Saturday, July 23, 2016

“ இந்தியாவின் தோற்றமும் வரலாறும் “ ஒரு உன்னத நூல் வெளியீடு ( தினமணி நாளிதழின் கருத்துரையுடன் )

எழுத்துப் பயணத்தில் இரண்டாவது மைல்கல்

“ இந்தியாவின் தோற்றமும் வரலாறும் “


http://www.wecanshopping.com/products/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html

எழுத்தாளர் ஐயா. வெங்கட ரத்தினம் அவர்களின் இரண்டாம் நூலான “ இந்தியாவின் தோற்றமும் வரலாறும் “ (4 கோடி ஆண்டுகளின் இந்திய வரலாறு ) என்ற கவிதா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அவருடைய இந்த 95 வயதில் அவருடைய சீரிய முயற்சியை மனமுவந்து அனைவரின் சார்பிலும் போற்றுகிறோம்.

 இந்தியாவின் வரலாற்றை ஆரம்பம் முதல் நடப்பு வரை மிகவும் எளிய வகையில் அதே நேரம் பொருள் சிதையாமல் சிறப்பாக கூறுகிற பாங்கு சுவையான ஒன்று.

 தினமணி நாளிதழின் கருத்துரை

இந்தியாவின் தோற்றமும் வரலாறும் - 4 கோடி ஆண்டுகளின் இந்திய வரலாறு

இந்தியாவின் தோற்றமும் வரலாறும் - 4 கோடி ஆண்டுகளின் இந்திய வரலாறு - கே. வெங்கட்ரத்னம்; பக்.352; ரூ.250; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; )044-2436 4243.

இந்திய வரலாறு பற்றி மிகத் தெளிவாக, ரத்தினச் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது இந்த நூல். எண்ணற்ற தகவல்களின் திரட்டு, புகைப்படங்களின் தொகுப்புக்காக நூலசிரியரின் கடும் முயற்சி நூலில் வெளிப்பட்டுள்ளது என்றால் மிகையில்லை. 16 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு வேதகால நாகரிகம் தொடங்கி, கற்கால மனிதர்கள், சிந்து சமவெளி நாகரிகம், ஆரியர்கள் வருகை, மொகலாயர்கள் படையெடுப்பு, நவீன இந்தியா என இன்றைய கால கட்டம் வரை தொகுப்பில் இடம் பெற்றுள்ள செய்திகள் அனைத்தும் முத்துமுத்தானவை.

கி.மு. 600 ஆண்டுகளுக்கு முன் இந்தியா பல பிரிவுகளாக இருந்தன. அவற்றில் கோசலம், அவந்தி, மகதம், வம்சம் ஆகிய நான்கும் வலிமை மிக்கதாக இருந்தது. தவிர அங்கம், மகதம், காசிநாடு, வஜ்ஜி நாடு உள்ளிட்ட பதினாறு முடியரசுகள் இருந்துள்ளது குறித்தும், நாளந்தா பல்கலைக்கழகம் குறித்த விவரமும் இடம் பெற்றுள்ளது.

சத்யாகிரகம் என்ற பேரியக்கத்தை காந்திஜி தொடங்குவதற்கு காரண கர்த்தா யார் என்ற விவரமும் நமக்கு வியப்பைத் தருகிறது.

இந்திய விடுதலைப் போராட்டப் போராளியான டாக்டர் செண்பகராமனைப் பற்றிய செய்திகள் வேறு எந்த வரலாற்று நூல்களிலும் இடம் பெற்றிப்பதற்கு வாய்ப்பில்லை. இப்படி நூலில் காணக் கிடைக்கும் எண்ணற்ற விஷயங்களில் சில நாம் அறிந்தவை, பல நாம் அறியாதவை.

நூலாசிரியர்.திரு. வெங்கட் ரத்னம் 


நமது நாட்டின் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்வதற்கு இந்த நூல் உதவியாக இருக்கும். பயன்பாடுள்ள வரலாற்று நூலைப் படைத்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் நூலாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.



குறிப்பாக போதி தர்மர், பாகுபலி மற்றும் ஜைன மற்றும் பவுத்த சமயங்களின் தோற்றத்தையும் சிறப்பாக விவரிக்கிற இந்த நூல் . அனைத்து வாசகர்களின் இல்லங்களையும் அலங்கரிக்க வேண்டிய ஒன்று. வரலாற்று விரும்பிகளுக்கு ஒரு சுவாரஸ்யமான நூலாகும்.

புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள் இந்   என்ற லிங்கிற்கு செல்லவும்


 
நன்றி - தினமணி நாளிதழ்

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment