Monday, February 10, 2014

தாய் போல நம் நலம் காக்கும் - சர்வாங்காசனம்

 ஆசனங்களின் தாய்-  சர்வாங்காசனம்



உடலின் அனைத்து பாகங்களையும் செம்மைப்படுத்தும் சர்வாங்காசனம் ஆசனங்களின் தாய் என்று அழைக்கப் படுவது மிகவும் சாலச்சிறந்தது ஆகும். தாய் எவ்வாறு தன் சேயின் நலத்தில் அக்கறை கொள்வாரோ அதைப் போல உடலின் அனைத்து பாகங்களுக்கும் சிறந்த ஆசனம் என்று யோகாசனப் பயிற்சி ஆசிரியர்களால் போற்றப்படுகிறது இந்த ஆசனம்




மனம்  
                 இருதோள்கள், கழுத்து

மூச்சின் கவனம்
                    இயல்பான மூச்சு



உடல் ரீதியான பலன்கள்     
                          
  •  நூறுக்கும் மேற்பட்ட உடலியல் பலன்கள் இந்த ஆசனத்தை செய்வதால் கிடைக்கும்
  •  அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவாரணி 
  • தைராய்டு சுரப்பியை நல்ல நிலையில் வைத்து உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது 
  •  இடுப்புப் பகுதியில் உள்ள உறுப்புகளைநல்லவிதமாக தூண்டி பலமடைய செய்கிறது 
  • மூளை நல்ல இரத்த ஓட்டம் பெறுகிறது 
  • கண் பார்வை கூடும் 
  • நோய் எதிர்ப்பு சக்தி கூடும் 



 குணமாகும் நோய்கள் 
  •   வெரிகோஸ்வைன் என்ற இரத்தக் குழாய் புடைத்துப் போகுதல் சரியாகும் 

  • தோல் நோய், ஆஸ்துமா, சைனஸ், காதடைப்பு நீங்கும்.
  • மூல நோய், குடல் வாயு, தைராய்டு குறைவினால் ஏற்படும் நோய்கள், உள்ளுறுப்புகளில் பலவீனம் போன்றவற்றை சரிசெய்கிறது.

  • அஜீரணம், மலச்சிக்கல், மாத விடாய்க் கோளாறுகள் முதலியவற்றிற்கு நல்லது
 ஆன்மீக பலன்கள் 
 
  •  நினைவாற்றல் வளர்கிறது 
  •  மன ஒருமைப் பாட்டிற்கும் சமநிலையான மனதிற்கும் நல்லது 
 
எச்சரிக்கை
                                அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப்படுவோர், முள்ளேலும்பு நகர்ந்தவர்கள், இதய நோய்கள், கழுத்துப்பிடிப்பு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது . ஆசனத்தில் இருக்கும் போது தலையை பக்கவாட்டில் திருப்பி பார்க்க கூடாது.


தொடரும் 
குருஜி .டி.எஸ்.கிருஷ்ணன்

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment