மச்சேந்திராசனம்
வணக்கம்.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ஆன்மீக உறவுகளை சந்திப்பதில் மனம் மகிழ்வடைகிறது.
முதலில் நமது தேவை உடல் ஆரோக்கியமும் , பிறகு மன ஆரோக்கியமும் தேவையான ஒன்றாக அமைந்துள்ளது.
இரண்டும் சரியான அளவில் ஒருங்கிணைந்து செயல் படும்போது செயல்களை சிறப்பாக வெற்றி கொள்ளல் என்பது சாத்தியமான ஒன்றாகிறது .
இங்கே தான் உடல் நலம், மன நலம், ஆன்ம நலம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ள யோகத்தின் தேவை அவசியமாகிறது.
சாதி, மத வேறுபாடுகளை கடந்து அனைவரும் கற்றுக் கொள்ளவேண்டிய கலையாக நமது பாரதத்தில் உருவாகியுள்ள யோகத்தின் சிறப்பை இந்த எழுத்துக்களால் அளந்து விட முடியுமா என்ன ?
நிற்க,
இந்த பதிவிற்கான ஆசனத்தை நாம் இப்போது காண்போம்.
(Thanks to Baba Ramdev website)
விரிப்பில் கால்களை நீட்டியவாறு அமரவும்.
விரிப்பில் கால்களை நீட்டியவாறு அமரவும்.
பின்பு வலது காலை உள் பக்கமாக மடித்து ,உட்காரும் பாகத்தருகே பாதத்தை வைத்துக் கொள்ளவும்.
இடது காலை மேல்புறமாக மடித்து குத்திட்ட நிலையில் பாதத்தை வலத் தொடை யில் வெளிப்புறம் தரையில் பதிக்கவும்.
இடது முழங்கால் நெஞ்சை ஒட்டியபடி இருக்குமாறும், வலது கையை மடித்து, நிறுத்தியுள்ள காலின் உள் வழியாக இடது முட்டியை பிடித்தும், இடது கை முதுகைத் தொட்டும் இருக்க வேண்டும்.
ஒட்டு மொத்தமாக இடுப்பு, முதுகு , தோள்பட்டைகள், தலை, கழுத்து முதலிய உறுப்புகள் இடது புறம் முறுக்கியபடி பார்வையினை நேராக செலுத்தியபடி பத்து வினாடிகள் இந்த ஆசனத்தில் இருக்க வேண்டும்.
பலன்கள்
முதுகுத் தண்டு திருகப்படுவதால் உடற்ச்சக்கரங்கள் தூண்டுதல் அடைகிறது.
விரித்த முதுகுத்தண்டு நெகிழும் தன்மையாவதால் முகுள நீர் அழுத்தம் சீர் அடைகிறது.
உடல் பருமன் குறையும்.
மன அழுத்தம் சீரடையும்.
சிறுநீரக கோளாறு நீங்கும்.
மொத்தத்தில் உடல் , மனம் இரண்டையும் செம்மையாக்கும்
அரிய வகை ஆசனம்
(தொடரும் )
No comments:
Post a Comment