ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்

ஸ்ரீ  பதஞ்சலி  சரிதம் 
 


ஸ்ரீ ராமர் என்று சொன்னவுடன் அவரது இணை பிரியாத பக்த சிரோண்மணி  ஸ்ரீ ஆஞ்சநேய  ஸ்வாமியினை  நினைப்பது போல  ஸ்ரீ நடராஜப் பெருமானை நினைக்கும்போது இருவரின் நினைவு வரும். ஸ்ரீ நடராஜரின் பிம்பமானாலும்  சரி, ஓவியம் ஆனாலும் சரி அவர் அருகே  இந்த இருவரும் கண்டிப்பாக இருப்பார்கள் . பாம்பும் புலியும் இருபக்கம் என்று இந்த இவர்களைப் பற்றி பல சாஸ்திரங்கள் , புராணங்களில் சொல்லப் பட்டுள்ளது. 

இதில் ஒருவருக்கு உடலில் பாதி கீழே பாம்பாகவும், இன்னொருவருக்கு  பாதி உடல் புலியாகவும்  அதாவது, புலிக்கால்களுடன் இருக்கும். பாண்டிய மன்னனுக்காக கால் மாறி ஆடிய  நடராஜர் இவர்களுக்காகவும் கால் மாறி ஆடியுள்ளார்.  இந்த இருவரே ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி  என்றும் , வியாக்ர பாதர்  எனவும் அழைக்கப் படுகின்றனர்.

இந்த இருவரும் நடராஜப் பெருமானின் நடனத்தில் எப்போதும் தங்கள் கண்களையும் , இதயத்தையும் நிலை நிறுத்தி , சதா இறை சிந்தனையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு தொழுத வண்ணம் நின்றிருப்பவர்களாவர்.  ஸ்ரீ பதஞ்சலி  ஸ்ரீ ஆதிசேஷனின் அவதாரம் என்று அவருடைய  வரலாற்றில் பலப்பல  ஆதாரங்களுடன் சொல்லப் படுகிறது. பிரளய காலத்தில் இந்த உலகமெல்லாம் அழிந்த பின் மிச்சமாக  நின்றவர்  என்ற பொருளில் ஆதிசேஷன்  என்ற நாமம் அழைக்கப் படுகிறது. 



திருப்பாற் கடலில் , ஸ்ரீமன் நாராயணனுக்கு படுக்கையாக இருப்பவர்
அனந்தன் என்றால் பாம்பு.

 
நாராயணன் அவர் மேல் படுத்து இருப்பதால் அனந்த சயணன் என்று புராணங்கள் கூறுகின்றன.


நாராயண உபநிஷத்தில் மஹா விஷ்ணுவின் இருதய கமலத்தில் பரமேஸ்வரன் நடனமாடுகிறார் என்பதாக மந்திரங்கள் இருக்கின்றன. . ராமாதவாரத்தில்  ஸ்ரீ ராமச் சந்திர மூர்த்திக்கு, தம்பி லக்ஷ்மணனாக அவதாரம் செய்தார். ஆதிசேஷன் கிருஷ்ணாவதாரத்தில் , அண்ணன் பலராமராகவும் அவதாரம் செய்தவர் ஆதிசேஷனின்  அம்சாவதாரமான  ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியே ஆவார்.
பார்வதி தேவிக்கு கையில் கங்கணமாக விளங்கியவர். அத்ரி மகரிஷியின் மகனாக பதஞ்சலி அவதரித்தார் . இதனால் ஆத்ரேயர் என்றும் அழைக்கப் படுகிறார்.
கோணிகா  என்ற தபஸ்வினிக்கு  மகனாகப் பிறந்த  கதையினைச் சொல்லி பதஞ்சலி என்ற பெயர் வந்ததற்கு வேறு ஒரு விளக்கமும் வருகின்றது.
கோணிகா  அம்மை அஞ்சலி முத்திரையுடன் கூடிய கையில் அர்க்கிய ஜலத்தை வைத்துக் கொண்டு சூரிய பகவானிடம் தனக்கு மகாத்மா வான புத்திரனை அருளுமாறு வேண்ட , அப்போது ஆதிசேஷன் அந்த அஞ்சலி ஹஸ்தத்தில் விழுந்து அவதரித்தார்.

பத் என்றால்  விழுவது என்று பெயர்.

அஞ்சலி செய்த ஹஸ்தத்தில்  விழுந்ததால் அவருக்கு பதஞ்சலி  என்று மாதா பெயரிட்டார்.பதஞ்சலி விஜயத்தில் இது கூறப் பட்டுள்ளது.
இறையனாரின் திருத் தாண்டவம் கண்டு அவரின் பாதத்திற்கு  அஞ்சலி செய்ததால் பாதாஞ்சலி என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். எல்லா யுகங்களிலும் ஆதிசேஷன்  ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் திரு உருவத்தில் இருந்து பல காரியங்களை  தேவர்களுக்கும், மானிடர்களுக்கும் அருள் செய்திருக்கிறார்.
ஸ்ரீ நடராஜ மூர்த்தியின்  தாண்டவத்தில்  எழும் டமருக நாதத்திற்கு  பாணினி  மகரிஷி நாத ரூப விளக்கமாக வியாகரண சூத்ரம் அருளினார். 


இந்த சூத்திரம் மிக சூக்ஷமானதும் , மிக மேதாவிலாஸ
முள்ளோர் மட்டுமே புரிந்து கொள்ளும் நிலையில் அடங்கியது.  

இந்த சூத்திரத்திற்கு  ஸ்ரீ பதஞ்சலி எல்லோரும் கற்றுணரும் வகையில் உரை  எழுதினார்.

மேலும் யோகா சாதனை புரிய பதஞ்சலி யோக சூத்திரம் எழுதினார்.



  1. இயமம்
  2. நியமம்
  3. ஆசனம்
  4. பிராணாயாமம்
  5. பிரத்யாஹாரம்
  6. தாரணை
  7. த்யானம் 
  8. சமாதி  
என்று எட்டு அங்கங்களை கொண்டதால் அஷ்டாங்க யோகம் என்று பெயர் பெற்றது. இதற்கும் பாதாஞ்சலம் என்றும் பெயர் திகழ்கின்றது.

யோகம் என்றால் சேர்க்கை (அல்லது ) இணைப்பு என்று பொருள்.மனதை அடக்கி பரம்பொருளோடு சேர்க்கை ஏற்படுத்துவது. 


பரம்பொருளை நுகர பல யோகங்கள் இருந்தாலும் பதஞ்சலி எழுதிய இந்த நூலுக்கு மட்டுமே இராஜ யோகம் என்று பட்டம் கொடுக்கப் பட்டுள்ளது.


இவர் திரிகரணத்திற்கும்  திருத் தொண்டு என்று                                                    மனதிற்கு யோக சூத்திரமும் ,   

    
வாக்கிற்கு வியாகரண பாஷ்யமும்,      
                                                                                          
இந்த உடல் சம்பந்தப் பட்டவைகளுக்கு  சரகம் என்றும் 


மூன்று மஹா விசேஷமான நூல்களை இந்த உலகிற்கு அருளியவர் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி ஆவார்.

சரகம் என்ற நூலுக்கு ஆத்ரேய சம்ஹிதை  என்ற பெயர் உண்டு.  இந்நூலை  எழுதியதால் சரகர் என்றும் அழைப்பார்.

ஒரு நாள் மாலை மஹாவிஷ்ணு தியானம் செய்து தம் ஹ்ருதய கமலத்தில் சிவதாண்டவத்தை  பார்த்து  ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.  அவர்தம்  மகிழ்ச்சியில்  ஏற்பட்ட உடல் பூரிப்பால் உண்டான பாரத்தை ஆதிசேஷனால்  தாங்க முடியவில்லை.


என்ன ஸ்வாமி !


இன்று  உங்கள் உடல் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த கனமாக இருக்கிறதே ? என்று ஆதிசேஷன்  மஹா விஷ்ணுவிடம் கேட்க  ஏன் ஹ்ருதயத்தில்  பரமேஸ்வரன் நர்த்தனம் பண்ணுகிறார். 



அதுவே  பாரத்திற்கு காரணம் என்கிறார்.  இது கேட்ட ஆதிசேஷன்  மிகவும் மகிழ்ந்து போய்  நானும் அந்த நடனத்தை  பார்க்க வேண்டும் என்ற தனது ஆசையினை வெளிப்படுத்தினார்.  திருமாலும் மகிழ்ந்து சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் நடனத்தைக் கண்டு வர அனுமதி வழங்கினார். அவ்வாறே சென்று  இறையனாரின் நடனத்தைக் கண்டு ஆனந்த  பரவசம்  மேலோங்கி பக்தியில் திளைத்து  தில்லை நாதனின்  பாதத்திற்கு அஞ்சலி செய்தார்.
இதனாலும் ஆதிசேஷன் பாதாஞ்சலி என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

தவஞான சிம்மமான மகரிஷி பதஞ்சலியின்  யோக சூத்திரத்தில் 

சமாதி பாதத்தின் மூலம் சித்தி பெற்றால்


  1.  மற்றவரின் மனதை அறிதல்,
  2. கூடுவிட்டு கூடு பாய்தல், 
  3. நீர் மேல் நடத்தல் ,
  4. காற்றில் மிதத்தல்,
  5. பிராணிகளின்  மொழியினை அறிதல்,
  6. அதி தூர ஒலி கேட்டல்,  


போன்ற சகல சித்திகளும் அடைய முடியும் என்று அவர் நூலின் மூலம் போதிக்கிறார். 



TRANSLATE

Click to go to top
Click to comment