Wednesday, September 28, 2011

அரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 4 )


7. திருப்புள்ளம் பூதங்குடி

பெருமாள்                                      : வல்வில் ராமன்
                                                புஜங்கசயனம் கிழக்கே திருமுகமண்டலம் 


தாயார்                                             : பொற்றாமரையாள்

விமானம்                                       : சோபன விமானம் 

தீர்த்தம்                                           : ஜடாயு தீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்                                   : இராமன் , ஜடாயு 

மங்களாசாசனம்                        : திருமங்கையாழ்வார் , [ 10 பாசுரங்கள் ]
நான்கு கரங்களுடன் ராமன் சயன கோலத்தில் காட்சியளிக்கும் ஸ்தலம் . 

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் அவதாரஸ்தலமான மண்டங்குடி இதனருகே உள்ளது. 

கும்பகோணத்திற்கு அருகே சுவாமி மலை – திருவைகாவூர் மார்க்கத்தில் ஸ்வாமிமலையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது.



8. திருப்பேர் நகர்

அப்பக்குடத்தான் [கோவிலடி]

பெருமாள்                                       : அப்பக்குடத்தான்
                                                                 புஜங்க சயனம் , மேற்கே திருமுக மண்டலம்

தாயார்                                             :   இந்திரா தேவி கமலவல்லி

விமானம்                                         :  இந்திர விமானம் 

தீர்த்தம்                                             :  திருக்காவேரி 

ப்ரத்யக்ஷம்                                     :  உபமன்யு, பராசரர்

மங்களாசாசனம்                        :  பெரியாழ்வார், திருமழிசை , கலியன்,    
                                                                   நம்மாழ்வார்  [ 33 பாசுரங்கள் ]

தஞ்சை – திருக்காட்டுப்ப்பள்ளி – கல்லணை மார்க்கத்தில் உள்ளது. அன்பில் தலித்திலிருந்து கொள்ளிடம் கடந்தும் வரலாம். 

திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. கல்லணைக்கு சுமார் 7 கி.மீ தூரத்தில் உள்ளது.



9. திரு ஆதனூர்

பெருமாள்                                  :  ஆண்டளக்குமையன்
                                                               புஜங்க சயனம் , கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                                        :  ஸ்ரீ ரங்கநாயகியார் 

விமானம்                                 :  ப்ரணவ விமானம் 

தீர்த்தம்                                     : சூர்ய புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்                              : காமதேனு , திருமங்கையாழ்வார்

மங்களாசாசனம்                 : திருமங்கையாழ்வார் [ ஒரு பாசுரம் ]

குடந்தை அருகே சுவாமிமலையிலிருந்து  3கி.மீ. தொலைவில் உள்ளது. 


(தரிசனம் தொடரும் )

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment