம் தொடரும் )

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment