Saturday, June 25, 2016

உலகத்தின் தோற்றமும் வரலாறும் - கே. வெங்கட ரத்னம்

                                                                           

       உலகத்தின் தோற்றமும் வரலாறும் என்ற வரலாற்று நூலின் ஆசிரியர்  திரு. கே .வெங்கட ரத்னம் அவர்கள் தற்சமயம் 95 வயது நிரம்பிய நிலையில் இந்த நூலை தன் சுய முயற்சியால் வெளிக்கொணர்ந்துள்ளார். ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரியான அவர் உலக வரலாறு மற்றும் இந்திய வரலாறு தொடர்பாக அவர் இளம் வயதில் சேகரித்த பல தகவல்களை அடிப்படையாக கொண்டு அவருடைய இந்த நூலை அவர் படைத்துள்ளார். அவருடைய அனுபவம் , உலகத்தின் வரலாறு மீதான ஈடுபாடு முழுவதையும் இந்த நூல் பேசுகிறது. வரலாறு சம்பந்தமான நூல்களை விரும்பி படிப்பவர்களுக்கு இந்த நூல் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்பதில் வியப்பில்லை. 

அனுபவம் என்பது விலை மதிப்பற்றது. ஒரு மனிதனின் மனப்பாங்கையும் மற்றும் சமூகத்தின் மீதான அவருடைய கண்ணோட்டத்தையும் ஒரு எழுத்தாளரின் எழுத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.  வரலாற்றை அடிப்படையாக கொண்டு இயங்கும் சமுதாயமாக திகழ்கின்ற நம் கையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய புத்தகம். இது

ஸ்வார்த்தம் சத்சங்கம்



                                                    (நூல் ஆசிரியர் ) கே.வெங்கட ரத்னம்
                                                           வெளியீடு - கவிதா பப்ளிகேஷன்ஸ் 



தனிப்பட்ட முறையில் அய்யா கே. வெங்கட ரத்னம் அவர்களை நன்றாக அறிந்துள்ள முறையில் நமது ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் மூத்த மாணவர் என்பதை தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகிறோம்.
அவருடைய எழுத்தாற்றலையும் , சுய முயற்சியையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த வயதிலும் தளராது எழுத்துப் பணியாற்றும் அய்யா அவர்களின் அனுபவமிக்க இந்த நூல் உலகத்தின் வரலாறு பற்றிய தெளிவை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. 


மேலும் பொக்கிஷம் என்பது மறைந்து விடக் கூடாது. அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற வகையில் இந்த நூல் பற்றிய தகவலை அனைவருடனும் பகிர்ந்து கொண்டு இவருடைய முயற்சியை நாம் ஊக்குவிக்கலாமே. 


மேலும் இந்த நூலை ஆன்லைன் மூலமாக வாங்க விரும்புபவர்கள் http://www.wecanshopping.com/…/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%… என்ற லிங்கிற்கு செல்லவும் . மேலும் இந்த தகவலை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment