Thursday, June 18, 2009

உள்ளமும், உடலும் தூய்மையாக, ஆற்றலாக திகழ

யோகம் + ஆசனம் உள்ளமும், உடலும் தூய்மையாக, ஆற்றலாக திகழ யோகாசனம் அவசியம். 



இதில் யோகம் என்பது உள்ளத்திற்காகவும், ஆசனம் என்பது உடலுக்காகவும் செய்யப்படுகிறது. இந்த யோகாசனத்தால் தான் மனித வாழ்க்கை வெற்றிகரமானதாக அமையும். 

யோகசனத்தைப் பற்றி ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்கிறார்கள். 

சிலர் உடலுக்குரிய ஆசனங்களை பயிலுவது தான் யோகாசனம் என்றும், 

ஒரு சிலர் தியானம் பயிலுவது யோகாசனம் என்றும், 



வேறுசிலர் மூச்சுப்பயிற்சி (பிராணாயமம்) செய்வதுதான் யோகாசனம் என்றும், இன்னும் சிலர் உண்ணாவிரதம் போன்ற விரதங்கள் இருப்பதே யோகாசனம் என்றும் கூறுகிறார்கள். 

ஆனால் பதஞ்சலி ஒருவர் மட்டுமே உள்ளத்தின் ஆற்றலை பெருக்க யோகப்பயிற்சி, உடலின் ஆற்றலைப் பெருக்க ஆசனப் பயிற்சி என இரண்டையும் ஒன்று சேர்ப்பதே யோகாசனம் என தெளிவாக்கியவர். 

பதஞ்சலி முனிவர் துவாபரா யுகத்தில் வாழ்ந்தவர். இவர் ஆதிசேஷன், லட்சுமணன், பலராமன், ராமானுஜர் என பல அவதாரங்கள் எடுத்தவர். இவர் இந்த உலக மக்களின் நலன் கருதி மனதுக்கு யோக சூத்திரமும், உடலுக்கு சரகம் என்ற வைத்திய நூலும், வாக்கிற்கு வியாகரண பாஷ்யம் போன்ற நூல்களை தந்தவர்.

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment