ஆகர்ஷண தனுராசனம்
உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் என்ற முக்கியமான ஆசனத்தை இந்த பதிவில் பார்ப்போம்
காலை 6 மணிக்குள் அல்லது மாலை 6 மணிக்குள் இந்த ஆசனம் செய்யப் பட வேண்டும். வெறும் வயிற்றிலோ அல்லது சாப்பிட்ட 3 மணி நேரத்திற்கு மேல் செய்யலாம்.
செய்முறை
அமர்ந்த நிலையில் கை கால்கள் இணைந்த செயல் ஆசனம். இயல்பான மூச்சுடன் நமது முழு சிந்தனையும் காதை நோக்கி இருக்க வேண்டும் .
இடது கால் நீட்டப் பட்டு வலது காலை மடித்து, வலது பாத கட்டை விரலை கையால் பிடித்து பாதத்தை காதருகே கொண்டு சொல்ல வேண்டும். இப்படி வலம் இடம் மாற்று முறையில் , கை மற்றும் கால்களை எதிர்புறம் மாற்றி செய்யப் படுவதாகும்.
பலன்
காது சம்பந்தப் பட்ட நோய் , காது அடைப்பு, காதில் இரைச்சல் , கேட்கும் திறன் குறைவு ஆகிய காது சம்பந்தப் பட்ட அனைத்து நோய்களும் குணமாகும் . காது கேட்கும் சக்தி அதிகரிக்கும்
No comments:
Post a Comment