Monday, June 14, 2010

ஸ்ரீ சக்கரம்

ஸ்ரீ சக்கரம்
  
ஆன்மீக அன்பர்களால் பெரிதும் போற்றப் படும் சௌந்தர்யலஹரி முதன் முதலில் சிவபிரான் கயிலையில் எழுதியது

 பிறகு மேருமலையில் அதனைப்  புட்பதந்தன் என்ற முனிபுங்கவன் எழுதினார். 


அதனைக் கற்றறிந்த கௌடபாதர் (பதஞ்சலி மகரிஷியின் சீடர் ) 
ஸ்ரீ ஆதி சங்கரரிடம்  எடுத்துச்சொல்லிட  சங்கரர் அதனை மக்களுக்குக் காவியமாக வகுத்து தந்தார்.

செந்தர்யலஹரியைத் தமிழில் மொழிபெயர்த்த வீரைக்கவிராயர் பண்டிதர் அன்னைபராசக்தியின் திருவருள் பெற்ற அருட்கவியாவார்.

இவர் இயற்றிய பலநூல்களில் சாக்தர்கள் போற்றும் வாராகி மாலை , ஆனந்தமாலை  என்ற இரு நூல்களும் அன்னையின் அருட்சக்தியைத்தரவல்லது.

     இக்காட்சியை ஆதிசங்கரரின் 8 வது பாடலில் கூறியிருப்பதை கவிராஜ பண்டிதர் இவ்விதம் கூறுகிறார்.



ஆர் அமுது இன் கடல் வேலி செழும் தரு
        வாய் மணி பம்பிய தீவு ஊடே
    பார கடம்பு அடர் கானில் அருங்கொடை
        பாய் மணி மண்டப வீடு ஊடே
    கோர சிவன் பரமேசன் உன் மஞ்சம், ஒர்
       கூர் பரி அங்கம் எனா மேலே
    சீர் அடரும் பரஞானம் உறும் களி
       தேவர்  அருந்துவர் பூமாதே!

சிவபிரான் தனக்கு எதிராக (யோகநிஷ்டையில்) இருக்கும்போது காமனின் மலர்க்கணைகளை ஏவி நிஷ்டையைக் கலைத்தான்

சிவபிரானின் கோபத்தினால் அவரது நெற்றிக்கண்ணினின்றும் எழுந்த தீப்பொறிகள் காமனை எரித்து சாம்பலாக்கியது. 

அச்சாம்பலிலிருந்து 'பண்டாசுரன்' என்ற அசுரன் தோன்றி தேவர்களையும், தேவருலகையும், துன்பத்திற்குள்ளாக்கினான். இதிலிருந்து விடுபட தேவர்கள் சேர்ந்து வேள்வி ஒன்றை நடத்தினர். 

அவ்வேள்வியினின்றும் மஹாசக்தி அம்சமாக ஸ்ரீ லலிதாம்பிகை தோன்றினாள். 

அவளுக்குரிய சக்கரமே 

ஸ்ரீசக்கரமென்றும், 

சியாமளசக்கரமென்றும், 

லலிதா சக்கரமென்றும் கூறுவர். 


43 முக்கோணங்களையுடைய இச்சக்கரம், மந்திரசக்தி மிகுந்த யந்திர மென்பர். 

பராசக்தியின் முழுவடிவையும், இயங்கு, இயக்கக்சக்தியின் 'சின்னம்' மட்டும்மல்லாமல், இச்சக்கரத்தை முறையாக பூஜிப்பவர்களுக்கு, யாவற்று சக்திகளையும் அடைவர் என்பதை ஸ்ரீ ஆதிசங்கரர் விளக்கியுள்ளார்.

அவர் பல இடங்களில் ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.

1.ஸ்ரீசைலம்: ஆதிசங்கர் சக்ரபிரதிஷ்டை செய்தவிடம்  -        ஸ்ரீ பிரமராம்பாள்.


2.ஜலாந்திரம்: கூர்ஜரம் (திரிபுரமாலினி)

யோகசூத்திர
த்தை  உலகிற்கு அருளிய ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியால் விளக்கப்படும் யோக நிலைகளின் அடிப்படை குறியீடுகள் இந்த சக்கரம் மூலம் வெளிப்படுத்துவதாகக் கூறுவர். 
                                                                                                             (  தொடரும் )  

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment