Tuesday, June 29, 2010

அந்த ஒலி ஓம்

ஒரு கால கட்டத்தில் இரண்டு வெவ்வேறு அணுக்கூறுகள் ஒன்று சேர்ந்து  
( H2 +O2 = H2O ) என்ற ஒரு நீர் அணுக்கருவாக மாறின. 

                                                      
இப்படி பல கோடிக்கணக்கான நீர் அணுக்கள் ஒன்று சேர்ந்த மழை மேகங்கள் என்ற நிலையினை அடைந்தது. பிறகு நீர் துளிகளாக மாறி மழையாக பூமியினை அடைந்தது . பிறகு நீர் துளிகளாக மாறி மழையாக பூமியின் மீது பெய்யத் தொடங்கியது. 

இப்படித்தான் பூமி உண்டான காலத்தில் , பிற்காலத்தில் பூமியில் உண்டாகப் போகும்   தாவர இனங்களுக்கும் உயிரினங்களுக்கும் ஆதாரமான தண்ணீர் என்ற ஒன்று உண்டாகியது. 

இப்படி பெய்யும்  மழையின் நீரானது பூமியினை நெருங்க முடியாதபடி, அதாவது மழை நீரானது பூமியினை நெருங்கும் முன்பே ஆவியாகி விடும் அளவிற்கு  பூமியானது  கடுமையான நெருப்புக் கோளமாக இருந்தது.

மழை நீர் பூமியினை தொடவே பல ஆயிரம் ஆண்டுகள்  ஆயிற்று. 
இப்படி தொடர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளாக பூமி குளிர்ந்து ஒரு கடின தன்மையினை அடையலாயிற்று . பூமியின் மேல் ஓட்டின் ஆழம் 40 கிலோ மீட்டர் வரை சென்றது. பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளில் பெய்த மழையின் காரணமாக பூமியின் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீரால்  சூழப்பட்டும், மீது ஒரு பங்கு நிலப் பரப்பகவும்  நீருக்கு  மேல் தோன்றியது.

ஒரு வழியாக பூமியின்  மீது பெய்த மழை நின்றது. இருட்டும் மறைந்தது. சூரியனின்  ஒளியும், வெப்பமும் பூமியின் மீது விழுந்தது. அந்த காலத்தில் ஆகாயத்தில் இருந்து பூமிக்கு வந்து விழுந்து கொண்டே இருந்த விண்கற்களின் வெடிப்பால் ஏற்பட்ட ஒலிகளும் மற்றும் உலகம் சுற்றுவதால் ஏற்பட்ட ஒலியினையும் தவிர வேறு ஒலிகள் என்பது ஒன்று இல்லாமலே உலகம் முழவதும் ஒரே நிசப்தமாக இருந்தது. 

ஒன்று அசையும்போது அதிலிருந்து ஒரு ஒலியும் உண்டாகும் என்பது இயற்கைக் கோட்பாடு.


அந்த ஒலி ஓம் என்று ஒலித்தது என்று ஆன்மீகம் கருதுகிறது. 

அப்போது பூமியில் மலைத்தொடர்கள், எரிமலைகள், வெந்நீர் ஊற்றுகள், நதிகள் என்று பல  உண்டாகியிருந்தன. 

மலைகளில் இருந்து பல நீர் ஓடைகள் தோன்றி சமவெளியில் நதியாகப் பாய்ந்து முடிவில் கடலில் கலந்தன.  மலைகளில் உண்டான நதியானது அது வரும் வழியில் உள்ள பாறை களையும் அடித்துக் கொண்டு வரும்போது அவைகள் ஒன்றுடன் ஒன்று மோதிச் சிதறி மணலாகவும் , வண்டல் மண்ணாகவும் மாறியது. 

                                                                 அதனால் நதியின் ஓரங்களில் விவசாய நிலங்கள் உண்டாயின.
பல எரி மலைகளின் அடியில் உள்ள வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக திரவ நிலையில் இருந்த மக்மா என்ற எரிமலையில் இருந்து வெளியே சீறிப் பாய்ந்தது. இந்த குழம்பானது நன்கு பக்கங்களிலும்  ஒழுகி ஓடின. எரிமலையின் சாம்பல்கள் பல கிலோ மீட்டர்கள் தூரம் வரையிலும் சென்று படிந்தன.

 இந்த எரிமலையின் சாம்பல் விவசாயத்திற்கு ஏற்ற உரமாக மாறியது.
அந்த காலத்தில் உலகின் பல பாகங்களிலும் அதிக அளவில் எரிமலைகள் இருந்தன. ஆனால் பிற்காலத்தில் அவைகளில் பல வெடித்துச் சிதறி மறைந்து விட்டது.
பூமியின் சுழற்சியின் வேகம் மற்றும்  சூரிய வெப்பம் குறைவின் காரணமாகவும் அந்த பகுதிகளில் கடுமையான குளிர்ச்சி நிலை ஏற்பட்டு அதனால் அந்த பகுதிகளில் இருந்த தண்ணீரானது பனிமலைகளாக  உறைந்திருந்தன. 
                                                                                                (தொடரும் )
                                                        
                                                              


                                               

1 comment:

  1. அந்த ஒலி ஓம் என்று ஒலித்தது.now andthen also is still arising.its eternal. To realize that,is the only way to increase the energy level within them.everybody human have the possibility in the planet.
    thanks

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment