Tuesday, November 18, 2014

மூவரின் கேள்விகளும் குருவின் முத்தான பதில்களும்

 சென்ற பதிவின் தொடர்ச்சி ......................



 சிவ. உதயகுமாரின் கேள்வி  – 

 ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி யோக சூத்திரங்களை ஏன் , எதற்காக எழுதினார்?


பதில்- அ)    ஓவ்வொரு தனிப்பட்ட ஆன்மாவும், இக பர வாழ்வில் பயனுற வேண்டி யோக சூத்திரம் எழுதினார்.

 
ஆ) மனிதனை விலங்கு நிலையில் இருந்து  மனித நிலைக்கும் ,மாமனித நிலைக்கும்   உயர்த்த யோக சூத்திரம் எழுதினார்.

                                                       
சீடர்


 
இ) உடல் வேறாகவும், மனம் வேறாகவும் செயல்படுவதால் மனிதன் பாவ புண்ணியங்களுக்குப் பயனாளி ஆகின்றான். எனவே மனமும் ,உடலும் ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்பதற்காக யோக சூத்திரம் எழுதினார்.


ஈ) ஒவ்வொரு மனிதனுக்கும், விருப்புகளும்,வெறுப்புகளும் இன்பங்களும்,துன்பங்களும் ,வெற்றிகளும், தோல்விகளும் உள்ளன. இவற்றில் இருந்ததெல்லாம் விடுபட்டு நடுநிலை என்ற என்றும் நிலைத்திருக்கும் பேரானந்தத்தை அனுபவிக்க யோக சூத்திரம் எழுதினார்.


உ) மேலும் மனித வாழ்வினை மேம்படுத்தி அமைதி,இன்பம்,திருப்தி என்ற நிலையான இன்பங்களை வாழ்க்கையில்  அடையும் வழியினை காட்டுவதற்கே யோக சூத்திரம் எழுதினார்.


ஊ)     மனிதன் இவ்வுலகில் நிறைவான மகிழ்ச்சியினை தவறான இடங்களில் தேடிக்கொண்டு இருக்கிறான். அது அவனிடமே (தன்னிடமே) ஒளிந்துள்ளதை கண்டுபிடிக்க  தெரியவில்லை. அதற்கு வழியும்,உபாயமும் மஹரிஷிபதஞ்சலி தனது யோக சூத்திரத்தில் கூறியுள்ளார்.




சாதகர் வெங்கடராமனின் கேள்வி 

 யோக வகைகளை பற்றி கூறுங்கள்?


பதில்-  முக்கிய  யோகங்கள் மூன்று வகை எனப் பெரியோர்கள் கூறுகின்றனர்.
பக்தியோகம்,கர்ம யோகம்,ஞான  யோகம்  என்று அவை பிரிக்கப் படுகிறது.  

                                                
     இதில்  பக்தியோகத்தை ஒட்டியே ஜப யோகமும், தீவிர யோகப்பயிற்சி என்ற க்ரியா யோகமும் சித்திகளை உள்ளடக்கிய ஹதயோகமும் உள்ளன என்பதை ஞானியர்கள் உணர்த்தியுள்ளனர்.எல்லாவற்றிற்கும் அடிப்படை யோகமான மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலியின் ஞான யோகத்தை ராஜயோகம் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.


 பக்தர் கணேஷ் குமாரின் கேள்வி -
 ஸ்வார்த்தம் சத்சங்கம் யோகப்பயிற்சியினை எவ்வாறு அளிக்கிறது?


பதில்-    சாதகர்களின்  பயிற்சித்திறன்  மற்றும் அவரவர்களின்   நிலைகளுக்கு ஏற்ப தேவைப்படும் யோகத்தின் பல பகுதிகளை  ஒன்றுபடுத்தி, உபதேசமாய் அளிக்கிறது. 

 இதற்கு உதவுகின்ற வகையில் உபநிஷத், ஜபயோகம்,   அவ்வை முனியின் ஞானக்குறள், கீதையின் முக்கிய பகுதிகள், ஸ்ரீ ரமணரின் உந்திபற,  சித்தர்களின் பாடல் திரட்டுகள்,            ரிஷிகளின்  நாடி உரைகள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும்  விளக்கங்கள் அளிக்கப்படுகின்றது.  

எனினும் யோக பாடங்கள் , யோகப்பயிற்சிகள் ஆகியவற்றை மஹரிஷி  ஸ்ரீ பதஞ்சலியின்  யோக மார்க்கம் கூறும் வழிகளில்  மட்டுமே  பயிற்றுப்பாடங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது.






No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment