Thursday, August 9, 2012

அரங்கனின் ஆலயங்கள் - 108 திருப்பதிகள் பகுதி (16 )


89. திருநின்றவூர்

(திண்ணனூர்)

பெருமாள்                          :  பக்தவாதஸலர்- பத்தராவிப் பெருமாள் 

                                               நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                               :  என்னைப் பெற்ற தாயார் – ஸூதாவல்லி

விமானம்                           :  ஸ்ரீ னிவாஸ ( உத்பல ) விமானம் 

தீர்த்தம்                              :  வருணபுஷ்கரிணி , வ்ருத்த க்ஷீரநதி 

ப்ரத்யக்ஷம்                       :  வருணன் 

மங்களாசாசனம்               :  திருமங்கையாழ்வார் ( 2  பாசுரங்கள் )

சென்னை – அரக்கோணம் இரயில் பாதையில் திருநின்றவூர் இரயில் நிலையத்திலிருந்து 

தெற்கே 2 கி.மீ தூரத்திலுள்ள இக்கோயிலுக்கு சென்னையிலிருந்து பஸ் வசதி உள்ளது 





90. திருவெவ்வுள்
(திருவள்ளூர்)


பெருமாள்                         :   வீரராகவப் பெருமாள் 

                                             புஜங்க சயனம் , கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                              : கனகவல்லி தாயார் – வஸூமதி 

விமானம்                           : விஜயகோடி  விமானம் 

தீர்த்தம்                             : உற்ருத்தாபநாசதீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்                      : சாலிஹோத்ர மஹரிஷி 

மங்களாசாசனம்              : திருமழிசையார் , கலியன்  ( 12 பாசுரங்கள் )

சென்னை – அரக்கோணம் இரயில் பாதையில் திருவள்ளூர் இரயில் நிலையத்திலிருந்து தெற்கே 4 கி.மீ தூரத்திலுள்ள இத்தலத்திற்கு டவுன்  பஸ் வசதி  உள்ளது. சென்னையிலிருந்தும் பேருந்துகள் நேரடியாக செல்கின்றன 



91. திருநீர்மலை

பெருமாள்                         : நீர்வண்ணன்,    நீலமுகில் வண்ணன், ரங்கநாதன்
                                            புஜங்க சயனம் , கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                              : அணிமாமலர் மங்கை – ரங்கநாயகி  

விமானம்                           : தோயகிரி  விமானம் 

தீர்த்தம்                             : மணகர்ணிக தீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்                      : தொண்டைமான், ப்ருகு, மார்க்கண்டேயன் 

மங்களாசாசனம்               : திருமங்கையாழ்வார் , பூதத்தாழ்வார் ( 20 பாசுரங்கள் )

சென்னை- தாம்பரம் இரயில் பாதையில் பல்லாவரத்திலிருந்து தென்மேற்கே 6 கி.மீ தொலைவிலுள்ளது . நகர பேருந்துகள் வசதி உள்ளது.




92.  திருவிடந்வெந்தை

( திருவடந்தை )

பெருமாள்                      : நித்யகல்யாணர் – லக்ஷ்மி வராஹர்

                                          நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்

தாயார்                             : கோமளவல்லி நாச்சியார்  

விமானம்                          : கல்யாண விமானம் 

தீர்த்தம்                             :கல்யாண தீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்                      : மார்க்கண்டேயர்

மங்களாசாசனம்              :  திருமங்கையாழ்வார் ( 13 பாசுரங்கள் )

சென்னை – மகாபலிபுரம் கடலோர சாலை மார்க்கத்தில் சென்னியிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ளது. 


93. திருக்கடன்மல்லை

( மஹாபலிபுறம் )

பெருமாள்                           :ஸ்தலசயனப் பெருமாள் 

                                              புஜங்க சயனம் , கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                                    : நிலமங்கை நாச்சியார்  

விமானம்                               : ககநாக்ருதி ( அனந்த ) விமானம் 
  
தீர்த்தம்                                  : புண்டரீக புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்                           : புண்டரீக  ரிஷி 

மங்களாசாசனம்                   : கலியன் , பூதத்தாழ்வார் ( 27 பாசுரங்கள் )


திருவிடவெந்தையிலிருந்து 15 கி.மீ தூரத்திலுள்ளது. சென்னையிலிருந்து இத்தலத்திற்கு நேரடிப் பேருந்து வசதியுள்ளது ( 55 கி.மீ)


94. திருவல்லிக்கேணி

பெருமாள்                           : பார்த்தசாரதி – வேங்கட கிருஷ்ணன்
                                             நின்ற திருக்கோலம்  , கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                               : ருக்மணி   

விமானம்                           : ஆனந்த விமானம் 

தீர்த்தம்                             : கைரவிணி புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்                       : ருக்மணி, அநிருத்தர், ப்ரத்யும்னர், பலராமன்,
                                               ஸூமதிராஜன், தொண்டைமான், அர்ஜுனன்  

மங்களாசாசனம்               :  பேயாழ்வார் , திருமழிசையாழ்வார்,  
                                                    திருமங்கையாழ்வார்  ( 12 பாசுரங்கள் )

பார்த்தசாரதியுடன் ரங்கநாதர், ராமர், வரதர் , நரசிம்மர் என 5 மூர்த்திகள் ஒருங்கே எழுந்தருளிய தலம்.

சென்னை மாநகரின் ஒரு பிரிவாகத் திகழும் இத்தளத்திற்குச் சென்னையின் எல்லா இடங்களிலிருந்தும் டவுன் பஸ் வசதி உள்ளது.




95. திருக்கடிகை   
( சோளிங்கர் )
பெருமாள்                        :    யோகநரஸிம்ஹன்
                                             வீற்றுருந்த  திருக்கோலம்  , கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                              :  அம்ருதவல்லித் தாயார்  

விமானம்                          :  ஸிம்ஹகோஷ்டாக்ருதி  விமானம் 

தீர்த்தம்                            :  அம்ருத தீர்த்தம்  

ப்ரத்யக்ஷம்                      :  ஹனுமார்

மங்களாசாசனம்              :  பேயாழ்வார் , கலியன் ( 4 பாசுரங்கள் )

சென்னை அரக்கோணத்திலிருந்து 28 கி.மீ தொலைவு. சென்னை மற்றும் திருத்தணியிலிருந்து நேரடி பஸ் வசதியுள்ளது. 



96. திருவேங்கடம்
(திருப்பதி )

பெருமாள்                           : திருவேங்கட முடையான் – ஸ்ரீநிவாசன்                                              
                                                 நின்ற திருக்கோலம்  , கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                                  :  அலர்மேல் மங்கைத் தாயார்  

விமானம்                             :  ஆனந்த நிலைய விமானம் 

தீர்த்தம்                               :  ஸ்வாமி புஷ்கரிணி , பாபவிநாச , ஆகாய கங்கை,
                                              கோகர்ப்ப  தீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்                         : தொண்டமான் சக்ரவர்த்தி , ஆறுமுகன் 

மங்களாசாசனம்                  : மதுரகவி , தொண்டரடிப்பொடி தவிர 
                                                  ஏனைய ஆழ்வார்கள்  ( 202  பாசுரங்கள் )

சென்னை பம்பாய் ரயில் பாதையில் ரேணிகுண்டாவிலிருந்து 10  கி.மீ தூரத்தில் திருமலை அடிவாரம் உள்ளது. சென்னை மற்றும் பல ஊர்களிலிருந்தும் நேரடி பஸ் , இரயில் வசதியுள்ளது. 


97. சிங்கவேள்குன்றம்
( அஹோபிலம் )
பெருமாள்                       :  நரஸிம்ஹன் – ப்ரஹ்லாதவரத்தன்
                                            வீற்றிந்த  திருக்கோலம்  , கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                            :  லக்ஷ்மி

விமானம்                        :  குருகை விமானம் 

தீர்த்தம்                           :  இந்திர , நரசிங்க, பாபநாச, கஜ , பார்க்கவ தீர்த்தம்  

ப்ரத்யக்ஷம்                    :  ப்ரஹ்லாதன்  

மங்களாசாசனம்            :  திருமங்கையாழ்வார்  ( 10 பாசுரங்கள் )

சென்னை பம்பாய் ரயில் பாதையில் கடப்பா ரயில் நிலையத்திலிருந்து 110  கி.மீ தூரத்தில் உள்ளது. திருப்பதி – ஹைதரபாத சாலையில் நந்தியாலிலிருந்து 65 கி.மீ தோற்றத்தில் உள்ள தலம் பஸ் வசதியுள்ளது.



98. திருவயோத்தி 
( அயோத்தி  )

பெருமாள்                       : சக்ரவர்த்தித்திருமகன் – ரகுநாயகன் 
                                            வீற்றிந்த  திருக்கோலம்  , வடக்கே திருமுக மண்டலம் 

தாயார்                            : சீதாபிராட்டி 

விமானம்                         : புஷ்கல விமானம் 

தீர்த்தம்                            :  பரமபதஸத்ய புஷ்கரிணி, ஸராயூநதி

ப்ரத்யக்ஷம்                     : பரதன் , தேவர்கள், முனிவர்கள்

மங்களாசாசனம்             : பெரியாழ்வார், குலசேகரர், தொண்டரடிப்பொடி, கலியன், நம்மாழ்வார் ( 13 பாசுரங்கள் )


மொகல்சராய் – லக்நவ் மார்க்கத்தில் பைசாபாத்ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள தலம்.






















No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment