சத்குரு மகரிஷி ஸ்ரீ பதஞ்சலியின் யோகதர்ஸன் (யோக தரிசனம் )
இக்கட்டுரையினை படிக்க இருக்கும் பெரியோர்களே, இதை நீங்கள் படிப்பதற்கு முன்பாக என்
தாழ்மையாக எண்ணங்களை சற்று செவிமடுங்கள். இதனை எழுதுகிற போது என் மனம்
குறுகுறுக்கிறது. இதில் காணப்படுபவை யாவும் அடியவனால் எழுதப்பட்டது என்றோ, என் அனுபவங்கள் என்றோ என் கருத்துக்கள் என்றோ எண்ணி விட வேண்டாம். இதில்
வரும் சொற்கள், வாக்கியங்கள், வரிகள், யாவும் வேத உபநிஷத் மற்றும்
பெரியோர்களால் கண்டுகொண்ட அழமான விஷங்களை அருளாளர்களின் கூற்றுகளை சிலவற்றை
சொல்லக்கேட்டும், சிலவற்றை பார்த்தும், படித்தும் சிறிது உணர்ந்தும், அந்த
உணர்விலிருந்து என் நினைவுக்கு வந்தவை. அங்கொன்றும், இங்கொன்றுமாக
சேர்த்து எழுதப்பட்டவை தான் அன்றி அடியேனால் எழுதப்பட்டது என்றோ, என் அனுபவங்கள் என்றோ, நான் ஒருபோதும்
நினைக்கவில்லை.
என் மனம்
இப்போது அமைதியாக இருக்கிறது. படிக்கத்தொடருங்கள்.
எதனால் எது அறியப்படுகிறதோ அதனை தர்சனம், சாஸ்திரம்
என்பார்கள். அவ்விதம் தர்சனங்கள் ஆறு என சொல்லப்பட்டிருக்கிறது. இதனை சாஸ்திரங்கள்
ஆறு என்றும் அழைக்கப்படும்.
சாங்கியம்
யோகம்
நியாயம்
வைசேஷிகம்
பூர்வ
மிமாம்ஸை
உத்ர
மிமாம்ஸை
இவற்றினை
முறையே மகரிஷி கபிலர், மகரிஷி பதஞ்சலி, மகரிஷி கௌதமர், மகரிஷி கணாதர், மகரிஷி ஜைமினி, மகரிஷி வியாசர் ஆகியோர் அருளிச்
செய்திருக்கிறார்கள். இவற்றில் இரண்டு தர்சனங்களை பற்றி சில தகவல்கள் என
கூறுகிறேன்.
தர்சனங்களுள் முதல்
தர்சனமான சாங்கியத்தை கபிலரும், இரண்டாவதாக வரும்
தர்சனம் சற்குரு பதஞ்சலியினுடையதாகும்.
.
சாங்கியம்
வழியைப்பற்றும் சாங்கியர்கள், இறைவன் என்றொருவன் இல்லை என்றே கூறுவதாக உள்ளது. இவர்கள் சித்தாந்தப்படி
ஜீவன் சத்ரூபமாகவும் இருக்கிறான். ஆனால் ஜீவன் ஆனந்த ரூபியாக முடியாது என்பதே
அவர்களின் முக்கியமான கூற்றாகிறது. பல்வேறு எனினும் பல்வேறு தத்துவங்களை கூறும்
அவர்கள் அத்தத்துவங்களுக்கு மேலானது ஜீவன் என்று மட்டும் கூறுகிறார்கள். அதற்கும்
மேல் இறைவன் என்று ஒருவனும் இல்லை என்றே கூறுவதாக உள்ளது.
ஆனால்
மகரிஷி பதஞ்சலி தன் யோக சூத்திரத்தில் இறைவனை ஒப்புக்கொண்டேயாக வேண்டும் என்றும், இறைவன், குரு, சாஸ்திரம், இந்த மூன்றின் மேல் ஸ்திரமாக இதையே அஸ்திவாரமாக வைத்து யோக சாஸ்திரத்தை
உபதேசிக்கிறார். ஆண்டவனையும் , ஆன்மாவினையும் இணைப்பித்தலே, இரண்டும் ஒன்றாகி விடுதலே யோகம் என்று ஆணித்தரமாக தன் நிலைப்பாட்டினை
விளக்குகின்றதாக அஷ்டாங்க யோகசாஸ்திரம் உள்ளது.
வேதமும், உபநிஷதங்களும் ஏனைய சாஸ்திரங்கள்
அத்தனையும் இறைவனை மையப்படுத்தியே கூறுகின்றதை நம் சற்குருவும் கூறுவதில்
வியப்பென்ன இருக்கிறது? இதனையும் கற்றுணர்ந்த
பெரியோர்களே கூறுகிறார்கள்.
மேலும் அத்தகைய யோக சாஸ்திரத்தை முதலில் தந்தவர்
பிரம்மன் என்றும், அந்த சாஸ்திரத்தை மகரிஷி பதஞ்சலி
முதன் முதலில் மண்ணுலகிற்கும், விண்ணுலகிற்கும்
பாஷ்யமாக தந்தவர் என்றும், பெரியோர்கள் உரைக்கின்றனர்.
இது மட்டுமின்றி ஸ்ரீ பதஞ்சலி மொழி ஆய்வு, யோக
முத்திரை, வான சாஸ்திரம் என பல பல நூல்களை அளித்ததற்கு
இடையே மிக உன்னதமான நூல்களாக மூன்றினை தந்துள்ளார். சித்தம் என்பதில் அதன் தோஷத்தை போக்க யோகமும், சப்தம் (ஒலி)
தோஷத்தை போக்க வியாகரண பாஷ்யமும், சரீர தோஷத்தை போக்க
(உடல்) போக்க வைத்திய சாஸ்திரமான சரகத்தையும் அருளினார். ஒலி இலக்கணம் படைத்த
பாணிணி மகரிஷியின் வேதத்திற்கு சற்குரு எழுதிய பாஷ்யமே வியாகரணம் ஆகும்.
இதையே அடிப்படையாக கொண்டு மகான்கள் பரம்பரையாக துதிக்கும் வணக்க
ஸ்லோகத்தில் மேற்சொன்ன கருத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன. அச்சுலோகம்
'யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்
மலம் சரீரஸ்ய து வைத்ய கேன !
யோகபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்
பதஞ்சலீம ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ !!
மனம் என்ற ஒரு மாபெரும் போராட்டக்களத்தில் அறிவு, புத்தியும், இறுதி வடிவமான சித்தம் என்ற மூன்று
கூட்டணிகளின் களத்தில் மானுடம் சுயம் இழந்து சஞ்சித, ப்ராரப்த
கர்மாக்களின் விளைவுகளை ஏற்கச் செய்யும்படியான பிறவினை உண்டு பண்ணும் கன்மாவினை
செயலழிக்கச் செய்வதற்கும், ஆன்ம ஒளியினை உணர்ந்து தன்
தலைவன் இறைவனோடு கலக்கச் செய்யும் மிகச்சிறந்த வழியான யோகக்கலையினை உபதேசித்த ஸ்ரீ
பதஞ்சலியின் மகரிஷியின் சாஸ்திரத்திற்கு மேல் இவ்வுலகில் மானுடத்திற்கு உதவும்
கரங்கள், வேறு எதுவும் இல்லை என்பதே அனைத்து மண்ணின்
அருளாளர்களின், கூற்றாய் உள்ளது. கீதை சொன்ன கண்ணணின்
யோகமும் இதுவே அல்லவா.
ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் சித்த அம்சத்தில் அவரது காலம் வியாசருக்கு சம
காலமான துவாபர யுகத்தின் முடிவில் ஏறத்தாழ 5000 முதல் 6000 வருஷத்திற்குள் இருக்கலாம் என்று கடலங்குடி பெரியவர் நடேச சாஸ்திரிக்ள்
கூறுவதாக உள்ளது. எனினும் பதஞ்சலி மகரிஷிக்கு மூன்று முகங்கள் இருப்பதாக
புராணங்களும், சில சாஸ்திரங்களும் சொல்கின்றன. முதல்
முகம் - ஆதிசேஷன் என்றும், இரண்டாவது முகம் -
கிருஷ்ணாவதாரத்தில் பலராமர் என்றும், மூன்றாவதாக – பதிணெண் சித்தர்களில் ஒருவராக சித்தாம்சத்தில் பதஞ்சலி முனிவர் என்றும்
விளங்குவதால் இவர் வாழ்ந்த காலம் என்றோ, இவர்
ஆயுட்காலம் என்றோ, கூறுவதற்கு என்ன இருக்கிறது.????
ஸ்ரீ பதஞ்சலி யோகம் (இயம, நியம, ஆசன, பிராணாயாம, பிரத்யாகார, தாரணை, தியானம், சமாதி) என்ற அஷ்டாங்க யோகத்தில் 196 சூத்திரங்கள்
எனப்படும் விஞ்ஞான மதத்தின் மன வேதத்தின் பகுதிகள் சமாதி, சாதனா, விபூதி, கைவல்யம்
என நான்கு பாதங்களுள் மானிட தத்துவத்தையும இறையின் சத்திய வடிவினையும்
விளக்குகிறது.
இந்த யோகத்தினை ஒரு குறிப்பிட்ட கால வரையில் கற்க முடியாது என்றும்
இச்சூத்திரங்களுக்கு இதுவரை தற்காலத்தில் உரை செய்தவர்கள் அனைவருமே, ஒரு சவாலாக ஏற்று அவரவர்கள் ஞானத் தெளிவின்படி எழுதியிருக்கிறார்கள். இதன்
புகழையோ, அக்குறள்களின் உண்மையான சரியான விளக்கத்தையோ, முழுதும் கூறி விட முடியாது என்றே, அவரவர்கள்
கருத்தும் தெரிவித்துள்ளனர்.
ஒருவாறாக பெரியோர்களின் விளக்கத்தின்படி இதனை
கற்கலாம் என்றால் விடாத முயற்சியும், வைராக்கியமும், (திட சிந்தை) கொண்ட சாதகர்கள்
தொடர்ந்து அப்பியாசம் (பயிற்சி) இன்றி வெற்றி பெற முடியாது.
ஏற்கனவே சொல்லப்பட்ட
மனக்களத்தின் கண் சதா நிலை கொண்டிருக்கும் புலன்கள் கூட்டும், புயல் போன்று, மனிதர்களை அலைக்கழிக்கும்
கிலேசங்களின் நிலை கொள்ளலிருந்து மீட்டு, மனதை அமைதியடைச்
செய்ய யோகம் ஒன்றே உலக வாழ்க்கை பேரிடர்களில் நம்மைக்காக்கும் மகா சக்தியாகும்
இருவினை:
இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு ஆக்கம், அழிவு, பெருமை, சிறுமை, நன்மை, தீமை, அறிவு, மூடம்
போன்ற ஆயிரமாயிரம் இருமைகளும் அதன் பண்புகளும் பற்றி மனிதர்களுக்கு உணர்த்துவதற்கு
வேதம் அதன் நுணுக்கங்கள் மூலமும், அமானுஷ்ய யோக சித்தி
பெற்ற சித்தபுருஷர்கள் இவர்களாலும், கூறப்பட்ட மேற்;சொன்னவற்றிலிருந்து மீளுதற்கு சொல்லும் வழிகள் தான். மனிதர்கள் சோர்ந்திருக்கும்போதும், தெளிவற்றிருக்கும்
போதும் அவனை அவனால் கண்டுகொள்ளச் செய்யும் தத்துவ
மூலங்களாகும்.
மனிதனின் சாதாரண வாழ்வியல் தத்துவங்களும் அசாதாரண மெய்ஞான தத்துவங்களும்
ஏறத்தாழ மனிதத்தை ஏதோ ஒரு யுத்தியின் வழியில் நடத்திச் செல்வதாக இருக்கின்றன.
எனினும் இவற்றினுள் நிலைத்த அல்லது அழியாத ஒரு பொருளை கண்டு கொள்ளுதலும் அல்லது
அதனால் ஏற்படும் வித்தையை (மிகு அறிவை) சித்தர்கள் நமக்கு பல்வேறு நிலைகளில் உணர
வைத்திருக்கிறார்கள். அவற்றுள் யோகமே மிகசிறந்த அழியாத வஸ்துவான பூரணத்தை காட்டுவதாகும்.
பயிற்சி முறைகளாலும், வைராக்கியம், திடசிந்தை போன்ற தொடர் இயல்புகளாலும் மட்டுமே அணுகுவோர்க்கு அனுகூலம்
தருவதாய் இருக்கும். அரிய யோக வேதம் அல்லது யோகக்கலை அல்லது
யோக சாஸ்திரம் மட்டுமே மனிதத்தின் உண்மையான நிலைத்த வெற்றிக்கு (முக்திக்கு)
வழிவகுக்கும்.
இந்த உடல்
நன்றாக இருக்கும் போதே இந்த உடலைக் கொண்டு நிகழ்த்தக்கூடிய அரிய யோக நெறியை
கற்றுத் தேர்ந்தாக வேண்டும். உடல் நலிவு, முதுமை, பிணி, பிற
சிறு சிறு தொடர் தொல்லைகள் நேர்ந்துவிட்டால் உடலைக் கொண்டு செயல்படக்கூடிய எவையும்
பயன் தராது. இப்பூத உடல் நலமுற்று இருக்கும்போதே
இறையாற்றலை பெறுவதற்கு உகந்த கல்வி முறையினைக் கற்று உள்ளத்திற்கும். உயிருக்கும்
உறுதுணை தேட வேண்டும்.
இதனை திருமந்திரம்
'நிற்கின்ற போதே நிலையுடையான்; கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன்றிலாத மணி விளக்கே.'
என்று கூறுகிறது
அறிவிருந்தும்
- மனமிருந்தும் மனிதர்களை வஸ்துக்களாகப் பார்க்கையில அவர்களை உயிரோட்டமில்லாத
உணர்ச்சியற்ற வஸ்து என்றும், உணர்வுகள் பொங்கும் உயிரோட்டமுள்ள வஸ்து என்றும் இருவிதமாக அறிவையும்
மனதையும் பயன்படுத்தாதவர்களை ஏன் கூறக்கூடாது?
தொடரும்
குருஜி
டி,எஸ், கிருஷ்ணன்
No comments:
Post a Comment