Saturday, January 15, 2011

யோகாசனம் செய்வோம் (சித்த பத்மாசனம் )

 சித்த பத்மாசனம் 

இந்த உலகில் என்ன தான் விஞ்ஞானம் முன்னேறினாலும் நமது உடல், மன இயக்கங்களின் சக்தியை ஒரு சேர அதிகரிக்க ரிஷிகள் கூறிய  
யோகாசனப் பயிற்சி முறைகளை தான்  பின்பற்றுகிறோம். 
அந்த வழியில் நாம் யோகம் + ஆசனம் என இரு வித பயிற்சிகளை ஒருசேரப் பெறுவோம். நலமுடன் வாழ்வோம்.
யோகாசனம் செய்யும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய
முக்கிய விஷயங்கள்.
தடித்த அதே சமயம் மிருதுவான துணி விரிப்பில் அமர்ந்து யோகாசனம் செய்வது நலம். 
மஞ்சள் காமாலை போன்ற நோயால் பாதிக்கப் பட்டவர்கள் 3  மாத காலத்திற்கு பின்னும், உடலில் எந்த பாகத்தில் அறுவை சிகிச்சை செய்திருப்பவர்கள்  
6  மாத காலத்திற்கு பின்னும் பயிற்சி செய்ய வேண்டும். 

பெண்களைப் பொறுத்தவரை மாத விடாய் காலத்திலும் , கர்ப்பம் தரித்த காலங்களிலும் பயிற்சி மேற்கொள்ளக்கூடாது. 

சித்த பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சத் குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி


 செய்முறை :  முதுகை வளைக்காமல் , தலை நிமிர்ந்து அமர்ந்து கழுத்தை நேராக வைத்துக் கொள்ளவும். 
வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைக்கவும். 
 இடது கையின் மேல் வலது கையை திறந்த நிலையில் மேல் நோக்கி வைக்கவும்.
கண்களை மெதுவாக மூடி அதன் பார்வை மையம் இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்க வேண்டும். 
 
ஒரே சீராக 14 முதல் 16 மூச்சை இழுத்து விடவும். இந்த பயிற்சியை காலை 6 மற்றும் மாலை 6  மணியளவில் குறைந்தது 15  நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை செய்யலாம். 
வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திக் கொண்டு பயிற்சி செய்வது நலம்.  

பலன் - ரத்த ஓட்டம் சீராக அமையும். மன அமைதி கிடக்கும். 

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment