Saturday, June 27, 2009

அனாகதம் (இதய கமலம் )

டுத்ததாக இதய கமலம் என்று அழைக்கப்பெறும் மார்புபகுதி முழுதும் வியாபித்திருக்கும் அனாகதம் என்ற ஆதாரச் சக்கரம் பல முக்கியச் சிறப்பத் தன்மைகளை கொண்டதென சித்த புருஷர்கள் விவரிக்கின்றனர். 

மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் , மணிப்பூரகம், விசுத்தி, ஆக்ஞை என்று ஆறாக இருந்தாலும் சஹஸ்ராரம் என்ற 7 வது ஆதாரமே இறுதி ஆதாரமாகும். 

ஏனைய ஆறு ஆதாரங்களுக்கும் நிலைக்களனாய் இருந்துகொண்டு பிராண ஆராதனையில் தன் இயக்கத்தை நிலை நிறுத்துகிறது. 

மேல் மூன்று சஹஸ்ராரம்,ஆக்ஞை,விசுத்தி, கீழ் மூன்று மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் , மணிப்பூரகம் இவ்விரண்டிற்கும் மைய கேந்திரமாக அனாகதம் ஒளிர்கின்றது. 

ஏனைய ஆதாரங்களை இயக்குவதன் மூலம் பிராண ஆதாரனை செய்திடினும் இயல்பாகவே சதா சர்வகாலமும் பிராண ஆதாரனையினை செய்து கொண்டிருப்பது அனாகதமே. 

அனாகதம் என்றால் அனாதி, சதா ஓங்கார ஒலியினை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதாகும். 

ஸ்வாதிஷ்டானம் 52 அக்னி கலைகளையும் , மணிபூரகம் 52 சூரிய கலைகளைக் கொண்டதுபோல,அனாகதம் 54 சூரிய கலைகளைக்கொண்டு ஜோதி வடிவானதாகவும், இறைவன் ருத்ர ரூபியாய் இங்கே வீற்றிருத்தாலும், பஞ்சாக்ஷ்ரங்களின் நடு எழுத்தாய் விளங்கும் "சி " , நெருப்பின் பஞ்ச பூத தத்துவமாகவும், எல்லாவற்றிலும் மேலாக எப்போதும் அனாதியாய் ஓங்கார சப்தத்தையும் (உடல் முழுதும் சிரசு வரை) மின்னலின் கண் தோன்றும் இடி சப்தத்தையும் எழுப்பிக்கொண்டே இருப்பதோடு ஒவ்வொரு அணுவிலும் அதன் அதிர்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும். 


இந்த ஆதாரத்தை அறிந்து அதனுள் பிரவேசித்து விட்ட எந்த சாதகரும் மேலும் அடுத்தடுத்த ஆதாரங்களை அடைந்து மேம்படுவார்களேயன்றி அவர்களுக்கு கீழிறக்கமில்லை என்று ரிஷிகள் வர்ணித்துள்ளனர். 

சாதகர்கள் அனாகத கேந்திரத்திற்கு தன்னை வியாபித்துக்கொள்ளும்போது கீழாதரங்களில் தாம் பெற்ற அனைத்து அனுபவங்களையும் ஆழ்ந்துணரும் சித்த வடிவாக ஒளியாய் சூட்சம ஒலி உந்துதலால் மேல் மேல்நோக்கி பயணித்து சிவசக்தி சங்கமத்தில் உருவாகும். 

ஆராவமுதை பருகும் நிலைக்கு ஆட்படுத்தபடுவார்கள் . இதுவே அனாகத தளத்தின் சிறப்பு வாய்ந்த தலமாக இருப்பது கண்கூடும். 

ஒளி, ஒலி இரண்டின் அனைத்து பரிமாணங்களில் ஒருசேரத் திகழும் ஆதாரமும் ஆகும். வட்டத்தின் நடுவே முக்கோணமும் , வட்டத்தின் வெளியே 12 யோக நாடிகளைக் கொண்டதாகவும், 

அக்ஷர (க,க2,க3,க4, ங ,ச1,ச2, ஜ3,ஜ4, ஞ,ட1,ட2) தளங்களை உடையதாகவும் உள்ளது.

3 comments:

  1. nice... but could not understand the sanskrit languages.

    silla vaarthaikalai yevaaru ucharika vendum yena porul yendru purinthu kolla mudiyavillai

    ReplyDelete
  2. இப்போதுதான் இந்த வலைப்பூ பற்றி அறிந்தேன்.

    சக்கரங்களை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் போல. லலிதா சஹஸ்ர்நாமத்தில் சக்க்ரங்களில் அன்னை வீற்றிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.


    இப்போதைக்கு ப்ரசண்ட் சொல்லிக்கொண்டு பொறுமையாக படிக்கிறேன்.

    ReplyDelete
  3. www.pudugaithendral.blogspot.com இதுதான் என் வலைப்பூ. கானக்கந்தர்வனிலும் எழுதுகிறேன்.

    தங்களின் கருத்திற்கு நன்றி. ரெய்கியில் குண்டலினி தியானம் கற்றேன். தங்களின் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.

    கலா ஸ்ரீராம்

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment