பிராணாயாமம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைகள் நிறைய இருப்பினும் அவை அனைத்தையும் கற்றுக்கொண்டபின் அல்லது புரிந்து கொண்டபின்தான் பிராணாயாமப் பயிற்சி செய்ய வேண்டும் என்ற விதியினை எவரும் சொல்லவில்லை என்றே தோன்றுகிறது.
ஏனென்றால் எண்ணிலடங்காப் பிராணாயாம முறைகள் மற்றும் அதன் சாரம் பிற உத்திகளோடு ஒன்றுபடுத்தியோ அல்லது வேறுபடுத்தியோ பார்ப்பதற்கு
-கூட ஏதாகிலும் ஒன்றையாவது பின்பற்றி கற்றப்பின்பே மற்றவைகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும்.
எந்தப் பிராணாயாமம் எந்த அடிப்படைக்குள் வருகிறது. எந்த முறை சாதகர்களுக்குச் சிறந்தது என்பதை விட எது ஏற்றது எனவும் அவரவர்கள் நிலைக்கு ஏற்ப குருவின் தீர்மானமே சிறந்ததாகும் என பல சித்த புருஷர்கள் ஒன்று போலக் கூறுவதை அறியலாம்.
ஜாதகத்தில் கோள் நிலைகள் சாதகனின் பிறப்புக் காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் இருப்பது போலவும் கர்ப்பக்காலம் நீக்கி வரும் திசைகளில் காலக் கணக்கு போலவும் ஒவ்வொரு சாதகனுடைய பல்வேறு பிறவிகளில் கற்றது போக மற்றதைத் தொடர்வது அல்லது எதை எதிலிருந்து தொடர்வது என்பதையும் குருவால் தீர்மானிக்கப்படுவதாகும்.
திறமையான சாதகர்கள் கற்றுக்கொள்ளும் போதே தனக்குரிய வழிமுறைகளை காலப்போக்கில் உணர்ந்து கொள்வான். அவ்வமயம் அவனுக்குப் பலப்பல உண்மைகள் புரியத்துவங்கும்.
பிராணாயாமம் என்பது ஒரு வெறும் மூச்சுப்பயிற்சி மட்டுமே என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பது தவறாகும். இயல்பான சுவாசத்திலிருந்து அது வேறுபடுகிறது என்பதோடு வேறுபடுத்தப்படுகிறது ஒழுங்குபடுத்தப்படுகிறது.
மேம்படுத்தப்படுகிறது. சக்தியூட்டப்படுகிறது .மேலும் கால நிர்ணயம் மற்றும் ஒரு கணிதத்திற்கு உட்படுகிறது என்றெல்லாம் கூறலாம்.
ஓடுதல்,குதித்தல், தாண்டுதல், நீந்துதல், பளு தூக்குதல், அதிக நிறை உள்ளவற்றை நகர்த்துதல் நீண்ட நேரம் களைப்படையாமல் பணிபுரிதல் போன்றவற்றை எந்தவிதப் பயிற்சியும் இல்லாத சாதாரண ஒரு மனிதனை விட யோகப்பயிற்சி பெற்ற ஒருவரின் மேற்கண்டசெயல்பாடுகளை மிகச்சுலபமாகவும் விரைவாகவும் அதிசயத்தக்க வகையில் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.
உதாரணமாக
பயிற்சி பெற்ற ஒரு சர்க்கஸ்காரன் (வித்தைக்காரன்) செய்யும் சாகசங்களைப் பயிற்சியற்ற மற்ற ஒருவர் செய்ய இயலாது.
இயல்பான மூச்சை பிராணாயாமத்தின் மூலம் வகைப்படுத்தப்படும்போது மனிதனின் உடல் ஆற்றல் மற்றும் உள்ள ஆற்றல் பல மடங்கு பெருகுகிறது. எனவே பிராணாயாமம் என்பது ஆற்றல்களைப் பெருக்கும் ஒரு வித்தையும் ஆகும்.
இந்த வித்தையினை மூச்சுக்கலை , சரகலை, வாசிக்கலை , என பல பெயர்களை கொண்டதாகும். பிராணாயாமம் என்பதற்கு அடக்குதல் என்பது ஒரு பொதுப்பெயர் , பொதுச்சொல் ஆகும்.
இயல்பான மூச்சினை பிராகிருத வழியெனவும் முறையான மூச்சுவிடுவதை வைகருதம் எனவும் கூறுவர். மூச்சினால் பிராணன் இயக்கப்படுகிறது. தூலமான மனம் உடல் ஆகிறது. நுட்பமான உடல் மனம் என்றாகிறது. மனம் அடங்காத போது உடல்துன்பம் மொத்த வாழ்க்கையே
துன்பமயமாகும் நிலைக்கு ஆளாகுகிறது.
பிராணனை அடக்கும்போது மனம் அடங்குகிறது. அதனால் வாழ்வு சிறக்கிறது. மனதை , புலன்களைக் கட்டுப்படுத்த பிராணாயாமம் முக்கியமாகிறது.
பசி, தாகம், மூச்சு, உடல் இயக்கம் இந்த நான்கும் பிராணனால் நடத்தபடுபவையே .
பிராணன் குறையும் போது இந்த நான்கு செயல்களாலும்
உடல் துன்பம் , உள்ளத்துன்பம் , ஏற்படுகிறது.
உணவில் , நீரில், காற்றில் , பிராணன் உலவுகிறது.
தாவரம் , விலங்குகள், நீர்வாழ்வன , பறப்பன போன்றவைகள் நமக்கு பிராணனைத் தரும் உணவாகின்றன.
அவ்விதமே தாவரம், விலங்குகள் ,நீர்வாழ்வன , பறப்பன ஆகியவைகளுக்கும் பிராணனைத் தரும் உணவு தேவையாகிறது.
இதையே பரஸ்பரம் ஒன்றிற்கு ஒன்றின் பிராண வேள்வியில் ஆஹுதிகள் ஆகின்றன. (அளிக்கப்படும் உணவுகள்)
எனவே இந்த பிராண வேள்விக்கு மூச்சு ஒரு அடிப்படை ஆகிறது.
மனிதன் மற்றும் ஏனைய அனைத்து உயிரிகளும் ஒவ்வொரு வகையில் சுவாசிக்கின்றன. எனினும் மனிதர்களால் மட்டுமே மூச்சினை ஒழுங்குப்படுத்தவும் , கட்டுபடுத்திக்கொள்ளவும் இயலுவதாக இருக்கிறது.
மூச்சு உள் இழுத்தல், உள்நிறுத்துதல் , வெளி விடுதல், இந்த மூன்று வகையிலும் உள் நிறுத்துதல் என்பது பிராணாயாம நெறிகளில் தலைமைச் செயல் என கருதப்படுகிறது.
வெளிப்பிராண வாயுவை பிராணனுக்கு உணவளிக்கும் வகையில் பயன்படுத்துவதற்கு உள் இழுத்தல் பூரகம், உள் வந்தடைந்த பிராண வாயு என்ற உணவைப் பரிமாறும் வகையில் கும்பகம் பயனாகிறது. பயன்படுத்திய உணவில் பிராணன் ஏற்றுக் கொண்டது போக மீதம் உள்ள (உணவை) பிராண வாயு கழிவுகளை வெளியேற்றுதல் ரேசகமாகும் .
பிராணனுக்கு அதிகப் பலன் அளிக்கும் செயலே கும்பகம் ஆகும்.
பிராண வாயுவை பிராணனில் வெகுவாகக் கலக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.
இந்தச் செயலுக்கு நிறுத்தப்படும் கொள்ளளவு , நிறுத்தப்படும் கால அளவு இதனைப் பொறுத்தே பிராணாயாம சித்தி அல்லது சுவாச சித்தி ஏற்படுகிறது. இடம் வலம் என மூக்குத்துளைகளில் சுவாசத்தை மாறி மாறி உள்ளும் வெளியும் இயங்கச் செய்வதை நாடி சுத்தி எனக் கூறுவோம். இவ்வாறே பிராண வாயு இயக்கத்தை தந்திரம் என பிராணாயாமத்தில் யோகிகள் கூறுவர்.
