அன்னை மாதங்கி 🦜🦜அருள் - 2
ஏகாந்தமாய் நான் இருந்து
நினைவற்ற நினைவினில்
இருத்திட எத்தனித்து...
என்னை உனதாக்கும்
ஏற்றத்தின் முயற்சியில்
கரைந்தவன் காரிருள் மத்தியில்...
மத்தியில் தான் சிக்கி
மௌனமெனும் அகத்தில் கரைந்து
பின்பு விழித்தெழும்...
விழித்திடும் அந்நிலைகள்
யாவற்றும் பேசா சிந்தையும்
நாழிகையில் எனதாகிட
இயல்பினில் மழலை போல்
பின்னெழும் இன்பங்கள் எல்லாம்
எண்ணங்கள் வழியே………….
அன்பே இனியவளே
நாளும் உன்னால்
எனக்குள் மகிழ்வே நீயாக...
தவ மாதங்கி |
கனமற்ற கணங்களைப் படைத்து
ககனத்தில் இருத்தி
கவனத்தில் காலம் கழிந்திட
இன்னவன் இக்காலம் தனில்
புரிந்திட்ட பிழை எல்லாம்
மழலையின் செயல் என……..
அம்பிகை அமுத காரிகை நீயும்
அளவற்ற கருணை கொண்டு
மறந்திட்டு செய்திடுவாய் நலம்...
மகிழ்வின் பின் துயர் என
மாயம் செய்கின்ற மனதை
என் மாதங்கி உன்னருளால்...
புனிதத்தை பின்தொடரும்
புத்துயிர் சிந்தனை தம்மால்
சீர்நிலை செய்திடுக அம்மா
மனோன்மணி மகேஸ்வரியாம்
மாத்ரே என் மாதங்கியே
லலிதை வாலை வாராஹி என
நாளும் வணங்கி செழித்திட
வரம் பெற சித்தம் உடையதாய்
சிந்தனையில் செய்திடுவாயே
சிவசக்தி என்னை சிறப்புறவே
மாதங்கி சரணம்
ஆக்கம்
(மாதங்கியின் மைந்தன்
சிவ.உதயகுமார் )
No comments:
Post a Comment