அன்னை மாதங்கி அருள் - 1
நேற்றெனும் ஞாயிறு பொழுதில்
நெல்லை தந்த தித்திப்பு
அன்னையே 🦜🦜உந்தன் அகக்காட்சி ஆயுள் உள்ளவரை இனிக்கும்....
அன்னை சியாமள மாதங்கி |
அல்லல் தீர்க்கும் அன்னையாம்
அருமை சியாமள மாதங்கியின் 🦜🦜
தங்க நிறத் தரிசனம் தரணியில் ஓர் தனித்துவம்...
சித்தாற்றலின் செல்வியாம்
சிவத்தின் நாயகி சியாமளாதனை
சிந்திப்போர் நினைவகத்தில் 🤔செந்தேனாய் செந்தமிழாய் சுவை தரும்...
எண்ணிலடங்கா இன்பம் தந்தாய்🙋🙋
ஏற்றம் தரும் வாழ்வை தரவே
அன்னையே எமை அழைத்து அன்பெனும் அருள் அமுதூட்டினாய்....
கதிரவத் திங்களில் அன்னை
உந்தன் கனிமுக தரிசனம்🙏🙏
அந்த அஞ்சுக கவசத்தின் அழகியல் தோற்றம் எல்லாம்...
உயிரொளி உலவிடும் காலம் வரை
உதயனின் 🌄நெஞ்சத்திலே நாளும் விரைந்து வரும்
கவிமேகமென அவனுள்ளே அகமகிழ்த்திடும்....
கடம்பவன🌳🌳 சோலைக்குள்ளே நாளும்
வல்லகி வீணை மீட்டிடும் காதல் வாணி
ஆகாயம் தொட்ட இன்பம் அளிக்கும் அற்புதமாம் 👧ஆனந்த யோகினியே....
அன்னையே🦜🦜 சியாமள மாதங்கீ
என்னகம் உன்னால் நிறைவாகட்டும்
(ஆக்கம்✍ : மாதங்கியின் மைந்தன்)
சிவ.உதயகுமார்
இடம் : நெல்லை
தரிசன நாள் : ஆவணி 2022
No comments:
Post a Comment