உலகம், நாம், கடவுள் இந்த மூன்றும் ஒன்றோடொன்று
பிணைக்கப்பட்டுள்ளது இந்த மூன்றையும் அறிவதற்காகத் தான் நாம் யோகம் பயில்கின்றோம்.
ஆன்மீகத்தில் ஈடுபடுகின்றோம்.
சமாதி
நிலையில் இருந்து எதையுமே காண இயலாது.
ஆனந்தத்தை மட்டும் அனுபவித்துக் கொண்டிருக்க முடியும். அந்த நிலையை விட்டு வந்த
பின்பு அந்த ஆனந்தமும் நமக்கு இருக்காது .
யோகப் பயிற்சியினை புதிதாக
மேற்கொள்பவர்களுக்கு ஆரம்ப நிலையில் அதிகமான இடையூறுகள், தடைகள்,
பிரச்சனைகள் வருகின்றன. அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் பற்றிக்
காணலாம்.
தியானத்தின் வெற்றி என்பது தொடர்ந்து மேற்கொள்ளும் பயிற்சியில் அடங்கி
இருக்கின்றது. ஆனால், தியானம் செய்யும் அனைவருக்குமே
இடையூறுகள் இருக்கின்றன.