பிராணாயாமத்தால் மூவகைப் பலன்களைப் பெறுவது சாத்தியம் என சித்தர் நெறிகள் செப்புகின்றன.
உடல் பலன்கள் -
நீண்ட வாக்கியங்களை தொடர்ந்து நிறுத்தம் இன்றி நீண்ட நேரம் பேசுதல். அதுபோல் பாடுதல் , பளு மிகுந்த பொருட்களை மூச்சடக்கித் தூக்குதல் பல்வேறு பணிகள் மற்றும் விளையாட்டுக்கள் போன்றவற்றில் ஈடுபட உடலுக்கு அதிக பலம் தேவைப்படும்போது மூச்சினை அடக்கியும் அதிக மூச்சினை உள்ளிழுத்து வெளிவிடுதலும் முக்கிய காரணிகள் ஆகின்றன.
உள்ளப்பலன்கள்-
சகிப்புத்தன்மை (பொறுமை) , சமாளித்தல், சுற்றுப்புற துன்பங்களை சகித்தல், உடல் வேதனை (வலி) தாங்குதல் , வாழ்க்கைப்போரட்டங்களை தாங்கி நிற்றல். கவலை, கலக்கம், இவைகள் அனைத்திலும் பாதிப்பின்றி வெற்றியடைய மனபலம் பெற, மனமடங்க , பிராணனை அடக்குவதன் மூலம் இப்பலன்கள் கிட்டுவதாகின்றது.
ஆன்மீகப் பலன்கள்-
நல்லியல்புகள், நற்குணங்கள் , நற்ச்செயல்கள் கூடுவது, உலகியல் வாழ்க்கை என்பது யாதென உணர்வது. நிலைப்பு , நிலையாமை எதுவெனத் தேடுதல், இறையியல் அறிந்து இறையுடன் கூடுவது. மனிதனாக வாழும் போதே மனிதரில் தெய்வமாவது . மனிதத்திற்கும் ஏனைய உயிரிகளுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கண்டுபிடித்து எந்த விதத்தில் மனிதம் உயர்ந்தது எனப் புரிந்து கொள்ளுதல்.
பிராணாயாம வகைகள்
- அந்தர்ப் பிராணாயாமம்
- அபூர்வப் பிராணாயாமம்
- அதிதூலப் பிராணாயாமம்
- ஆபத்யப் பிராணாயாமம்
- ஆயுர்ப் பிராணாயாமம்
- ஆத்யமப் பிராணாயாமம்
- குருப் பிராணாயாமம்
- சம்பூதப் பிராணாயாமம்
- சம விருத்த பிராணாயாமம்
- சதுஸ்ரப் பிராணாயாமம்
- சுரப் பிராணாயாமம்
- சுகப் பிராணாயாமம்
- சுபப் பிராணாயாமம்
- சூட்சமப் பிராணாயாமம்
- தாபத்யப் பிராணாயாமம்
- பூர்வப் பிராணாயாமம்
- யோகப் பிராணாயாமம்
- கேசரிப் பிராணாயாமம்
- குருப் பிராணாயாமம்
- மகத்ப் பிராணாயாமம்
- மத்யமப் பிராணாயாமம்
- வாசுகிப் பிராணாயாமம்
இன்னும் இது போல பிராணாயாம வகைகளில் கும்பக வேறுபாட்டு நெறிகளும் பந்தம், முத்திரை , கலப்புடன் நீண்டு விரிந்த வித்தையாகிறது பிரணாயாமம்.
வாசக அன்பர்களுக்காக தொடர் இன்னும் விரிந்து செல்லும்.
விரிவான பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஆவலுடன் செய்முறை விளக்க பதிவுக்காக காத்திருக்கிறேன்
Thanks for your explanation. please continue.
ReplyDeleteRegards
sowri
very useful information.thanks a lot
ReplyDeleteregards.
kala
அன்புடையீர் நான் ஆழ்நிலை தியானம் கற்க விரும்புகிறேன்.தாங்கள் பயிற்றுவிக்கிறீர்களா?www.aanmigakkadal.blogspot.com
ReplyDeleteAfter read this i feel my life starts
ReplyDeletesyed