Monday, September 2, 2013

பதஞ்சலி பாம்பின் அற்புதம் ?????????????


மன அமைதிதான் உலக அமைதிக்கு மாபெரும் வழிகாட்டி . அந்த அளவிலே மன அமைதி மற்றும் மன கட்டுப்பாடு இந்த இரண்டையும் இதற்கும் மேலாக  உடலாற்றல், உள்ள ஆற்றல் இரண்டையும் மேம்ப்படுத்தி உண்மை அறியச் செய்யும் பெட்டகமாக பதஞ்சலி யோக சூத்திரங்கள் விளங்குகிறது.  


                                                             
காலம் - பதஞ்சலி பாம்பின் அற்புதம்
மாணவர்களுக்கு மூச்சின் நுட்பங்களை விளக்கும் திரு . கமலக்கண்ணன்

உண்மையில் பதஞ்சலி மஹரிஷி தந்த யோக சூத்திரம் மகான்களின் விளக்கத்திற்கு பிறகும் அது முழுமை அடையாத ஒரு புதிராக விளங்குகிறது. ஒரு சொல் ரீதியான விளக்கம் என்பதும் ஒரு குறிப்பிட்ட அளவிலயே உள்ளது.

தானே அனுபவித்து தானே சாட்சியாக இருந்து அறிந்து கொள்ள முயலாமல் ஒரு புத்தகத்தின் மூலமாக இந்த சூத்திரங்களுக்கு பொருள் தெரிந்து கொள்வது என்பது ஒரு சிறு முயற்சியாகவே அமையும்.
                                                                 


யோக விஞ்ஞானம் தான் பதஞ்சலியின் யோக சூத்திரம்.

அதுதான் முன்னே சொன்னது போல பதஞ்சலி பாம்பின் அற்புதம் 

ஞான சபை என்று தலைவன் பதஞ்சலியால் அழைக்கப்பட்ட  ஸ்வார்த்தம் சத்சங்கம் அந்த யோக அறிவியலை அளவில் சிறியது என்றாலும் தகுந்த அளவிலே அதை மற்றவர்களும் உணரும்படி அந்த பணியை கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறது.
                                                               


அதன் வழிப்படி நமது இருப்பிடமாம் மதுரையில் சுற்றிலும் அமைந்திருக்கும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச  யோகம் +ஆசனம் இரண்டையும் முறையாக கற்றுத் தர முறையான அனுமதி பெற்று செய்து வருகிறது. 

முதல் பயிற்சி களமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டணமில்லா இலவச யோகம் +ஆசனம் பயிற்சி முகாம் நமது ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் மெய்யன்பர்களான ஆசிரியர் திரு . கமலக்கண்ணன் மற்றும் சிவ. உதயகுமார் ஆகியோரால்  ஜூலை 1,2,3 என்று  தொடர்ந்து மூன்று நாட்கள்  நடைபெற்றது. பயிற்சியின் போது மாணவர்களுக்கு யோகம் +ஆசனம் பயிற்சி கையேடு வழங்கப்பட்டது. 

அதன்படி நமக்கு நல் ஒத்துழைப்பை வழங்கிய தலைமை ஆசிரியர் ரபீக் மற்றும் இதர ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றி      



தொடரும் 
சிவ. உதயகுமார் 






































No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment