Tuesday, August 17, 2010

நலம் வாழ உடலை ஆராதிப்போம் -3

 
 ஆசனங்களும் உடற் பயிற்சிகளும்
மனித வாழ்க்கையின் பொது ஞானம் என்பது இரண்டு வகையாக பிரிக்கலாம்.
ஒன்று மன விஞ்ஞானம் , மற்றொன்று  உடல் விஞ்ஞானமாகவும் கருதப் படுகிறது. மன விஞ்ஞானம் என்பது பரந்து விரிந்த கடலுக்கு ஒப்பானது .  கடல்கள் கரைகள் கொண்டது  என்பதை விட பல இடங்களில் நிலப் பரப்பை நீர்ப் பரப்பு தொடுகின்ற மாறுதலுக்கு உட்பட்ட எல்லைகள் அல்லது  கரைகளாகும். 

yoga
                          

உடல் விஞ்ஞானம் என்பது  ஆற்றின் இருகரையினை போல மனித வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து  முடிகின்ற வரை மனம் என்ற ஆற்றின் மனவெள்ள ஓட்டத்தினை  சந்திக்கும். உடலைப் பேணுதல் அல்லது உடல் ஆரோக்கியம் ஒரு கரையாகவும் உடலின் அடிப்படையில்  மன விஞ்ஞானம் என்ற மறுகரையுமாகிறது.

மனிதர்கள் அல்லாத பிற உயிர்களுக்கு  அதன் வாழ்க்கைப் பயணம்  மனிதனைப் போன்ற இருகரை வாழ்க்கையினை கொண்டதல்ல.   அவைகள் உடல், மனம் என்ற அறிவினைக் கொள்ளாது தனக்காக மட்டுமே வாழ்ந்து முடிகின்றன. 


மனிதனோ சுயநலத்தோடு வாழ்ந்தாலும் பிறவற்றிற்காகவும் வாழ வேண்டிய மற்றவைகளோடு மற்றவர்களுக்காக இயைந்து  வாழுகின்ற இயல்பினை கொண்டவனாகிறான்.  இதற்கு அறிவும். பலமும் சேர்ந்த அல்லது தனித்த இருவகை அத்தியாவசியமான  சக்திகளால் வாழ வேண்டியவனாகின்றான். 

முதலில் உடல்சக்தி , உடல் ஆரோக்கியத்தினாலும் , உடல் பாதுகாப்பு பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இதில் உடல் வலிமை மட்டுமே கொண்டவர்கள் வாழ்வில் அனைத்தையும் சாதித்து விடுகிறார்கள் என்பதில்லை. உடல் வலிமையினால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது  மிக குறைந்த விழுக்காடுகளைக் கொண்டதாகும்.  அதே சமயம் அறிவும், சீரான வளர்ச்சியும் ஆரோக்கியத்தைப் பேணும் அளவான  உடற்பயிற்சிகளும் கொண்டவர்கள் வாழ்வில்  சாதிப்பது அதிக விழுக்காடுகளைக் கொண்டதாக இருக்கிறது.

அதிக வலிமை பெற அதிக உணவும் , அதிக உடற்பயிற்சியினையும் கொண்டிருப்பது உண்மையில் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதாகாது.  

அதிக பட்ச உடற்பயிற்சியில் மட்டும் கவனத்தை செலுத்துபவர்கள்  வெறும் வித்தைக் காரர்கள் போலவும் , அவர்களின் உடல் தசைகளின் வலிமை , தோற்றம் மற்றும் இயக்கம் வெறும் அழகிற்காகவும், சில போட்டிகளில் வெற்றி பெறுவதற்காகவும்  சில குறிப்பிட்ட  செல்வம் ஈட்டும் தொழிற் பயன்பாட்டிற்கு மட்டுமே உதவ முடியும். 

இவ்வாறானவர்கள் அவர்களின்  பெரு முயற்சியினால் , பயிற்சியால், அடைந்த பலன்கள் உடலைப் பொறுத்தவரை நீண்ட கால உடல் ஆரோக்கியத்தை  பெற்றவர்களாக  இருப்பார்கள் என்பதற்கில்லை.

மாறாக விரைவில்  அழகு இழக்கும்  உடல்வாகு , அதிக உடல் செயல்பாடுகளாக  உடல் சக்தி விரையம்  , எலும்புகளின் தேய்மானம் ,
ஜீரணக் கருவிகளின் செயல்பாட்டுக் குறைவு , இதயம் மற்றும் 
அகச் சுரப்பிகள்  போன்ற முக்கிய உடலுறுப்புகள் பழுதடைவதே  பெரிதும் நிகழ்ந்து கொண்டிருக்கிற உண்மையாகும் .

கிரிக்கெட், மற்றும் கால்பந்து இதர துறைகளில் பிரபலமானோர் அனைவரும் அதிக காலம் அந்த பயிற்சியில் ஈடுபட முடியாமல் வெகு விரைவில் ஒய்வு பெற்று விடுகிறார்கள். 

இந்த கருத்து விளையாட்டு வீரர்களையோ, மற்றும் இதர உடல் வலிமை காட்டும் பயிற்சியாளர்களையோ குறை கூறுவது ஆகாது.

பிறரை மகிழ்விப்பதற்காகவே  இவர்கள் அனைவரும் தங்களை தியாகம் செய்து கொள்கிறார்கள் என்பதே உண்மை.

உடல் விஞ்ஞானம் என்பது உடல் வளத்தைப் பேணும் வழி வகைகளை  கூறுகிற போது மேற்குறித்த கருத்துக்கள் சில மாறுபட்டதாக  தோன்றினாலும் உடல் ஆரோக்கியத்தைப் பேணுகின்ற  எத்தனையோ  நவீன கால உடற்பயிற்சி உதவுவது இல்லை என்பதை  உணர்த்த முயலும்  போது உடலாசனத்தின் மென்மையான சீரான பக்கவிளைவுகள்  அற்ற வாழ்நாள் முழுதும்  நோய் மற்றும் உடல் துன்பங்களில் இருந்து  நிச்சயமான பெரும்பயன்களை  பெரும் முறைகள் பற்றி இந்த கட்டுரை தெளிவாக விளக்குகிறது. 

இனியும் விளக்கும்.                                                                                 

                                                                                                                  (தொடரும்) 



  






           
                                                          

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment