67.திருவண்வண்டூர்
(திருவமுண்டூர்)
பெருமாள் : பாம்பணையப்பன்
நின்ற திருக்கோலம் , மேற்கே திருமுக மண்டலம்
தாயார் : கமலவல்லி நாச்சியார்
விமானம் :
ஸகல வேத விமானம்
தீர்த்தம் :
பம்பா தீர்த்தம்
ப்ரத்யக்ஷம் : நாரதர்
மங்களாசாசனம் : நம்மாழ்வார்
( 11 பாசுரங்கள் )
செங்கண்ணுரிலிருந்து வடக்கே ஆறு கி.மீ தொலைவில் பேருந்து
மார்க்கத்தில் உள்ளது.
68.
திருவாட்டாறு
பெருமாள் :ஆதிகேசவப்பெருமாள்
புஜங்க
சயனம் , மேற்கே திருமுக மண்டலம்
தாயார் : மரகத வல்லி நாச்சியார்
விமானம் :அஷ்டாக்ஷரகல்யாண
விமானம்
தீர்த்தம் :ராம
தீர்த்தம்
ப்த்யகூக்ஷம் : சந்திரன்
, பரசுராமன்
மங்களாசாசனம் : நம்மாழ்வார் ( 11 பாசுரங்கள் )
நாகர்கோவிளில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. நாகர்கோவில்
திருவனந்தபுரம் பேருந்து மார்க்கத்தில் தக்கலையில் இருந்து சுமார் ஆறு கி.மீ
தொலைவில் உள்ளது.
69.திருவித்துவக்கோடு
(திருவிச்சிக்
கோடு )
பெருமாள் : உய்யவந்த பெருமாள் – அபயப்ரதன்
நின்ற திருகோலம் , தெற்கே திருமுக மண்டலம்
தாயார் : வித்துவக்கோட்டு வல்லி நாச்சியார்
விமானம் : தத்வகாஞ்சன விமானம்
தீர்த்தம் : சக்ர தீர்த்தம்
ப்ரத்யக்ஷம் : அம்பரீஷன்
மங்களாசாசனம் : குலசேகராழ்வார் ( 10 பாசுரங்கள் )
பஞ்ச பாண்டவர்கள் தவம் செய்த இடம்.
ஷோரனுர் – காலிகாட் இருப்புப்பாதை
மார்க்கத்தில் பட்டாம்பி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2
கி.மீ தூரத்தில் உள்ளது.
70.திருக்கடித்தானம்
பெருமாள் : அற்புத நாராயணன் – அம்ருத நாராயணன்
நின்ற திருகோலம் , கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : கற்பக வல்லி நாச்சியார்
விமானம் : புண்ய கோடி விமானம்
தீர்த்தம் : ஸ்ரீ பூமி தீர்த்தம்
ப்ரத்யக்ஷம் : ருக்மாங்கதன்
மங்களாசாசனம் : நம்மாழ்வார் ( 11 பாசுரங்கள் )
திருவல்லா- கோட்டயம் சாலையில்
செங்கனாச்சேரியில் இருந்து கிழக்கே 2 கி.மீ
தூரத்தில் உள்ள தலம். நகரப் பேருந்து வசதி உள்ளது.
71.
திருவாறன்விளை
(ஆரமுளா
)
பெருமாள் : திருக்குறளப்பன்
நின்ற திருக்கோலம், கிழக்கே
திருமுக மண்டலம்
தாயார் : பத்மாஸனி
விமானம் : வாமன விமானம்
தீர்த்தம் : வ்யாஸ தீர்த்தம் , தேவ புஷ்கரிணி
ப்ரத்யக்ஷம் : வேதவியாசர் , பிரம்மா
மங்களாசாசனம் : நம்மாழ்வார் ( 11 பாசுரங்கள் )
அர்ச்சுனன் பிரதிஷ்டை செய்த தலம்
செங்கனூரிலிருந்து கிழக்கே 10 கி.மீ
தொலைவில் உள்ளது . பஸ் வசதி உள்ளது.
72.
திருவஹிந்திரபுரம்
பெருமாள் : தெய்வனாயகன் – தேவநாதன்
நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : வைகுண்ட வல்லி - ஹேமாம்மபுஜவல்லி
விமானம் : சுத்தஸத்வ விமானம்
தீர்த்தம் : சேஷ
தீர்த்தம் , கருட நதி
ப்ரத்யக்ஷம் : சந்திரன், கருடன்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்
( 10 பாசுரங்கள் )
திருச்சி – சென்னை மெயின் லைனில்
திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் இருந்து 5
கி.மீ தூரத்தில் உள்ளது. கடலூர் பஸ்நிலையத்திலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.
73.
திருக்கோவிலூர்
பெருமாள் : த்ரிவிக்ரமன்
நின்ற
திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : பூங்கோவல் நாச்சியார்
விமானம் : ஸ்ரீகர விமானம்
தீர்த்தம் : கிருஷ்ண தீர்த்தம்
ப்ரத்யக்ஷம் : ப்ருகண்டு முனி, மஹாபலி சக்ரவர்த்தி
மங்களாசாசனம் : பொய்கையார் , பூதத்தார் ,
திருமங்கையாழ்வார்( 21 பாசுரங்கள் )
மூன்று திருவந்தாதிகள் உருவான தலம்
.
விழுப்புரம் – காட்பாடி இரயில்
மார்க்கத்தில் திருக்கோவிலூர் ரயில் நிலையத்திலிருந்து மூன்று கி.மீ தூரத்தில்
உள்ளது. திருவண்ணாமலை
– விழுப்புரம் சாலை மார்க்கத்தில் 36 கி.மீ தூரத்தில் உள்ள
தலம்
74
.திருக்கச்சி (காஞ்சிபுரம்)
பெருமாள் : வரதராஜப்பெருமாள்- பேரருளாளன்
நின்ற
திருக்கோலம், மேற்கே திருமுக
மண்டலம்
தாயார் : பெருந்தேவித்தாயார்
விமானம் : புண்ய கோடி விமானம்
தீர்த்தம் : சேஷ , வராஹ, பத்ம , தீர்த்தங்கள்
, வேகவதி
ப்ரத்யக்ஷம் : பிரம்மா , கஜேந்திரன் ,ஆதிசேஷன், ப்ருகு
மங்களாசாசனம் : நம்மாழ்வார் , பூதத்தார் , கலியன்
( 13 பாசுரங்கள் )
சென்னை – பெங்களூர் சாலை மார்க்கத்தில் சென்னையிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து ரயில் வசதி உள்ளது.
No comments:
Post a Comment