மனிதமும் சனாதனமும் - பகுதி 2
உண்மையில் நாம் எல்லோருமே அறியாமைப் புலியால் பின் தொடரப்படுகின்றோம்.
இறைவன் உயிர்களின் மீது கடலினும் மிகு கருணை உடையவராய் இருக்கின்றார். மனித வாழ்வின் லட்சியத்தை பக்குவப்படுத்திக் கொள்ள மனிதனால் நிச்சயம் முடியும்.
கடவுள் என்ற ஆள்பவரும், ஜீவர்கள் என்ற ஆளப்படுபவரும் சுயத்தின் இயற்கைக் கட்டாயத்தில் இருப்பவர்கள் அல்லவா?.
அதாவது கர்ம வினைப்படி (சனாதன தர்மத்தின்) அடிப்படையில் இச்செயல்பாடுகளுக்கும் விளைவுகள் இருக்கத்தான் வேண்டும். நான் ஆளப்படவில்லை சுதந்திரமானவன் என்று கூறினால் அவன் ஞானமற்றவனே. குறைந்த பட்ச கட்டுப்பட்ட வாழ்வில் ஒவ்வொரு விதத்திலும் ஜீவன் ஆளப்படுகிறது.
பிரகருதி (பௌதீக இயற்கை) அதன் நிலைப்புக்காலம், அதன் தோற்றம், பிரபஞ்சத்தின் மொத்தத் தோற்றம், அதன் நிலைப்புக்காலம்; என பல்வேறு கொள்கைகளையும் செயல்களையும் உடையது.
கடவுள் யார்?,
உயிர்கள் யாவை?,
பிரகிருதி என்றால் யாது?,
பிரபஞ்சத்தோற்றம் என்பது என்ன?,
இவைகள் யாவும் காலத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
உயிர்களின் செயல்கள் யாவை?
அவைகளின் நோக்கம் அவற்றின் இறுதி என்பதெல்லாம் நாம் அறியப்பட வேண்டியது என்பதே வேதத்தின் விளக்கமாய் உள்ளது,
1. இறைவன் (பரம புருஷன்)
2.உயிர்வாழி (ஜீவன்)
3.இயற்கை (பிரகிருதி)
4.காலம் (நித்யம்)
5.செயல். (கர்மம்)
இந்த ஐந்தில் இறைவனும், உயிர்களும், காலமும் நித்யமானவை, எப்போதும் இருந்து கொண்டிருப்பவை. செயல்கள் -அதாவது கர்மா, முக்குணங்களால் நிகழப்பெறுபவை.
இதனை இறைவன், மனிதனுக்கு (நிலையற்றதாய் விளங்கும் பிரகிருதியின்) இயற்கையில் தோன்றிய மனிதனுக்குக் கொடுத்த சுதந்திரத்தின் வழியாக வந்துற்றது. முக்குணங்கள் நற்குணம் (சத்வ), தீவிர குணம் (ரஜோ), அறியாமை (தமோ) நினைவிற்கெட்டாத காலத்தில் இருந்து பல்கோடிப்பிறப்பினின்றும் இயற்கை குணஇயல்பு கலவையாலும், நித்யமான காலத்தின் பார்வையாலும், நம் செயல்களின் பலன்களால், நாம் துன்புறவோ அல்லது இன்புறவோ செய்கின்றோம்.
வாழ்வின்; யாவற்று நிலையிலும் நம் செயல்களின் விளைவுகளாலயே துன்பம், இன்பம் என இருவினையை வேண்டியவர்களாகின்றோம். இதுவே கர்மம் எனப்படுவது.
வைணவ தத்துவப்படி உலகின் தோற்றம் பொய்யாக ஏற்றுக்கொள்ப்படுவதில்லை. அது உண்மையாக ஆனால், நிலையற்றதாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
உவமையாக கூறப்போனால்: வானில் வந்த மேகம் மழை தருகிறது. பயிர்கள் செழிக்கின்றன. அதே சமயம் மழைக்காலம் தீர்ந்தவுடன் மேகங்கள் அகன்று விடுகின்றன. மழையில் வளம் பெற்ற யாவும் வாடியும் விடுகின்றன. இது போலவே பௌதீக தோற்றம் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தோன்றி சில காலம் இருந்து பின்மறைகிறது. இது நிலையற்றதற்கு ஒரு விளக்கம்.
எனவே இயற்கையின் செயல்கள் யாவும் இவ்வாறானவையே. இதுபோல கர்மம் நிலையற்றதே. நிச்சயமாக, நித்தியமானதல்ல. எந்த ஒரு செயல்களின் விளைவுகள், பின் விளைவுகள் இவற்றினின்றும் விடுதலை பெற எவ்வித செய்கையினை நாம் செய்ய வேண்டும் என்பதை நாம் சந்தேகமில்லாமல் அறிய மாட்டோம்.
உயிர்கள் தம் உடல் பற்றிய (சம்பந்தப்பட்ட) உணர்வுகளையே உடையவை. ஆனால் இறைவனோ எல்லா உடல்களையும் உணர்பவன்.
தூய்மையில் சத்வ குணத்தில் இருந்து செயல்களின் விளக்கம் யாவை என ஜீவன் புரிந்து கொள்கையில் இந்த கர்மங்களை மாற்றிவிட முடியும். அவ்வாறு செய்வானேயானால் கடந்த கால செயல்களின் விளைவுகளையும் அதன் பின் விளைவுகளையும் மாற்றிவிட முடியும். எனவே கர்மம் நித்யமானதில்லை. முன் கூறியது போல இறைவன் ஜீவன், காலம் இவைகள் மட்டுமே நித்யமானவை. கர்மம் மாறுதலுக்கும், மாற்றுதலுக்கும் உட்பட்டவை.
இப்பிரபஞ்ச இயற்கையில் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இயற்கையின் சீற்றமோ, இயற்கையில் மாறுதலோ, மாறும் இயற்கைச் சூழலோ, அதிக வெப்பமோ, அதிகக் குளிரோ, அதிகக் காற்றோ, பேரிடர் அழிவுகளோ, நல் வளங்களோ, மனித பொது மன மாற்றமோ, மக்களை சமூக இயக்கமாகவும், அரசின் இயக்கமாகவும் மாற்றும் தலைகீழ் மாறுதல்களோ, இவைகளால் எல்லாம் ஏற்படும் புதுப்புது சூழல்களால் எவரும் எதிர்பாராதவாறு நிகழ்பெற்றன என்றால் இறைவனின் கருதுதலால் அன்றி இவைகள் (அதிசயங்கள்) நிகழந்திருக்க முடியாது
.
இன்னும் பலப்பல நிகழ இருப்பவையாகவும் இருக்கின்றன.
இவற்றிற்கெல்லாம் ஒரு நாயகன், ஒரு ஆளுநன் இருக்கின்றான்.
அவனே செயல்படுகிறான்.
ஆளப்படாத ஒரு பொருளை தோற்றுவிக்க முடியாது.
ஆண்டவன் இருப்பதை உணராதவரை அவ்விதம் இருப்பவர்கள் சிறுபிள்ளைத்தனம் கொண்டவர்களே.
குதிரையாலோ, மாட்டினாலோ, வேறு ஒரு மிருகத்தாலோ இழுக்கப்படாத நிலையில் ஒரு பேருந்து ஓடுவதை வினோதமாக சிறுகுழந்தை அதன் அறியாத்தன்மையில் பார்க்கலாம். ஒவ்வொரு இயந்திரத்திற்குப் பின்னும் ஒரு மனிதன், இயக்குபவன் உள்ளான் என்று அக்குழந்தை அறிய மாட்டாது.
மனிதனின் தூய உணர்வின் செயல்கள் இறைவனின் இச்சையுடன் ஒருங்கிணைந்து நிற்கும். அது அவனை மகிழ்விக்கும். அதற்காக உலகியல் செயல்களை எல்லாம் அவன் நிறுத்தி விட வேண்டுமென்பதில்லை. அதே சமயம் அவனுடைய செயல்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
சுத்தமான செயல்களே பக்தி என்று அழைக்கப்படுவதாலும், பக்தியின் செயல்கள் சாதாரண செயல்கள் போலத் தோன்றலாம். ஆனால் அவைகள் களங்கப்படாததாகும். நடத்தையினை விட மனப்பாங்கே முக்கியத்துவம் பெற்றவையாகும்.
உடல் சம்பந்தமான கருத்துக்களில் இருந்து ஒருவனை விடுதலை செய்வதற்காகவே வேத நூல்களில் பல்வேறு உபதேசங்கள் அருளப்பட்டன
மானுடனை நேரடியாகவே ஆன்மாவின் தொடர்புடையவனாக்கி ஆன்ம விடுதலை பெற உதவி செய்தவன் கண்ணன்.
அவ்வுதவியைப் பெற பக்குவம் இன்றி அர்ஜுனன் இருந்தான். இறைவனே அவனை வழிநடத்தி மேம்படச் செய்தார். வாழ்வில் உடலோடு தொடர்புடைய எண்ணங்களில் இருந்து ஒருவன் விடுபட வேண்டும். இதுவே ஆன்மீகவாதியின் துவக்கச் செயலாகும். விடுதலை பெற விரும்புவன், முதலில் அவன் இந்த ஜட உடல் அல்ல என்பதை உணர வேண்டும்.
(தொடரும் )
No comments:
Post a Comment