Thursday, June 10, 2010

அணுவாய் எங்கும் நிரவி அழகாய் மிளிர்ந்தவன்


                      அணுவின் வடிவமே லிங்கம் ஆகும். 


                                    
அணுக்கரு மின் ஆற்றல் கொண்டதாகும்.

 புரோட்டான் என்ற அணுவின் மையக்கருவை (நேர்மின்அணுத்துகள்) 
எலக்ட்ரான் என்ற மின் அணுத்துகள் வலமாக நீள் வட்டப்பாதையிலும் 
 
நியூட்ரான் என்ற மின்அற்ற சிற்றணுத்துகள் இடமாக எலக்டரான்  

எதிர்பாதையிலும்,புரோட்டானைச் சுற்றிவந்தவண்ணமாகவே இருக்கின்றன.
   
 ஒவ்வொரு அணுவும் பிரணவவடிவமாக (ஓம் ) உள்ளதென்பர். 

புரோட்டான் ஸ்ரீ    அகாரமாயும்


எலக்ட்ரான்   ஸ்ரீ  உகாரமாகவும்

  
நியூட்ரான்  ஸ்ரீ    மகாரமாகவும் இருக்கிறது.  


கரமே இறைவன் 

கரம் உயிர் சக்தி

கரம் இருசக்திகள் இணையும் மாயா சக்தியாகவும், இருக்கின்றன.

   மேலும் பிரம்மா, விஷ்ணு, சிவன், மூன்றின் பாங்காய் சிவலிங்கம் 

சேர்ந்திருப்பதால் ஆணவம், கன்மம், மாயை முறையே தொம்பதம், தற்பதம்,
 
அசிபதம்,எனவாகிறது. 
தற்பதம் ஜீவனுக்குள் பரந்து நிற்கின்ற அருட்சக்தி, அசிபதம், மூம்மலம்

நீங்கிய சுத்த ஆன்மாவாகவும், ஜீவனுக்குள் தங்கியுள்ளது. பரவி 

வியாபித்துள்ள அருட்சக்தி கலக்குமிடமாகிறது. 

இம்மூன்று வேத வாக்கியப்பதங்கள் பிரவணத்தின் அணுபதமாகும்.
பிரபஞ்ச தோற்றமாய் விளங்கும் அனைத்துப் பொருட்களும் இவ்வித 

அணுக்கூட்டங்களின்மாறுபட்ட  குணங்களுக்குத் தக்கவாறே பொருட்களும்

தன்மையும் மாறுகிறது. 

எந்த ஒரு தனிமங்களும், அதன் தோற்றப் பரிமாணம்,அடர்த்தி,மற்றும் எடை

வித்தியாசம், ரசாயன குணத் தன்மைகள், இவைகள் யாவும் 

அணுக்கூட்டங்களின் வேறுபாடுகளுக்கு  ஏற்ப அமைகின்றன. 

உதாரணமாக, நியூட்ரான்களின் எண்ணிக்கையைப் பொறுத்து எடை கூடுதல்

குறைவு ஆகும்.

புரோட்டான்களின் எண்ணிக்கையை மாறுபடும் போது தனிமங்களின்

இராசயன குணங்கள் மாறுபடும். 
 இம்மாற்றத்தத்துவத்தின் மையப்படுத்தப்பட்ட அலகே, அணு எண்ணும் 

எடையும், என விஞ்ஞானம் கூறுகிறது.

   முன்பே சொன்னபடி, ஒவ்வொரு அணுவினூள் நடைபெறும் 

அணுச்சலனம் (திருநடனக்கூத்து) இவ்வடிப்படையில் ஒரு 

உலோகத்திலிருந்து மற்றொரு உலோகத்தை உருவாக்க, மாற்ற, மறைக்க

இயலும் என்பதையும், உருக்குலைந்த எதையும் உருவாக்கசெய்தும் 

(உடம்பு உட்பட) அணுமாற்றங்களைச் செய்யும் வழியறிந்துள்ளனர்.

 மனக்காந்த அலைகளை உருவாக்கி அருட்காந்த அலைகளாக்கி, அணுமின்

மாற்றங்களைஉமிழும் சக்திமிக்க வல்லவர்களே ஞானிகள்,

   உற்பத்தி (படைப்பு) என்ற சக்தி, ஒவ்வொரு அணுவும் தன்னிலிருந்து 

தனது உருவமான மற்றொரு அணுவை வெளியிடும் தன்மை படைத்தது. 
அஃதேபோல் நம் உடலிலுள்ள செல்(திசு)களுக்கும், உண்டு.

அஞ், ஞானிகளுக்கு அச்சக்தியை அளிக்கவல்ல சுயம்பு லிங்கங்கள்

ஜோதிர்லிங்கள் 68 என வீர ஆகமம் கூறுகிறது. 

அத்தகைய லிங்கங்களின் முதன்மையானதும் 

உலகில் தோன்றியயாவற்றுலிங்கங்களுக்கும் முன் தோன்றிய லிங்கமே 

(சுயம்பு) நம் மதுரை சொக்கநாதர்  சோமசுந்தரர் எனவிளங்கி,
அன்னை பராசக்தியையும், அனைத்துலகினரையும், சொக்க வைத்த

சொக்கலிங்கம் ஆகும்.
  
அணுவின் ஆற்றலாக, அவ்வாற்றலின் (மூலம்) அடிப்படையாக,

இப்பிரஞ்சத் தோற்றக் கருவான லிங்க வடிவம் (இறைவன்) பராசிவம் 


                        சதாசிவப் பஞ்சமுகத்திலிருந்து


                                                                          

ஈசானம்
தத்புருஷம்,  


அகோரம்,


வாமதேவம்,

 
சத்யோஜாதம்


என ஐந்திலிருந்து 


ஒவ்வொரு முகமும் தன்னிலிருந்து 5 முகங்கள் தனித்தனியே 


வெளிப்படுத்ததியதால்  அந்த இருபத்தைந்து முகங்களும் 


(மஹேஸ்வரவடிவங்கள்) மஹாசதாசிவம்,என்றாயிற்று.

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment