Wednesday, January 30, 2013

வாருங்கள் ,வரலாற்றினை சுவைப்போம் (மதுரை வரலாறு )

ஓம்
மதுரை அமுது
(மதுரை கோவிலும் பாண்டியர் வரலாறும்)

பிடியதன் உருஉமை கௌமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர்இடர்
கடிகணபதிவர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே
                                                                திருஞானசம்பந்தர் தேவாரம்
                                                                         

முன்னுரை             அனைத்து உலகினையும் மனம் கொண்டு ஆக்கியவன் ஆதிபரன் அருட்சோதியன். அவ்வெல்லாம் வல்ல இறைவாய் யாவற்றிலும் நிறைந்திலங்கி யாதும்அவனாய் உணர்வோருக்கு உணர்த்துகின்ற உணர்ந்தோதற்கரியவனாய் ஒன்றுமுதற் பலவாகிய அறிவும் அதனதற்கேற்ற தோற்றவகைகளாய் எண்பத்து நான்கு நூறாயிரம் சீவராசிகளைப் படைத்தும் காத்தும் மறைத்தும் அருளாற்றுகிறான்.

அக்காரணன் ஏதோ காரியமாய்த் தோற்றம் மறைவென இரண்டினிற்கிடையே வாழ்வு என்ற ஓர் நிகழ்வினை முடிவில்லாதொடராய் பொதுப்பண்பாய் காலவறையறை செய்து நிகழ்த்திக்கொண்டிருகின்றான்

                             காலப்பேழையின் சாலப்பெரும் வைப்புகளில் பலப்பல நிகழ்கவுகள் வரலாற்று காவியங்களாய் இதிகாசபுராணகளாய் இம்மண்ணிலும் அவ்விண்ணிலும் என்னென்றும் ஒளிவீசிய வண்ணமிருக்கின்றன.

அவற்றினை அன்றுதொட்டு இன்றாளவில் பல்வேறு கோணங்களில் ஆழ்ந்தகழ்ந்து கண்டறிந்த அறிஞர்பெருமக்களின் கவின்மிகு சுவைப் பலுவல்களினின்றும் அடியவன் சிற்றாய்வுக்கு பட்டதைப் பொறுக்கிக் கோர்த்த இத்தகவல் முத்துமாலையை இம்மதுரைப் புராணக்காவியநாயகி நாயகர் ஸ்ரீ மீனாட்ஷி ஸ்ரீ சோமசுந்தரர் திருமுன் கொணர்ந்து அவர்தம் பாதங்கட்குப் பயம்கொண்ட இளம்கன்றாயப் பையவே வைக்கின்றேன்.

                             அழகற்ற ஒன்றிற்கு அணிகலனும் அலங்காரமும் ஒருவேளை அழகூட்டலாம்.

தமிழின் அழகிற்கு அழகூட்ட எதுவும் அவசியமற்றதாகும்.

அத்தகைய முயற்சி பகலவனுக்கு அகல்விளக்கால் அலங்கரிப்பதுபோலாகும்.
தமிழுடன் சேரும் அழகற்றவைகளும்கூட அழகுறும்.

 இத்தொகுப்பில் எனது தமிழ்நடை இயற்தமிழ் இலக்கணம் மீறிப் பலஇடங்களில் சறுக்கியிருக்கின்றன. வரலாற்றுக் காவியம் என்பதால் அன்றைய  வழக்குதமிழில் மொழிக்கலப்பு இருந்திருக்கின்றன. 

ஆகவே புராண உயிரோட்ட இழைகள் அறுத்துவிடாதபடி அப்படியே இருக்கச்செய்த முயற்சிதான் பல பெயர்கள் வாக்கியங்களில் பிரதிபலிக்கின்றன. 

தமிழாக்கம் பெயர்மாற்றம் என்றெல்லாம் கருதிச்செயல்பட துணிவுறாததினால் விளங்குசெற்களை வழக்கின்று மாற்றாதிருக்கவும் நினைத்தேன்.

 எனிலும் சிலபோது அங்கொன்றுமிங்கொன்றுமாய் சில மாற்றுசொற்களை அடைப்பிலுள் இட்டுள்ளேன்.

 சீர்மல்கும் செம்மொழி இதை ஏற்கும் என்ற நம்பித்துணிந்தேன்.

                   வரலாறுகளைப் பொறுந்தமட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவைகளை எடுத்தாளும் ஆய்வர்களின் காலகணிப்பு விரித்துரைக்கும் புலமைச்சிறப்பு கண்டறிந்த முக்கிய நிகழ்கவுகள் நிகழ்வுற்ற இடங்கள் சம்பந்தப்பட்ட பாத்திரர்கள் பற்றிய நோக்குகள் அடிப்படைநூல் ஆதாரங்கள் அக்காலத்தே வாழ்தவர் வழங்கிய செய்திகுறிப்புகள் இன்றுவரை நிலைத்து நிற்கும் செவிவழிசெய்திகள் மற்றும் புராண மையகருத்துகள் எனப் பல்நிலையில் தொகுத்தாண்ட அறிஞர்பெருமக்களின் ஆக்கத்தனின்று எடுத்தல்லாது வேறெவ்விதத்தும் புதிதாக ஒன்றினை கூறிவிடமுடியாது.

 முன்னோடிகளாய் விளங்குவோரின் நூல்களினின்றும் கிட்டிய வரலாறு தொடங்கி வாக்கியங்கள் வரை தொகுத்த பணிமட்டுமே என்னைச்சாரும்.

யாவற்றுப்பெருமைகளும   அம்முன்னவர்களுக்கே முந்திப்போய்ச்சேரட்டும்.

தமிழுக்கு அமுதென்று பேர்” …… அத்தமிழ் வளர்ந்த மதுரைக்கு வேறுபெயரா இருக்க முடியும்! 

மதுரைஅமுது என்ற இவ்வரலாற்றுத் தொகுப்பும் மதுரம் கொள்வதும் இயல்பாய் இருத்தல் வேண்டும்.

 மதுரைத் தலவரலாறு பண்டைய பாண்டியர் வரலாறு மதுரை கோவில் வரலாறு என இவற்றிலெல்லாம் மூர்த்தி தலம் தீர்த்தம் சேர்ந்த இறையருட் சுவையில் இரண்டறகலந்தது இம்மதுரை அமுதுஆகும்.

 இன்நூலினை கருதியோ, கண்ணுற்றோ, களிமனம் புகுந்து களிப்புற திருவாலவாயப்பன் அன்னை அங்கயற்கன்னி அருள்புரியட்டும்.

                                                                  

                                                        பாரதம்

     இந்தியத் துணைகண்டத்திற்குப் பெருமைசேர்க்கும் வட எல்லையில் அரணாக விளங்குவது இமையம் என்ற திருகைலாயமலை. பேரளவுப்பரிமாணமும் உலகின் மிக உயரமான சிகரகங்களை கொண்டதும் 
ஆகும்.

தெய்வீகச் சைவ  மணம் பரப்பும் இவ்வரன்மலை என்னாட்டவருக்கும் இறைவனான சிவபெருமான் அன்னையுடன் அவர்தம் மக்களுடன் அடியார்திருகூட்டத்தினருடன் சிவகணங்களுடன் குடிகொண்டருளும் புண்ணிய தலமாகும்.

பாரதத்தின் புகழில் பங்குபெற்றும் பலப்பல தெய்வீக பெருமைகளைச் சேர்க்கும் புண்ணியத்தலங்களும்  வளமை மற்றும வழிபாட்டிற்குகந்ததுமான புண்ணியநதிகள் சிலிர்த்துப்பாயும் நாடாகும். ஒருமைப்பாடு மனிதநேயம் அடிப்படைஇறைஉணர்வும் கட்டுகோப்பும் கொண்ட ஞானபூமியாகும்.

மக்களை இணைத்துப் பக்குவபடுத்தும் பல மதங்கள், பல மொழிகள், கலாச்சாரம்பண்பாடு என வேறுபட்டதாய் விரிந்துகாணப்படிலும் இந்திய மக்கள் என்ற ஒன்றிய உணர்வினைப் பதித்து பலன்நுகர் ஜனநாயகப் பூமி நம் பாரதம்.

வரலாறு தொடரும்

அடியவர்க்கு அடியவன்  டி.எஸ்.கிருஷ்ணன்

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment