Saturday, April 5, 2014

விதியை வெல்ல வேண்டும் மதி !

ஞான சபை - நம்மை ஆளும் நவ கிரஹங்கள் - பகுதி -3 





நவ கோள்களின் அமைப்பு என்பது ஒரு அடிப்படையான விஷயம், அது விளக்கிகூறப்படவேண்டிய வரிசையில் அதைக்கொண்டுபோய் ஜோதிடம் என்ற பெயரில் வான சாஸ்திரத்தில் அதை சேர்த்து விட்டார்கள்
வானசாஸ்திரத்தின் அடிப்படைதான் ஜோதிடம்.




இந்த ஜோதிடத்தில் நவகிரகங்கள் எப்படி மனிதனை கட்டுப்படுத்த இயலும் என்பது அதிகம் படித்த இன்னும் பலருக்கு அந்த சந்தேகம் இருக்கிறது. அந்த தீர்வையெல்லாம் அவர்கள் ஆன்மீக வழியிலே வராத வரை அவர்களிடம் நாம் சொல்ல முடியாது.

பொதுவாக இத்தகையவர்கள் தங்களுடைய ஜாதக புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒரு ஜோதிடரிடம் செல்வார்கள். அவரிடம் தங்களுடைய ஜாதகத்தை காட்டி எனக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும் என்று கேட்பார்கள்.

அவர்களிடம் அந்த ஜோதிடர்  உங்களுக்கு இன்ன திசை நடக்கிறது,இன்ன புத்தி நடக்கிறது ,அதனால் இது வந்தது, உதாரணமாக ஏழரைச்சனி. ராகுதிசை.அட்டமத்து சனி என்றவாறு அந்த ஜாதகருக்கு உரியதை சொல்வார்கள். அதில் இதை செய்யாதீர்கள். அதை செய்யாதீர்கள் என்று கூறுவார்கள்


அந்த திசை மற்றும் அதனால் துன்பம் வர எது காரணமாக இருந்தது என்று சிலரை தவிர பெரும்பாலானவர்கள் அதை சொல்லமாட்டார்கள், இவர்களும் அதை கேட்க மாட்டார்கள்.

ஒருவன் தனக்கு ஞானம்  கிடைக்குமா என்று தன்னுடைய ஜாதகத்தை வைத்து ஒரு ஜோதிடரிடம் கேட்டால் வெகு சிலரை தவிர பெரும்பாலான ஜோதிடர்கள் ஜாதகனுடைய அமைப்பில் ஞானம் கிடைக்குமா .அதற்கான வாய்ப்பிருக்கிறதா அதற்கான காலம் எப்போது என்று எனக்கு தெரிந்து கூறியதில்லை

மோட்ச கோள் எவ்வாறு இருக்கிறதுபொதுவாக குருவின் பார்வை எவ்வாறு இருக்கிறது, குருவின் பார்வையினை திருமணம் அமைவதற்கும். செல்வ வளத்திற்கும் அதன் அடிப்படையினை ஜாதகத்தைதான் கூறுவார்களே தவிர அந்த குருபார்வை இவனுடைய காலத்திற்கு பிறகு ஒரு நல்ல பிறவிக்கு எவ்வாறு துணைசெய்யும் போன்றவற்றின் அடிப்படையில் அவர்கள் கூறவும் மாட்டார்கள் இவர்கள் அதை கேட்கவும் மாட்டார்கள்.


வெகுஅரிதாக ஒரு சிலர்  அய்யா எனக்கு நிறைய செல்வம்இருக்கிறது

, எனக்கு நிறைய கடமை இருக்கிறது ? நான் இறந்து விடுவேனா? எவ்வளவு காலம் இருப்பேன் என்று கேட்பார்கள். மிகவும் பாதுகாப்பு,பத்திரம் என்ற தேவையான நிலைக்கு தள்ளப்பட்ட  ஒரு சிலர் தான் இதையும் கேட்பார்கள், பெரும்பாலும் என்னுடைய மரண காலம் எப்போது என்று பெரும்பாலானோர் கேட்க மாட்டார்கள்.

இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் கோள்களின் அமைப்பு மிகவும் சாதாரணமானதில்லை, இத்தகைய கோள்களுக்கு அன்னை பராசக்தி சுப்ரிம் பவர் என்றால் வேறு யாரெல்லாம் அதற்கு கீழே என்ற கேள்வி வரும்.



நான் முன்பே கூறியது போல ஒரு காரியத்தை மேற்கொள்ள ஒருவரை நியமித்து விட்டு பின் அவர்களை கண்காணிக்க ஒரு அதிகாரியினை நியமிப்பது போல இந்த நவ கோள்களுக்கும் அவர்களை ஆட்சி செய்ய தேவதைகள் இருக்கிறார்கள், மேலும் இந்த நவகோள்களை அதிகாரம் செய்ய நவ தேவதைகள்இருப்பதை போல அவர்களுக்கும் மேலே அவர்களை ஆட்சி செய்ய ஒரு ஆன்மீக சக்தி ஒன்று அன்னை பராசக்தியினை போல சக்தியினை பெற்றிருக்கிறது.

அந்த சக்தியாக ரிஷிகள் இருக்கிறார்கள்.

கோள்களின் நிலை சரியாக இல்லாத கால கட்டத்தில் நாம் சரணடைந்து விட்டிருக்கும் ரிஷிகளான குருமார்கள் நம்மை அவர்கள் வழிநடத்துவார்கள், மந்திர உபதேசம் அளிப்பார்கள், குருதேவா என்னுடைய வேதனையான மனதினால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றால் அவர்கள் தன்னுடைய சக்தியினை அளித்து அவனை துன்பங்களில் இருந்து காப்பாற்றுவார்கள்.


ஓர் உன்னத உதாரணம் 

                                                               
நன்றி - தினமலர்.காம் 
பரிட்ஷித்து மகாராஜா வெறும் 7 நாட்கள் தான் உயிரோடு இருக்ககூடிய சாபத்தை பெற்றார். இருந்த போதிலும் அவர் கலங்கவில்லை.அவன் தன்னுடைய குருவிடம் சென்றார்.

குருவே !
நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவனுடைய குருநாதர் மரண காலம் எப்போது என்று பெரும்பாலனோர்க்கு தெரியாது.ஆனால் உனக்கு 7 நாட்களில் மரணம் என்று தெரிந்திருக்கிறது. 

இருந்த போதிலும்அந்த 7 நாட்களில் உன்னுடைய முக்திக்கு  வழி தேடிக்கொள் என்று அவர் மு்லமாக அனைவரும் பயன் பெறக்கூடிய பாகவதத்தை வெளிக்கொண்டுவந்தார். பாகவதம் கேட்ட பரிட்ஷித்துவும் முக்தி அடைந்தார்

எவ்வாறாயினும் கோள்கள் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

அப்படியென்றால் நான் எதற்கு ஜாதகம் பார்க்க வேண்டும். கோள்களினால் எனக்கு வரக்கூடியது வரட்டுமே.நடப்பது தான் நடக்கும் என்ற விரக்தியான மனநிலை கொண்ட சிலர் நமக்குள்ளேயே இருக்கிறார்கள். 

அவர்களிடம் போய்க்கேட்டால் ஜாதகத்தில் உள்ளபடி நடப்பது நடக்கத்தான் செய்யும் என்று கூறுவார்கள்.  இதற்கு துன்பங்களில் இருந்து நிவாரணம் தேடக்கூடாதா, பரிகாரம் என்பது வேறு நிவாரணம் என்பது வேறு. நிவாரணம் தேடுவது தவறில்லை.

கோள்களினால் நடப்பது நடக்கத்தான் செய்யும் என்றால் நவ கோள்களிற்கு ஆட்சி செய்பவர்களாக விளங்கும்தேவதைகள் எதற்கு , அந்த தேவதைகளை ஆட்சி செய்யும் குருமார்கள் எதற்கு, எல்லாவற்றிற்கும்மேலாக சுப்ரீம் பவராக விளங்கும் அன்னை பராசக்தி எதற்கு,

இதற்குத்தான் அறிவு ஆதாரம் என்ற மதி நமக்கு வேண்டும் என்பார்கள் பெரியோர்கள், மதி என்ற அறிவு ஆதாரத்தின் மூலம் உனக்கு மெய்ஞானம்  கிடைத்தால் அந்த துன்பத்தில் இருந்து வெளியேறுவதற்கு வழி ஒன்று கிடைக்கிறது,

மிகப்பெரிய குற்றம் செய்தவன் முனிவரால் சபிக்கப்படும்போது அவன் அவரிடம் அந்த சாப விமோசனம் கேட்டு கதறுவான், கெஞ்சுவான்.
ஐயா, நான் அறியாமையால் தீங்கிழைத்துவிட்டேன், எனக்கு விமோசனம் கிடையாதா என்பான். 

அதற்கு அவர், இன்ன காலம், இப்படி ஒருவர் வருவார், அவர் வரும்போது உனக்கு விமோசனம் கிடைக்கும் என்று ஆசிகூறுவார்,
சாபம் பெற்றவனும் தவத்தில் ஈடுபட்டு அந்த காலத்திற்காக. அந்த ஒருவரின் வருகைக்காக காத்துக்கிடப்பான்,


இப்படியும் சிலர் இருக்கிறார்கள், சபித்தால் சபிக்கட்டும், பாம்பாக இருக்க வேண்டுமென்றால் நான் பாம்பாக இருந்துவிட்டுப்போகின்றேன் என்பார்கள்.
மற்றவர்களால்அவ்வாறு இருக்க முடியாது. ஏனென்றால் உனக்கு அதை புரிந்துகொள்ளும் ஞானம் வேண்டும்.

சீடர்களை நோக்கி கூறியது  


அதனால் கோள்கள் என்ன வேண்டுமானலும் செய்யட்டும், நடப்பது நடக்கட்டும் என்றெல்லாம் இருந்து விடலாமா என்பதை யோசித்துக்கொள்ளுங்கள்.

எந்த ஒரு உயிருக்கும் நாம் தகுந்த மரியாதையினை செய்ய வேண்டும், அந்த பண்பு நமக்குள் ஏன் இல்லை, பண்பற்ற தன்மை நம் வீட்டில் தான் ஆரம்பிக்கிறது, உறவுகளுக்குள் மரியாதை குறைந்து விட்டது, இதெல்லாம் கோள்களின் செயல்பாடுதான்.


கோள்கள் அவ்வாறு நிர்ணயித்தப்படி இயங்கட்டும். என்னவேண்டுமானலும் நடக்கட்டும், எந்த துன்பம் வந்தாலும் அதில் இருந்து மீளுவதற்கு ஒருவழி உள்ளது என்பதை அறியுங்கள்.

இங்கே ஒருவர்க்கு பயம் வந்து விட்டது. 

அவர்  யோசிக்கிறார். இவ்வாறு நான் சொல்வதால் நம்மைத்தான் மனதில் வைத்து சொல்கிறாரோ என்று நினைக்கிறார். நமக்கு எதிராக எதுவும் நடந்துவிடுமோ என்று நினைக்கிறார். 

அவ்வாறெல்லாம் நடப்பதற்கு ஒன்றுமில்லை, எதையும் எதிராக நினைக்காதீர்கள்.

எந்த ஒன்றையும் சரியாக புரிந்து கொண்டு ஜென்ம சாபல்யம் அடையத்தான் நாம் ஆன்மீகத்தில் இருக்கிறோம்.

 நாம் நினைத்தது.நாம் விரும்பியது, நடக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பதை விட்டு விட்டு, இறைவன் நடத்துகிறான் அவன் கைகளில் நாம் சிறந்த கருவியாக விளங்க வேண்டும் என்று முயற்சிப்போம். அவ்வாறு நாம் 
இருந்தால் எவ்வளவு ஆனந்தம் இருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள்.


தொடரும் 





No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment