Tuesday, June 30, 2009

ஆக்ஞை

சதாசிவனாரும் , மனோன்மணியாய் விளங்கும் ஞானத் தாயும் , கூடி மகிழும் ஆக்ஞை புருவ மத்தி அல்லது புருவ நடு ஸ்தானமே "ஆக்ஞை" என்ற ஆறாவது தலமாகும்.

இத்தலம் ஆறு ஆதாரங்களின் கடைசி என்றாலும் இதற்கடுத்தும் 7வது ஆதாரமான சஹஸ்ராரம் என்ற ஆதாரமே இறுதி ஆதாரமாகும்.

ஆக்ஞையின் வடிவம் வட்டமும்
அதன் வெளிப்புறத்தில் வலமும் இடமமுமாக ஒட்டி இரண்டு தளங்களும் அதில் ( 'ஹ','க்ஷ') என்ற இரு அக்ஷ்ரங்களுடையதாயும் திகழ்கின்றது.

விசுத்தி

ஆகாச தத்துவிறக்கமான "விசுத்தி" என்ற கழுத்து (கண்டம்) பகுதி முழுதும் நிறைந்து நிலவும் ஆதார சக்கரமாகும்.

இதன் வடிவம் அறுகோண வடிவின் மத்தியில் 16 தளங்கள் (இதழ்கள்) கொண்ட வட்டவடிவம் கொண்டதாகும்.

பஞ்சாக்ஷரத்தின் நான்காவது. எழுத்தான "வ" காரமாய் , "ஹம்" என்ற பீஜமாகவும் திகழுகின்ற ஆதாரமாகும் .

16 தளங்களில் 51 அக்ஷரங்களில் 16 உயிரெழுத்துக்களை கொண்டும் 72 சந்திர கலை அமிர்தஸ்தலமாகும் . அமிர்தம் பரவும் இடமுமாகும்.

ஆக்ஞையினின்றும் பெருகும் பரமானந்தத்தை ஜீவர்களுக்கு விநியோகிக்கும் தலமாகும்

Saturday, June 27, 2009

அனாகதம் (இதய கமலம் )

டுத்ததாக இதய கமலம் என்று அழைக்கப்பெறும் மார்புபகுதி முழுதும் வியாபித்திருக்கும் அனாகதம் என்ற ஆதாரச் சக்கரம் பல முக்கியச் சிறப்பத் தன்மைகளை கொண்டதென சித்த புருஷர்கள் விவரிக்கின்றனர். 

மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் , மணிப்பூரகம், விசுத்தி, ஆக்ஞை என்று ஆறாக இருந்தாலும் சஹஸ்ராரம் என்ற 7 வது ஆதாரமே இறுதி ஆதாரமாகும். 

ஏனைய ஆறு ஆதாரங்களுக்கும் நிலைக்களனாய் இருந்துகொண்டு பிராண ஆராதனையில் தன் இயக்கத்தை நிலை நிறுத்துகிறது. 

மேல் மூன்று சஹஸ்ராரம்,ஆக்ஞை,விசுத்தி, கீழ் மூன்று மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் , மணிப்பூரகம் இவ்விரண்டிற்கும் மைய கேந்திரமாக அனாகதம் ஒளிர்கின்றது. 

ஏனைய ஆதாரங்களை இயக்குவதன் மூலம் பிராண ஆதாரனை செய்திடினும் இயல்பாகவே சதா சர்வகாலமும் பிராண ஆதாரனையினை செய்து கொண்டிருப்பது அனாகதமே. 

அனாகதம் என்றால் அனாதி, சதா ஓங்கார ஒலியினை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதாகும். 

ஸ்வாதிஷ்டானம் 52 அக்னி கலைகளையும் , மணிபூரகம் 52 சூரிய கலைகளைக் கொண்டதுபோல,அனாகதம் 54 சூரிய கலைகளைக்கொண்டு ஜோதி வடிவானதாகவும், இறைவன் ருத்ர ரூபியாய் இங்கே வீற்றிருத்தாலும், பஞ்சாக்ஷ்ரங்களின் நடு எழுத்தாய் விளங்கும் "சி " , நெருப்பின் பஞ்ச பூத தத்துவமாகவும், எல்லாவற்றிலும் மேலாக எப்போதும் அனாதியாய் ஓங்கார சப்தத்தையும் (உடல் முழுதும் சிரசு வரை) மின்னலின் கண் தோன்றும் இடி சப்தத்தையும் எழுப்பிக்கொண்டே இருப்பதோடு ஒவ்வொரு அணுவிலும் அதன் அதிர்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும். 


இந்த ஆதாரத்தை அறிந்து அதனுள் பிரவேசித்து விட்ட எந்த சாதகரும் மேலும் அடுத்தடுத்த ஆதாரங்களை அடைந்து மேம்படுவார்களேயன்றி அவர்களுக்கு கீழிறக்கமில்லை என்று ரிஷிகள் வர்ணித்துள்ளனர். 

சாதகர்கள் அனாகத கேந்திரத்திற்கு தன்னை வியாபித்துக்கொள்ளும்போது கீழாதரங்களில் தாம் பெற்ற அனைத்து அனுபவங்களையும் ஆழ்ந்துணரும் சித்த வடிவாக ஒளியாய் சூட்சம ஒலி உந்துதலால் மேல் மேல்நோக்கி பயணித்து சிவசக்தி சங்கமத்தில் உருவாகும். 

ஆராவமுதை பருகும் நிலைக்கு ஆட்படுத்தபடுவார்கள் . இதுவே அனாகத தளத்தின் சிறப்பு வாய்ந்த தலமாக இருப்பது கண்கூடும். 

ஒளி, ஒலி இரண்டின் அனைத்து பரிமாணங்களில் ஒருசேரத் திகழும் ஆதாரமும் ஆகும். வட்டத்தின் நடுவே முக்கோணமும் , வட்டத்தின் வெளியே 12 யோக நாடிகளைக் கொண்டதாகவும், 

அக்ஷர (க,க2,க3,க4, ங ,ச1,ச2, ஜ3,ஜ4, ஞ,ட1,ட2) தளங்களை உடையதாகவும் உள்ளது.

Thursday, June 25, 2009

மணிபூரகம்

மணிபூரகம் 
  'தொப்புள்' என்றும் 'நாபி' என்றும் குறிக்கப்படும் கேந்திரம் முழுவதும் பரவி நிற்பதும், முதுகுத்தண்டின் கீழிருந்து மேலாக மூன்றாவது ஆதார இணைப்புபாதையாகும். 

இதன் உருவம் வட்டமும், வட்டத்தினுள் அமைந்த மேல்நோக்கிய இரு கொம்புவடிவ பிறைச்சந்திரன் உருவத்தை கொண்டதாகும். 

வட்டத்தினுள் வெளியே தொட்டபடி பத்து தளங்கள் கொண்ட (இதழ்கள்) ஒவ்வொன்றிலும் (டட, ணத , தத, தந , பப) என்ற பத்து அக்ஷரங்களைக் கொண்டுள்ளது. இதுவே பத்து யோக நாடிகளாய் மிளிருகின்றது. 

ஸ்வாதிஷ்டானம் இரண்டாவது ஆதாரம் (சக்கரம்)

ஸ்வாதிஷ்டானம்
ஸ்வாதிஷ்டானம் என்ற சக்கரம் மூலாதாரத்திற்கு அடுத்த நிலையில் உள்ள இரண்டாவது சக்கரமாகும். 

சுவாசம் என்ற பிராணனின் இருப்பிடம் குண்டலினியின் பிராண வடிவில் 
தன் சக்திகள் இங்கே கேந்த்ரமாக தன்னை வியாபித்துக் கொண்டிருக்கும் குறி ஸ்தானமாகும். 

இதன் உருவம் சதுரம் ஆகும். 

சதுரத்தை தன்னுள் அடக்கி வெளிவட்டமாகவும், வட்டத்தை ஒட்டியவாறு சுற்றிலும் ஆறு இதழ்களை கொண்டதாக உள்ளது. 

இந்த ஆறு இதழ்களிலும் ஸ , ஹ , ம், ய, ர, ல என்ற ஆறு எழுத்துக்களும் 
ஆறு தளங்களாக , ஆறு யோக நாடிகளாக மையம் கொண்டுள்ளது.

பஞ்சாக்ஷரத்தின் முதல் எழுத்தான "ந" எழுத்தின் சப்த பரிமாண எழுச்சி உடையதாகவும் , ரம் என்ற பீஜாக்ஷர அக்னி ரூபமாகவும் திகழுமிடமாகும்

Wednesday, June 24, 2009

ஏழு ஆதாரங்கள் என்ற சக்கரங்கள் (மூலாதாரம்)

ஏழு ஆதாரங்கள்  

ஆதாரம் என்பது நம் உடலில் கண்ணுக்கு தெரியாமல் (சூட்சமத்தில் ) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் ஆகும் . இவை ஏழு இருப்பதாக யோகிகள் கூறுகின்றனர். 

Tuesday, June 23, 2009

யோகாசனம்

யோகம் + ஆசனம் பொதுவாக யோகாசனம் என்றாலே உடலை வளைத்து செய்யும் பயிற்சி என்று பெண்களும் , வயதானவர்களில் பெரும்பாலனோர் கருதுகின்றனர்.

யோகத்தின் எட்டு அங்கங்கள் என வர்ணிக்கப்படும்

இயமம்
நியமம்
ஆசனம்
பிராணாயாமம்
பிரத்யாகாரம்

Monday, June 22, 2009

அது என்ன , மனம், எண்ணம், உடலுணர்வு ,?

பல்கலைகழகத்தில் யோக உரையாற்றும்  ஆசிரியர்  குருஜி  T .S . கிருஷ்ணன்

மனம் என்பது ஆத்ம ஸ்வரூபத்தின் ஒரு சக்தி. எல்லா நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. அன்நினைவுகளை எல்லாம் நீக்கிப் பார்க்கும்போது மனம் அங்கு தனியாக இருப்பதில்லை. நினைவுதான் மனதின் உருவம்.  

Sunday, June 21, 2009

(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்

(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்  






  •  பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம். 
 

Saturday, June 20, 2009

ஓம் மந்திரம்

ஓம் மந்திரம் அ - தூல உடலையும், தூல பிரபஞ்சத்தையும்

உ - சூட்சும உடலையும் , சூட்சும உலகையும்

ம - காரண அதிசூட்சும உடலையும் , சூட்சும உலகையும் வெளிபடுத்துகின்றது.


இம் மூன்றும் இணையும் போது ஓங்கார மந்திரமாய் உலக உற்பத்தியின் அடிப்படை யினையும் இறையையும் அடையும் அறியும் விழிப்பை உணர்வில் உருவாக்குகிறது.


உடலியலின் ஜீவ சக்தியையும் உயிரியலின் பிராண சக்தியையும் மனவியலின் ஞான யுக்தியால் இணைக்கும் யோக சக்தியை நமக்கு அருளியவர் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியாவார் .


மனதிற்கு யோக சூத்திரமும் (அட்டாங்க யோக நெறி)

வாக்கிற்கு சப்தத்திற்கு ஒலி இலக்கணமாய் வியாகரண பாஷ்யமும் ,

உடலுக்கு சரகம் என்ற ஆயுர்வேத சாஸ்திர நூலையும் (திரிகரண சுத்தி)

அருளியுள்ளார்.

Friday, June 19, 2009

தியானமும் பிரபஞ்ச சக்தியும்

உலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை .

இந்த பிரபஞ்சம் உருவாக யாரோ ஒருவர் முன்னதாக, ஏதோ ஒன்று வேறொன்றை உருவாக்கும் விதத்தில், இருந்திருக்க வேண்டும்.

அது ஒலிவடிவாய் இருந்து பின் ஒளிவடிவாய் ஆயிற்று. ஒளிக்கும் பரிமாணமும், நிறை (கனம்) யும் உண்டென்பதும் விஞ்ஞான உண்மை.

ஒவ்வொரு ஒலிக்கும் தனித்தனி உருவமுண்டு.

ஒவ்வொரு ஒலிக்கலவைகளுக்கும் தக்கவாறு வானில் பலவித உருவங்களை ஒளி வரைகின்றது.

 அதனுள் ஒளி ஏற்படுகையில் சக்தி என உயிர் வருகின்றது.அவ்வுயிரின் சக்தி நம் உடலுள் பிரபஞ்ச சக்தி (COSMIC ENERGY) ---யாகப் படருகின்றது.

இதைத்தொடர்ந்து நிகழச்செய்வதின் மூலம் உணவின் மூலம் ஏற்படும் சாதாரண வளர்சிதைமாற்றம் (METABOLISM) நிறுத்தப்பட்டு தெய்வீக சக்தி உடலைத் தன் பொறுப்பில் ஏற்கிறது.

மூச்சு நிற்கிறது.

 மன ஆற்றல் என்ற யோக சக்தி இயற்கையை தன்வசப்படுத்துகிறது. இதுவே தியானம் என்ற தவத்தின் ஒரு நிலையாகும்.

இந்த ஒலி ரூபங்களை (குரல் உருவகங்களை) திருமதி வாட்ஸ் கியுசஸ் ஆராய்ச்சி முடிவை உலகுக்கு தந்தார்.

எந்த மந்திரத்தையும் ஒலிபேதமின்றி ஒலிச் சிதைவின்றி உச்சரிக்கும்போது அதற்குரிய உருவம் அதனுடைய சக்தியாய் நம்மையடைகின்றது .

 வேத மந்திரங்களும் - உபதேச விஞ்சைகளும் இத்தகைய அதிர்வலைகளைக் கொண்ட சக்தியாவதே அதன் சிறப்பாகும். எனவே ஜபமும், தவமும் வலுப்பெறுகின்றது.

Thursday, June 18, 2009

குருவணக்கம்

யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்
மலம் சரீரஸ்ய து வைத்ய கேன !
யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்
பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ !!

குருவணக்கம் 

குருவழியே ஆதி ஆதி 
குருமொழியே வேதம் வேதம் 
குருவிழியே தீபம் தீபம் 
குருபதமே காப்பு காப்பு. 

சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் யோகசூத்திரம் என அழைக்கபடினும் சாஸ்திரம் என்று கூறுவதே மேன்மை யாகும்.

“அத யோகானுசானம்” என்று முதல் சூத்திரம் துவங்கி

புருஷார்த்த சூன்யானம் குணானம் ப்ரதி -ப்ரஸவ: கைவல்யம் ஸ்வரூப-பிரதிஷ்டா வாசிதி-சுக்தே : இதி”

என முடியும் 196 சூத்திரங்களில் ஓர் யோக வேதத்தை உலகுக்கு தந்துள்ளார்.

இந்த யோகசூத்திரத்தை பயில்வது என்பது ஆழ்ந்து தொடர்ந்து உணர்வதும் பயிற்சி செய்வதும் ஆகும்.

ஏனைய சாஸ்திரங்களைப் போல் கற்பதும் விவாதிப்பதுமல்ல.

உள்ளமும், உடலும் தூய்மையாக, ஆற்றலாக திகழ

யோகம் + ஆசனம் உள்ளமும், உடலும் தூய்மையாக, ஆற்றலாக திகழ யோகாசனம் அவசியம். 

தெய்வீகஸ்தலம் கொண்ட குருவின் வரலாறு


மதுரை காளஹஸ்தி கோயில் மாநகரம் என்றழைக்கப்படும் மதுரையில் பழங்காநத்தம் பகுதியில் உள்ளது காசிவிஸ்வநாதர் கோயில். இங்கு இறைவன் வாயு ரூபத்தில் இருக்கிறார்.

அதற்கு சான்றாக காற்று புக முடியாமல் வடிவமைக்கப்பட்டுள்ள விசாலாட்சி அம்மன் கருவறைக்குள் உள்ள விளக்கு எப்போதும் அசைந்து கொண்டே இருக்கிறது.

TRANSLATE

Click to go to top
Click to comment