Wednesday, February 16, 2011

சித்தர்களின் வழி ...................?

மீண்டும் ஒரு பதிவில் பதிவுலக உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி.

ஆன்மீக வழியிலே வரும் அன்பர்களுக்கு சித்தர்களை பற்றியும் , அவர்கள் மகத்துவம் பற்றியும் தெரிந்து கொள்வதற்கான ஆர்வத்தை அளவிட முடியாது.
இணையத் தளத்திலோ, புத்தகங்களிலோ  அவர்களைப் பற்றிய செய்திகள் என்றால் அதற்கு தனி முக்கியத்துவம் உண்டு. அதை நாம் படிக்க தவறுவதில்லை.

















இன்றைய நவீன உலகம் கூட  சித்தர்களை பற்றி மிகவும் வியக்கிறது. அவர்களின் தெளிந்த கால ஞானம், அறிவியல் பார்வை போன்றவை எல்லாம் விஞ்ஞான உலகத்தினால் மிகவும் வியப்பாக பார்க்கப் படுகிறது.


இறைவனை தனக்குள் உணர்ந்த , கண்ட அவர்களின் ஞானத்தினால் இறைவனால் படைக்கப்பட்ட , இறைவனே பரந்து விரிந்திருக்கும் இந்த உலகத்தின் சூட்சமத்தை அறிவது என்பது மிகவும் கடினமான பணி அல்ல.


யோகம், மருத்துவம் , என்று பல துறைகளில் அவர்கள் இந்த பிரபஞ்சத்திற்கு செய்திருக்கும் பணி மிகவும் மகத்தானது.  அதன் மகத்துவத்தை அளவிட முடியாது.


என் கடன் பணி செய்து கிடப்பதே  என்ற வாக்கிற்கு இணங்க மனித குல முன்னேற்றத்திற்கு அவர்கள் பல நன்மைகள் செய்தார்கள். இன்னும் செய்வார்கள்.


இறைவனின் அவதாரம் யுகத்திற்கு ஒரு முறை தான்  நிகழ்கிறது.


ஆனால் சித்தர்கள் , அருளாளர்கள் தோன்றுவதற்கு கால வரையறை இல்லை.
அந்த தோன்றுதல் என்பதும் மனித குலத்தின் மேல் கொண்ட அன்பு ஒன்று மட்டுமே .


இந்த மனித குலத்திற்கு அவர்களால் இயன்ற சேவையினை காலந்தோறும் செய்து கொண்டே இருப்பார்கள்.


அத்தகைய சித்தர்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆன்மீக அன்பர்களின் ஆர்வம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.  அவர்களின் வரலாறை புரட்டிப் பார்த்து இன்ன ஆண்டில் பிறந்தார்கள், இத்தனை யுகங்கள் வாழ்ந்தார்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ள முடியாது.  ஏனென்றால் யுகங்கள் தோறும் சூட்சமமாகவும் , அவ்வப் போது தூலமாகவும் தோன்றுபவர்களுக்கு


தோற்றம் ஏது..............?


மறைவு ஏது............ ?


தங்கள் வாழ்க்கையினை பற்றி பிறர் படிக்க வேண்டும் என்றோ, தங்கள் சக்திகள் பற்றி அறிந்து வியக்க வேண்டும். தங்களை வழிபட வேண்டும்  என்பதற்காக அவர்கள் தோன்றவில்லை


தாங்கள் எந்த பாதையினைப் பின்பற்றி அந்த சிறப்பினை அடைந்தார்களோ, அந்த பாதைக்கு யோகம் என்று பெயரிட்டார்கள். அதற்கு முன்னோடியாக அந்த யோகப் பாதையிலே சென்று வெற்றி பெற்று இறைவனை அடைந்தார்கள்.


மனித குலம் யோக நெறியில் செழித்து இன்புற வேண்டும் , இறைவனை அடைய வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம் என்பதைத் தவிர வேற ஒன்றுமில்லை. 

ஆன்ம விடுதலை என்ற மாபெரும் இலட்சியத்தை மானுட குலத்திற்கு சொல்வதை தவிர வேறொன்றும் அவர்களுக்கு. 


அவர்கள் அடைந்த நிலையினை நாமும் அடைய வேண்டும். அதற்கு அவர்கள் காட்டிய


"யோக வழியே  சித்தர்களின் வழி."







 















No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment