Tuesday, June 30, 2009

ஆக்ஞை

சதாசிவனாரும் , மனோன்மணியாய் விளங்கும் ஞானத் தாயும் , கூடி மகிழும் ஆக்ஞை புருவ மத்தி அல்லது புருவ நடு ஸ்தானமே "ஆக்ஞை" என்ற ஆறாவது தலமாகும்.

இத்தலம் ஆறு ஆதாரங்களின் கடைசி என்றாலும் இதற்கடுத்தும் 7வது ஆதாரமான சஹஸ்ராரம் என்ற ஆதாரமே இறுதி ஆதாரமாகும்.

ஆக்ஞையின் வடிவம் வட்டமும்
அதன் வெளிப்புறத்தில் வலமும் இடமமுமாக ஒட்டி இரண்டு தளங்களும் அதில் ( 'ஹ','க்ஷ') என்ற இரு அக்ஷ்ரங்களுடையதாயும் திகழ்கின்றது.


பஞ்சாக்ஷரத்தில் கடைசி அக்ஷரமான என்ற யகார எழுத்தையும் அதன் தத்துவமாகவும் விளங்குகிறது. 64 சந்திர கலைகளை பெற்றும் ,
மனத்தின் பால் அடைக்கலம் கொண்ட அறிவு , புத்தி, அதன் சேர்க்கையான ஆன்மாவின் தொடர்பாகவும், ஆன்மாவின் வெளிப்பாடாய் திகழ்ந்து

கன்மாவின் வடிகாலான தொழில்படும் சித்தம் என்ற உள் மன வெளி அல்லது, அகமான மண்டலமே இந்த ஆக்ஞை ஆதாரம் என சான்றோர் கூறுவார்கள்

. ஓம் என்ற பீஜத்தை கொண்டதும் வெளுப்பு அல்லது நிறமற்ற மிகுந்த குளிர் ஒளி வடிவமும் ஆகும்.

1 comment:

  1. உள் புருவ மத்தி எது ?
    http://saramadikal.blogspot.in/2013/06/blog-post_9061.html
    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

    சாரம் அடிகள்
    94430 87944

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment