Tuesday, September 3, 2013

பாண்டியர்கள் வரலாற்றுச்சுருக்கம் - 2 (இருண்ட காலம் )


கி.பி.1310 பிறகு இருண்ட காலம் எனப்படும் கி.பி.1323-1371 வரை:

   கி.பி.1336 விஜய நகர பேரரசு உருவாகிய காலம். கி.பி.1371-ல் விஜயநகர பேரரசின் வாரிசான இரண்டாம் கம்பனர் சுல்தான்களின் நிழல்களைத் தன் பெரும்படையால் விரட்டியடித்து மதுரையை கைபற்றி தன் கட்டுபாட்டில் கொண்டு வந்தார்.


          48 ஆண்டுகளின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மூடிகிடந்த ஆலவாயரின் ஆலயம் திறந்தபோது அங்கே கடைசியாக அர்ச்சித்த பூக்கள் வாடாமலும், இறைவன் மேல் பூசிய சந்தனமணம் செழுமையாய் வீசியதாகவும், இயற்றிய விளக்கு அணையாமல் இருந்ததாகவும், இதைக் கண்ட இரண்டாம் கம்பனர் வியப்பும், பெரும் மகிச்சியும் கொண்டதோடு, இறைவுணர்வும், மேலிட்டு உடனடியாக திருப்பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

   கி.பி.1372-ல் ஆலயம் முழுவதையும் சீர்படுத்தி கும்பாபிஷேகமும்; நடத்தி முடித்தார். இவரை தொடர்ந்து கம்பணயுடையாரின் பேரன் மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோயிலுக்கு சிறப்பான முறையில் கி.பி.1481-ல் குடமுழுக்குவிழா நடத்தியதாக சீதள புத்தகத்தில் கூறப்படுகிறது. 

கி.பி.1481க்கு  பிறகு நாயக்கர் பரம்பரையினர் பலர் மதுரைக்கோயிலை நிர்வகித்தனர்
.
    அதன்பின் கி.பி.1529-1564. விஸ்வநாத நாயக்கர் கோயில் நிர்வாகத்தை அபேஷப்பாண்டாரம் என்பவரிடம் ஒப்படைத்தார். 

கி.பி.1634-ல் திருமலை மன்னர் கோயில் நிர்வாகம் நடைபெறுவதில் திருப்தியடையாமல், விஸ்வநாத நாயக்கரால் நியமிக்கப்பட்ட அபிஷேகப்பண்டாரத்தை நீக்கி தன் சொந்தப் பொறுப்பில் நிர்வாகத்தை எடுத்துக்கொண்டு ஆலயச்சீர்திருத்தம் செய்த கி.பி.1706-1732-ல் விஜயரங்கசொக்கநாதர் மதுரையை ஆண்டார். 

இவர் காலத்தில் குடமுழுக்கு நடந்ததாக குறிப்புகள் இல்லை.

கி.பி.1732-1736 வரை ராணிமங்கம்மாவின் சிறப்பான ஆட்சி, ஆனால் கோயில் குடமுழுக்கு நடத்திய  விபரம் இல்லை. இவர் சாந்தாசாயபுவின் சூழ்ச்சியால் இறந்து பட்டதாக வரலாறு.

கி.பி.1740-ல் சாந்தாசாயபுவை வென்று மராட்டிய மன்னன் முராளிராவ் மதுரையை ஆளுகிறார். கி.பி.1740-ல் (அதே காலத்தில்) மீண்டும் சுல்தான் யூசப்கான் மதுரையை கைப்பற்றினான்.

கி.பி.1801ல் மதுரையை ஆற்காடு நவாப் வெள்ளையர் கம்பெனிக்கு விற்றுவிட்டார்.

கி.பி.1804 முதல் வெள்ளையர் நிர்வாகம்,       ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம், கள்ளழகர் கோயில், பழமுதிர்சோலை, கூடழகர் பெருமாள் கோயில், தென்கரை திருவேடம் கோயில், குருவித்துறை வல்லவராஜப் பெருமாள் கோயில், ஆகிய கோயில் நிர்வாகங்கள் வெள்ளையர் வசம் இருந்தது. வெள்ளைக் கம்பெனியின் சார்பில் அன்றைய கலெக்டர் 'ஊர்டிஸ்' கோயில்களின் நிர்வாகம் அவருடையதாய் இருந்தது. பின், ராமநாதபுரம் முத்துச் செல்லத்தேவர் கோயிலை நிர்வகித்தார். 

அவருக்குப் பிறகு கி.பி.1843-1849 காலகட்டத்தி;ல் 'தன்சிங்' துக்காராம், துவாஜி ஆகியவர்களிடம் திருக்கோயில் நிர்வாகம் சென்றது. இவர்கள் சரியாக நிர்வகிக்காததால் கி.பி.1850 திருஞானசம்பந்தர் மடம், ஆதீனத்தலைவர் ஸ்ரீ ஆறுமுக தேசிகரிடம் ஆங்கில அரசால் நிர்வாகம் ஒப்படைக்கப்படுகிறது.

   பிறகு, கி.பி.1863-ல் இருந்து கி.பி.1922 வரை ஆங்கில அரசு ஐவர் குழுக்களை நிறுவி, நிர்வகிக்கச் செய்தனர். அப்போதும் நிர்வாகம் சீராக இயங்காத தாங்கிய 1922-ல் நீதிமன்ற உத்திரப்படி கரு.வே. அழகப்ப செட்டியாரை ஆலய ரிஸீவராக நியமிக்கப்படுகிறார். 

6.2.1878 ஏழுகோயில் நகரத்தார்கள் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதே வருடம் 1.7.1923 வடக்கு மொட்டை கோபுரம் அமராவதி புதூர் வைநாகரம் செட்டியாரால் பூர்த்தி செய்யப்பட்டது. அதே வருடம் முத்து.கரு.வே. அழகப்ப செட்டியார் அவர்களால் குடமுழுக்கு செய்யப்பட்டது. 28.6.1963-ல் தமிழ்வேல் திரு.பி.டி.ராஜன், அவர்கள் தலைமையேற்று வெகு சிறப்பாக ஒரு குடமுழுக்கு நடத்தியிருக்கிறார்
.
   கி.பி.1974-ல் லே.நாராயணன் செட்டியார் தலைமையில் ஒரு குடமுழுக்கு நடைப்பெற்றதுள்ளது. 

7.7.1995-ல் பி.டி.பழனிவேல்ராஜன் தலைமையில் 18 முக்கிய பிரமுகர்களுடன் சேர்ந்து ஒரு குடமுழுக்கு நடைப்பெற்றது.

குறிப்பு:

     29.3.1937-ல் சில  திருத்தலங்களைக் கொண்ட ஹிந்து அறநிலய பாதுகாப்புச் சட்டம் அமுலுக்கு வந்தது. அதன் பிறகு மேலும், பல புதிய திருத்தங்களுடன் 1951-ல் ஹிந்து அறநிலய பாதுகாப்புச் சட்டம் (இந்துசமய அறநிலய ஆட்சித்துறை என்றப் பெயரில் ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் பற்பல கோயில்கள் இந்த நிர்வாகத்தின் கீழ் சேர்க்கப்பட்டும் இன்றுவரை நம் மதுரை ஸ்ரீ மீனாட்ஷியம்மன் திருக்கோயிலிருந்து இயங்கி வருகிறது.  

   குலசேகரபாண்டிய மன்னனின் மனைவியர் இருவர் சுந்திர பாண்டியன் என இரு இளவரசுகள் ஆவர். இவர்கள் ஆட்சி பொறுப்பிற்குப் பின் மதுரை மூன்று ஆண்டுகள் வளர்ச்சியற்ற, அதேசமயம் பொறுப்பற்ற ஆட்சி நசந்தது என்றெ கூறலாம்.

   இவ்விரு மன்னர்களின் பகை மற்றும் ஒற்றுமைக்குறைவினால் மாற்றாரால்; எளிதாய் மதுரையைக் கைப்பற்ற காரணமாய் இருந்ததெனமலாம். அவ்வகையில் சுல்தான்களின் தளபதியான மாலிக்காபூர். கி.பி.1323 முதல் 1371 வரை கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் மதுரையில் மட்டுமின்றி இதர மாநிலங்களிலும் இந்துக்களுக்கும், இந்துக்கோவில்களுக்கும் இருண்டகாலம் எனவும், இந்துமத கலாச்சார சிதைவுகாலம் எனவும், கூறலாம்.

 தென்இந்திய பொதுக் கலாச்சாரம் மற்றும் இறைவுணர்வுகள் புண்படுத்தப்பட்டிருக்கின்றன.

 புராணச்சின்னங்கள், எழில்கொஞ்சும் கலைநுணுக்கச் சிலைகள், சித்திரங்கள்,கட்டுமானச்சிறப்புமிக்க கட்டிடங்கள் ஆகியவைகள் எல்லா நிலைகளிலும் பாழ்படுத்தப்பட்டு சிதைக்கப்பட்டது என்பதே உண்மை. சீரழிக்கப்பட்ட இவைகளை ஒருநாள் நாம் சீர்படுத்தி விடலாம். ஆனால் இங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்ட, இழந்த நம் புராதன பொருட்செல்வங்களை எப்படி மீட்க முடியும். 

பேரளவில் பொன்னும், பொருளும், கிடைக்கற்கரிய விலைமதிப்பற்ற இரத்தினங்கள், முத்துக்கள், என எத்தனை,எத்தனை இழந்தது இத்தென்னாடு.
ஏழை,எளிய மக்களையும், மாக்களையும் கொன்று குவித்தனர். இவற்றைலெல்லாம் பட்டியலிடுவது இங்கு நம் நோக்கமில்லை.

 எனினும், சரித்திரம் சந்தித்த வரலாறுகளை (உண்மைகளை) வெளிப்படுத்தாது புதைத்துவிட முடியாது. அல்லது மறைத்துவிடவோ முடியுமா?.


  கி.பி.1310ன் தொடக்கத்தில் இருந்தே, தமிழகத்தின் பெரும்பகுதி கோயில்களுக்குப் போதாத காலம் துவங்கியது.

 புகழ்மிகு புராதன ஆலயங்கள், அதன் உற்சவ மூர்த்திகள், மூலவர்கள், அதிசியமும் கலை எழிலும் மிக்கசிற்பங்கள் அத்தனையும், சிதைக்கப்பட்டு தரைப்படுத்தப்பட்டது.

   குறிப்பாக மதச்சின்னங்கள், மதஉணர்வுகள், வேற்று மதவெறியர்களின் செயல்களால் சிதறடிக்கப்பட்டுள்ளன. அவ்வரிசையில் அன்று, அரங்கேற்றப்பட்ட சோமநாதர் ஆலயம், காசிவிஸ்வநாதர் ஆலயம், மதுரை,திருவரங்கம், திருவண்ணாமலை, சிதம்பரம், சிறிய மற்றும் பெரிய கோயில்கள் அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளன.அந்நாளைய  ஆதாரங்கள் கூறும் சில குறிப்புகள்.

1.மதுரை ஸ்ரீ மீனாட்ஷியம்மன் திருக்கோயில்:

   கோயிலின் அர்த்த மணடபத்தின் மூலவர் ஆலவாயரின் லிங்க உருவத்தை எடுத்தும், அன்னை ஸ்ரீ மீனாட்ஷியையும், எடுத்து இடம் மாற்றி, மறைத்து, அவ்வவ் இடங்களில் வேறு உருவங்களை  வைத்தும், பாதுகாத்ததோடு முக்கிய சிலைகளையும், மூர்த்திகளையுமும் பரிவார விக்கிரகங்களையும், நாஞ்சில் நாட்டில் மறைத்து வைத்திருந்தனர். செய்தி மதுரை ஸ்தானிகர் வரலாறு எனும் தொகுப்புலிருந்து கிடைத்தவை.

2. .Administration and Social life under Vijaya Nagar,Madras Univercity Publication. Page:301.  வருஷம் 48க்கு துலுக்காணிமாக இருந்தது. மதுரைக்கு வாய்த்த பொருமானும் நாஞ்சில் போக் பஞ்சாட்சரத் திருமதிலும், பதினான்கு கோபுரங்களும், தெருவீதிகளும், இடிக்கப்பட்டன. அழிவில் தப்பியது அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஆறுகால் பீடம் வரை தப்பியிருந்தது.

3. தமிழ்நாட்டு பாடநூல் வெளியிட்ட 350வது வெளியீட்டில் கி.பி. 1371-ல் மாலிக்காபூரால் பாண்டிய நாடே பற்றி எரிந்தது. கோயில் பகுதிகள் இடிந்து விழுந்தன. மக்கள் படுகொலைக்கு உள்ளாயினர்.

4. மூவேந்த குல தேவமார் சமூக வரலாறு என்னும் நூலிலிருந்து ஆசிரியர் பி.முத்துத்தேவர் எழுதியது. .... மாலிக்காபூர் பாண்டிய நாட்டிலிருந்த 612 யானைகள்,  

தொடரும் 


No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment