Thursday, May 30, 2013

ஆன்மீகத் தமிழர்களின் இதயம் - மதுரை மாநகர்

மதுரை நகர்ச்சிறப்பு
கோயில் நிலப்பரப்பு 15 ஏக்கர். வெளிச்சுவரின் நீளம் சுமார் 847 அடி, அகலம் 792 அடி.திருவிளையாடல் புராணம்-திருநகர்3-ல்


பாண்டியநாட்டைப் பெண்ணாக உருவகப்படுத்தியவண்ணம். இவ்வுலகு ஒரு அழகிய பெண்ணின் மார்பில் ஒளிவீசும் பதக்கம். பாண்டிய நாட்டிலுள்ள ஏனைய பிற நகரங்களாகும். பதக்கத்தின் நடுமையமாக விழிபறிக்கும் ஒளிவீசித் திகழும் சிறந்த மாணிக்கக் கல்லே மதுரை நகர் ஆகும்.


வடுவின் மாநில மடந்தைமார் பிடைக்கிடந் திமைக்கு
படுவிரலாமே பாண்டி நாடார மேற்பக்கத்
திடுவின் மாமணியதன் புற நகரெலா யிவற்றுள்
நடுவினாயக மரமணி மதுரை மாநகரம்
- பரிபாடல்மதுரை நகரின் தெருக்கள் தாமரை மலரின் உள்ளிதழ்களைப் போல் அடுக்கடுக்காக அமைந்துள்ளது. ஸ்ரீ மீனாக்ஷியம்மை கோயில், தாமரை மலரில் நடுவில் உள்ள மகரந்தத் துகள்களைப் போல் அமைந்துள்ளது. தாமரையை நோக்கி வாழ்வு தேடிவரும் இரவலர் கூட்டம் தாமரையில் தேன் பருக வரும் வண்டுகளுக்கு ஒப்பாவார்.வையை (வைகை) ஆறு, பண்டைக்காலத்தில் வற்றாத நீர்வளமையுடன் பரந்திருந்தது. ஆற்றின் வெள்ளம் பலகாலங்களில் கரை மீறிப் பெருக்கெடுத்துவரும் போது, கரையோர மக்கட்குத் துயர் நேராதிருக்கும் பொருட்டு அவர்களைக் காப்பதற்க்கென கரைகாவர்கள்என்ற பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.


குறிப்பு:    

 இன்றைய மதுரை கிராமப்பகுதிகளில் கரைகாரர்கள்எனப்படுபவர்கள்தான், அக்காலகரைகாரர்கள் வரிசையில் வந்தவர்கள் செல்வம், புகழ், பொறுப்புணர்வுமிக்கவர்களின் வாரிசுகள்தான் இன்றய மதுரை கிராமப்பகுதிகளில் கரைகாவர்கள்”. முதல் மரியாதைக்குரிய நிலஉடைமையாளர்களாக இருந்தவர்களாகும்.
சிலப்பதிகாரம்

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் 13:179-180. வையை ஆற்றின் ஒடப் போக்குவரத்து பலவகைப்பட்டதெனவும், அவ்வோடங்களின் முகப்புகள் குதிரை, யானை, சிங்கம், முகங்களைக் கொண்டதாயிருந்திருக்கிறதெனவும், அவ்விடம் பல கட்டுமரங்களும் இருந்து வந்ததெனவும் கூறுகின்றது. 


வையை என்ற பொய்யாக்குலக்கொடி”-

புலவர் -நாவில் பொருந்திய பூங்கொடி வைகை நதி  எனப் புகழ்கிறார்.


பழங்காலத்தனியார் பாராட்டு


கி.பி. முதல் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த pliny பிளினி மற்றும் கி.பி.140-ல் வாழ்ந்த Tolemy தாலமி போன்றவர்களால் எழுதப்பட்ட நூல்களில் மதுரையின் சிறப்பு விரிவாகக் குறிப்பிட்டுள்ளனர். 


வரலாற்று ஆசிரியர்புகழுரை

சிறந்த மேனாட்டு வரலாற்று ஆசிரியர் ஷெனாய் (shenoy)  அவர்களின் நூலில் (Madurai the temple city)திராவிட நாகரிகம், பண்பாடு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் திகழ்கிறது.   

                      “Madurai is the Athems of south India”.. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் நகரம் மதுரையாகும், என குறிப்பிட்டிருக்கிறார்.

 தகவல்கள் புலவர் சி.இரா.சாரநாத்.
(Madura-dt.gazetteor) கீழ்க்கண்ட செய்திகள் ரோமானியர்களுக்கு         மதுரை நகரில் ரோமானியர்குடியிருப்பு ஒன்று இருந்திருக்கிறது


கி.பி.1839-ல் மதுரைக்கு அருகில் உள்ள திருமங்கலத்தில் அகழ்ந்த ஆய்வில் (solidus of zero) கண்டுபிடிக்கப்பட்டது.  


கி.பி.27-ல் அகஸ்டாஸ்சீஸரிடம், (ரோமானிய சக்ரவர்த்தி) பாண்டியஅரசன் தூது அனுப்பியுள்ளான்.  அம்மன்னனின் தங்க-நாணயங்கள் 63-ம், பலவித நாணயங்கள் மதுரை மாவட்டத்தின், பழனிவட்டத்தைச் சேர்ந்த கலையம்புத்தூரில்-பூமிக்கடியில் சிறிய-பானைகளில் இருந்தவைகளாய்க் கண்டுபிடிக்கப்-பட்டுள்ளது. 


மதுரை நகரில் இருவகைக் கடைத்தெருக்கள் இருந்ததெனவும், பகற்பொழுதில் வணிகம் செய்யப்படும் கடைகளை நாளங்காடிஎன்றும், இரவுப்போது முழுவதும் இயங்கும் வணிக்கடைகளை அல்லங்காடிஎனவும் கூறப்பட்டன.மதுரைக்காஞ்சி 427.428

மதுரைக்கு விழாநகரம் எனச் சிறப்புப் பெயர் உண்டு. நாள்தோறும் ஏதேனும் ஒருவிழா,ஏதேனும்  ஒரு காரணம் பற்றி எங்கேனும் ஒரு மூலையில், ஒரு தெருவில், சாலைக்கோயிலில் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்தகுதி நோக்கி இச்சிறப்புப்பெயரை மதுரை மாநகரம் பூண்டது. 


இவ்விழாக்களுள், மதுரை பிரதானக் கோயிலான ஸ்ரீ மீனாக்ஷி  ருக்கோயிலின் எழுநாளத்திருவிழாமிகக்சிறப்புடைய விழாவாகப் பண்டைக்காலத்தில் மதுரைநகரில் கொண்டாடப்பட்டதாய் இலக்கியங்களின் மூலம் அறிகிறோம். இவ்விழா ஏழு நாட்கள் மதுரையில் தொடர்ந்து நடைபெறுவதால் இப்பெயர் பெற்றது. இவ்விழாவிற்கு கணம்என்ற வேறு  பெயரும் உண்டு.உன்னதம் இனித்தொடங்கும்..............

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment