கூர்மாசனம்
ஆன்மீக உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்,
யோகாசனப் பயிற்சிகளில் 84 லட்சம் வகையான ஆசனப் பயிற்சிகள் உள்ளன என்று கூறப் படுகிறது.
நடைமுறையில் சுமார் 200 ஆசனங்கள் உள்ளன.
அவற்றில் முக்கிய ஆசனங்களை செய்தாலே பெரும்பாலான உடலியல் அனுகூலங்களை நாம் அடைய முடியும்.
அவற்றில் குருஜியின் பரிந்துரைப் படி சில ஆசனங்களை மட்டும் இந்த வலைப்பூவின் வழியாக பார்த்து வருகின்றோம்.
அவற்றைப் போல இப்போது நாம் பார்க்கப் போகும் முக்கியமான ஆசனம்
கூர்மாசனம்.
செய்முறை -
விரிப்பின் மீது அமர்ந்த நிலையில் முழங்காலை மடித்து இருகால்களின் அடிப்பாகம், அதாவது பாதங்களை ஒன்றுக்கொன்று எதிராக சுமார் பத்து அங்குல இடைவெளி இருக்கும்படி கொண்டு வரவும்.
அந்த இடைவெளியில் நெற்றியில் தரையில் பதித்தபடி , இரு கைகளை நீட்டி வணங்கிய படி கைகளை தரை மீது பரவச் செய்யவும்.
இவ்வாறு நிமிர்ந்த நிலையிலிருந்து குனியும்போது மூச்சை உள்ளிழுக்கவும்.
இந்த நிலையில் 10 வினாடிகள் கழித்து மெதுவாக கூப்பிய கைகளோடு நிமிரவும்.
நிமிரும்போது மூச்சை வெளிவிட்டபடி அமர்ந்த நிலைக்கு வந்து கைகளை பிரித்து பக்கவாட்டில் கொண்டு வரவும்.
குனியுமோது முதுகுத் தண்டின் கீழே (நுனி பாகத்தை )யும்,
நிமிரும்போது புருவ மத்தியிலும் நினைவை செலுத்தவும்.
இரண்டு முறை இந்த ஆசனத்தை இரண்டு நிமிட இடைவெளி விட்டு செய்யவும்.
பலன்கள் -
மன அமைதி கிடைக்கும்
இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டு எலும்பு, கழுத்தெலும்பு சமந்தப் பட்ட வலி நீங்கும் .
ரத்தத்தில் சிகப்பணுக்கள் அதிகரிக்கும்.
பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் குறைந்து
குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்யும்.
Thanks for sharing this useful asana.
ReplyDelete