வணக்கம்,
ஆச்சாரியார் டி.எஸ்.கிருஷ்ணன்
அவர்களின் நீண்ட கால முயற்சியான ஸ்ரீ ராஜ மாதங்கி என்ற வரலாற்று நூல் வெளியீட்டு
விழா எளிமையான முறையில் நடந்தேறியது. ஆச்சாரியார் குருஜி டி.எஸ்.கிருஷ்ணன்
அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த புத்தகத்தின் பிரதிகள் ஆன்மீக அன்பர்களுக்கு
இலவசமாக வழங்கப் பட்டன.
அனைவருக்கும் இலவசமாக வழங்குவதற்கு
ஆகும் பதிப்புச் செலவு என்பது சாத்தியமற்ற ஒன்று என்பதின் காரணமாக அனைத்து
தரப்பினரையும் சென்றடையும் வகையில் இந்த ராஜ மாதங்கி நூல் தினமலர் ஆன்மீக பிரிவான
(temple.dinamalar.com)இணையதளத்தில் (வெப்சைட்டில் ) வெளியிட ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும்
நமது சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் வலைத்தளத்திலும் வெளியிட இருப்பதால்
அனைவரும் படித்து பயன் பெற வேண்டுகிறோம்.
(பின்குறிப்பு : நூல் பிரதிகள்
எதுவும் இருப்பு இல்லை என்பதால் தயவு செய்து யாரும் நூலைக் கேட்டு தொலைபேசியில்
தொடர்பு கொள்ள வேண்டாம் என்று உங்களை கேட்டுக் கொள்கிறோம்)
No comments:
Post a Comment