Monday, August 24, 2009

பிரணவ மந்திரம்


(ஓம் எனும் ஓங்காரம்)

ஓம் எனும் ஓங்காரத்தின் சிறப்பினைச் சொல்ல ஒரு பதிவு போதாது.

ஆயிரக்கணக்கான பதிவுகள் வெளியிட்டாலும் ஓங்காரத்தின் பெருமை அளவிட முடியாதது.

இருந்தாலும் இந்த கலியுகத்தில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அது மனிதர்களால் எற்றுகொள்ளதக்கதாக இருக்கிறது.

அவ்வாறே மேலை நாட்டு அறிவியல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஓங்காரத்தையும் சோதனைக்கு எடுத்துக் கொண்டனர்.

அதன் விளைவு மற்றும் முடிவுகள் இவ்வாறு வந்தன.

டாக்டர் ஹெர்பெர்ட் பென்சன் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் வெளிவந்தவை.


பாஸ்டனில்  நடந்த மருத்துவர் மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை.

ஓம் என்ற ஒலியினை (பிரணவ மந்திரத்தை) மன ஒருமையுடன்
திரும்பத் திரும்ப கூறும்போது மன அலைகளின் வேக மாற்றத்தில் ஏற்படும் பலன் (விளைவு) விலை உயர்ந்த மாத்திரைகள் ஏற்படுத்தும் பலனை விட அதிகமாக கொடுக்கிறது.

எய்ட்ஸ் நோயினைப் பரவ விடாமல் தடுக்கிறது.

குழந்தையில்லாதவர்களுக்கு மலட்டுத் தன்மையினை நீக்கி (கருப்பதியம்) உண்டாக்க உதவி செய்கிறது.

RELAXATION RESPONSE எனப் பெயரிட்டு கூறுவது.

மந்திரங்கள் மற்றும் பிரார்த்தனைகளால் ஏற்படும் மாறுதல்கள்

மூச்சின் வேகம் குறைகிறது.

மன அலை அதிர்வை குறைக்கிறது.

மன ஓய்வு வருவதால் அறுவை சிகிச்சை அவசியத்தையும் படிப்படியாக குறைந்து மருந்து எடுத்துக் கொள்வதைக் குறைக்கிறது.. 36 சதவிகிதத்தினர் மருத்துவ மனைக்குச் செல்வது தவிர்க்கப் படுகிறது.


( ஆதாரம் -ஹிந்து நாளிதழ், 7/12/1995)


ஓங்காரம் ஒலிக்கட்டும் . சுயம் (ஆன்மா) வெளித்தோன்றட்டும்.

வாழ்க சத்குரு. வாழ்க இறைவன்

2 comments:

  1. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete
  2. ///ஓம் என்ற ஒலியினை (பிரணவ மந்திரத்தை) மன ஒருமையுடன் திரும்பத்திரும்ப கூறும்போது மன அலைகளின் வேக மாற்றத்தில் ஏற்படும் பலன் (விளைவு) விலை உயர்ந்த மாத்திரைகள் ஏற்படுத்தும் பலனை விட அதிகமாக கொடுக்கிறது.///

    :)- தகவல் அருமை ஐயா !

    அ உ ம் பற்றியும் விளக்கி இருக்கலாம்.இருப்பினும் நன்றி.

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment