நீண்ட இடைவெளிக்குப் பின் வலையுலக வாசகர்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ச்சியான அமைப்பு ரீதியான பணிகளின் காரணமாக நின்று விட்ட ஆன்மீக எழுத்துப் பணியானது சத்குருவின் ஆசியுடன் இனி இனிதாக தொடரும் என்று நம்புகிறோம். நன்றி
ஜூன் 21 ஆம் தேதியில் சர்வதேச யோகா தினம் நமது மதுரையில் ஸ்வார்த்தம் சத்சங்கத்தினால் வெவ்வேறு இடங்களில் கொண்டாடப் பட்டது. பொதுவாக பள்ளி கல்லூரிகளில் யோகா விழிப்புணர்வு தினமாக நமது சங்கத்தினால் கொண்டாடப் படும் நிகழ்வு இம்முறை ஐடி பணியாளர்கள் மற்றும் ஆலை ஊழியர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் சிறப்பாக நடை பெற்றது.
நமது யோக கேந்திரத்தின் யோகப் பயிற்சியாளர் திரு. கமலக்கண்ணன் மற்றும் உதயகுமார் அவர்கள் விழிப்புணர்வு முகாமை ஏற்பாடு செய்து நடத்தினார்கள் .
|
மதுரை சாக்ஸ் நிறுவன ஊழியர்களுடன் |
|
ஐடி நிறுவன ஊழியர்களுடன் |
|
|
|
|
|
|
சிறப்பு விருந்தினர் வி. பொன்ராஜ் (முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் ) உடன் கமலக்கண்ணன் |
|
சிறப்பு விருந்தினர் வி. பொன்ராஜ் (முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் ) உடன் செயலாளர் உதயகுமார் |
மேலும் மதுரையில்திருநகரில் அமைந்துள்ள ஆயுஷ்மான் ஆயுர்வேதிக் நிறுவனத்தின் யோகா தின விழாவில் திரு.கமலக்கண்ணன் மற்றும் உதயகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரு. கமலக்கண்ணன் அவர்களுக்கு ஆயுஷ்மான் ஆயுர்வேதிக் நிறுவனத்தின் சார்பில் சிறப்பு விருந்தினர் வி. பொன்ராஜ் (முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் ) கையால் விருது வழங்கப் பட்டது.
வருங்காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் யோகா பயிற்சியை கொண்டு சொல்வதில் முன்னெடுப்போம் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
thanks
c.s.udaya @udayakumar
No comments:
Post a Comment