ஆதித்ய ஹ்ருதயம்
முந்தைய பதிவில் சூரிய நமஸ்காரத்தின் செய்முறையினை சற்று விரிவாகப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையில் சூரிய பகவானைப் போற்றும் மந்திரங்களை காண்போம்.
ஆதித்ய ஹ்ருதயம் என்ற மந்திரத் தொகுப்பு மகா விஷ்ணுவின் அவதாரமாகிய ஸ்ரீ ராமருக்கு , ராவணனை வெல்லும் பொருட்டு அகத்திய மகரிஷியினால் உபதேசிக்கப்பட்டது. ஆதித்ய ஹ்ருதயத்தை ஜெபித்தே ஸ்ரீ ராமர் போரினால் ராவணனை வென்றார் என்பது வரலாறு. அத்தகைய ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை உச்சரித்து , போற்றி நாமும் நலம் காண வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
த்யானம்
சூர்யம் சுந்தர லோகநாத மம்ருதம்
வேதாந்த ஸாரம் சிவம்
ஞானம் பிரம்ம மாயம் சுரேச மாமலம்
லோகைக சித்தஸ்வயம்
இந்த்ராதித்ய நராதிபம் சுரகுரும்
த்ரைலோக்ய சூடாமணிம்
பிரம்மா விஷ்ணு சிவஸ்வரூப ஹ்ருதயம்
வந்தே ஸதா பாஸ்கரம்
பொருள் -
வேதாந்தத்தின் ஸாரமாகவும் மங்களத்தை தருபவரகாவும் உலகிற்கு ஒளியினையும் , அழகினையும் அளிப்பவரும் , பரிசுத்தமானவரும் , நிலையான அறிவாகவும் , உலகை இயங்க வைக்கக் கூடியவரும் , அனைத்து தேவர்களாலும் வணங்கப் படுபவரும், மூன்று உலகிற்கும் சூடாமணி போல தெய்வங்களான பிரம்மா,விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களின் ஹ்ருதயத்தில் பிரகாசிப்பவருமான சூரிய பகவானை நான் வணங்குகிறேன்.
1. ஓம் மித்ராய நம :
2. ஓம் ரவயே நம :
3. ஓம் சூர்யாய நம :
4. ஓம் பானவே நம :
5. ஓம் ககாய நம :
6. ஓம் பூஷ்ணே நம :
7. ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம :
8. ஓம் மரீசயே நம :
9. ஓம் ஆதித்யாய நம :
10. ஓம் சவித்ரே நம :
11. ஓம் அர்க்காய நம :
12. ஓம் பாஸ்கராய நம :
ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம :
காலையில் சூரியன் இருக்கும் கிழக்கு திசையினை நோக்கி இந்த 12 மந்திரங்களையும் கூறி நமஸ்காரம் செய்ய வேண்டும்.
ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்
1 ) ததோயுத்த பரிஸ்ராந்தம்
ஸமரேசிந்தாயஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்டவா
யுத்தகாய ஸமுபஸ்திதம்
2 ) தைவதைஸ்ச ஸமாகம்ய
த்ரஷ்டுமய்யாகதோ ரணம்
உபகாம்யா பரவீதராமம்
அகஸ்த்யோ பகவான் ரிஷி:
யுத்தத்தினால் களைப்புற்றவரும் யுத்தத்திலேயே சிந்தையினச் செலுத்தி இருப்பவரும், எதிரில் சண்டைக்குத் தயாராக வருகின்ற இராவணனைப் பார்த்து தானும் யுத்தத்திற்கு தயாராக இறைவனை வணங்கியவாறு நிற்கும் ஸ்ரீ ராமன் அருகில் அகஸ்திய மகரிஷி சென்றார்.
3 ) ராமராம மஹாபாஹோ
ஸ்ருனுகுஹ்யம் ஸனாதனம்
யேந ஸர்வாநரீன் வத்ஸ
ஸமரே விஜயிஷ்யஸி
சிறந்த வீரனான இராமனே ! பெருமை தரக்கூடியதும் , யுத்தத்தில் எதிர்களை எளிதில் வெல்வதற்கு முக்கியமானது, இரகசியமானதும் ஆகிய இந்த மந்திரத்தை உபதேசிக்கிறேன்.
4 ) ஆதித்ய ஹ்ருதயம் புண்யம்
ஸர்வ சத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேவ் நித்தியம்
அக்ஷயம் பரமம்சிவம்
இந்த ஆதித்ய ஹ்ருதயம் புண்ணியத்தை தரக்கூடியது. எல்லா எதிரிகளையும் அளிக்கக் கூடியது
5 ) ஸர்வ மங்கள மாங்கல்யம்
ஸர்வ பாப ப்ரணாஸனம்
சிந்தாசோக ப்ரசமனம்
ஆயுர் வர்த்தன முத்தமம்
எல்லாப் பாவங்களையும் போக்க வல்லது . மனக்கவலையினை நீக்கி நீண்ட ஆயுளைத் தரவல்லது
6 ) ரஸ்மிமந்தம் ஸமுத்யந்தம்
தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விஸ்வவந்தம்
பாஸ்கரம் புவனேஸ்வரம்
ஓளி தரும் கிரணங்களோடு கூடியவரும், தேவர்களாலும் , அசுரர்களாலும் வணங்கப் படுபவரும் உலகிற்கே தலைவனான சூரியனைப் பூஜை செய்வாயாக
7 ) ஸர்வதேவாத் மகோ ஹ்யேஷ :
தேஜஸ்வீ ரஸ்மி பாவன :
ஏஷதேவா ஸுரகணான்
லோகான் பாதி கபஸ்திபி :
எல்லா தெய்வங்களுக்கும் ஹ்ருதயத்தில் இருப்பவராகிய இவரே ஓளி பொருந்திய தன்னுடைய கிரணங்களால் உலகையே காப்பாற்றுகிறார்.
8 ) ஏஷாப்ரஹ்மா ச விஷ்ணுஸ்ச
சிவ ஸ்கந்த : ப்ரஜாபதி
மஹேந்த்ரோ தனத : காலோ
யமஸ் ஸோமோ ஹ்யபாம்பதி :
இவர் பிரம்மா என்றும் விஷ்ணு என்றும் சிவன் என்றும் உலகைப் படைக்கும் கடவுள் என்றும், இந்திரன் என்றும் முதலான எட்டுதிசைக் காவலர்களாகவும் போற்றப்படுகிறார்.
9 ) பிதரோ வஸவ: ஸாத்யா
ஹயல்விநௌ மருதோமனு:
வாயுர்வஹனி: ப்ரஜா ப்ராண
ருதுகர்தா ப்ரபாகர
முன்னோர்கள், எட்டு வசுக்கள் அசுவினி தேவர்கள், எட்டு மருத்துகள், வாயு, அக்னி இவர்களை இயங்க வைப்பவர் இவரே. காலங்களை எற்படுத்துபவரும் இவரே .
10 ) ஆதித்ய: ஸவிதாசூர்ய:
கக: பூஷா கபஸ்திமான்
ஸ்வர்ண ஸத்ருஸோபானு :
ஹிரண்யரேதா திவாகர :
ஆதித்யன், சவிதா, சூரியன் என்ற பல்வேறு பெயர்களால்
அழைக்கப் படுகிறார். பொன்னிற கிரணங்களால் பிரகாசிக்கும் இவர் பகலின் நாயகனுமாவார்.
11 ) ஹரிதஸ்வ: ஸஹஸ்ரார்சி
ஸப்தஸப்திர் மரீசிமான்
திமிரோன் மதன: ஸம்புஸ்
த்வஷடா மார்த்தாண்ட அம்ஸுமான்
ஆயிரம் கிரணங்களோடு ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வந்து அருள் தருபவர்.
12 ) ஹ்ரண்யகர்ப்ப: ஸிஸிரஸ்
தபனோ பாஸ்கரோ ரவி
அக்னிகர்ப்போதிதே: புத்ர :
சங்க சிஸிர நாசன:
பாஸ்கரன், ரவி என்ற பெயர்களால் போற்றப்படும் இவர் பிணிகளைப் போக்கி அருள் தருவது போல் அறியாமை என்ற இருளைப் போக்கி ஞானமாகிய ஒளியினையும் தருவார்.
13 ) வயோமநாதஸ் தமோபேதீ
ருக்யஜுர் ஸாமபாரக :
கனவ்ருஷ்டி ரபாம் மித்ரோ
விந்த்ய வீதிப்லவங்கம :
நான்கு வேதங்களால் போற்றப்படுபவரும், விந்திய மலையினை வலம் வருபவரும், நல்ல மழைக்குக் காரணமாக அமைபவரும் இவரே.
14 ) ஆதபீ மண்டலீ ம்ருத்யு :
பிங்களஸ் ஸர்வதாபன :
கவிர்விஸ்வோ மஹாதேஜா :
ரக்தஸ் ஸர்வபவோத்பவ :
ஓளி தரும் கிரணங்களையுடையவரும், உலகையே இயக்குபவரும் மரணத்தை தவிர்த்து நல்ல ஆய்ளைத் தருபவரும் ஆன இவர் காலையிலும், மாலையிலும் சிவந்த கிரணங்களோடு அழகாக் காட்சியளிக்கிறார்.
15 ) நக்ஷ்த்ர க்ரஹ தாரணாம்
அதிபோ விசுவபாவன :
தேஜஸாமபி தேஜஸ்வித்வாத
சாத்மன் நமோஸ்துதே
27 நட்சத்திரங்களுக்கும் ஒன்பது கிரகங்களுக்கும் தலைவனாக விளங்குகின்ற இவர் அனைத்து ஒளிகளுக்கும் மேலாக விளங்கி பன்னிரண்டு ஆதித்யர்களாகவும் விளங்குகிறார்.
16 ) நம பூர்வாய க்ரயே
பஸ்சிமாயாத்ரயே நம :
ஜ்யோதிர் கணானாம் பதயே
திநாதிபதயே நம :
கிழக்கில் உதயமாகி மேற்கில் மறைந்து பகல் முழுவதும் ஒளிதந்து நாளிற்குக் காரணமான தினகரன் என்ற பெயரப் பெற்று விளங்குகிறான்.
17 ) ஜயாய ஜயபத்ராய
ஹர்யஸ்வாய நமோ நம :
நமோ நம ஸஹஸ்ராம்ஸோ
ஆதித்யாய நமோ நம :
ஆயிரம் கிரணங்களைக் கொண்டவரும் வெற்றியைத் தருபவரும் ஆன கதிரவனை வணங்குகிறேன்.
18 ) நம : உக்ராய வீராய
ஸாரங்காய நமோ நம :
நம: பத்ம ப்ரபோதாய
மார்த்தாண்டாய நமோ நம :
வணங்குபவர்களுக்கு தைரியத்தையும் , வீரத்தையும் தருபவும், தாமரைகளை மலரச் செய்து அருள் தருபவனுமான , சூரியனை வணங்குகிறேன்.
19 ) ப்ரம்ஹேசா நாச்யுதேஸாய
ஸுர்யாயாதித்ய வர்சஸே
பாஸ்வதே ஸர்வ பக்ஷாய
ரௌத்ராய வுபுஷே நம :
தேவர்கள், அசுரர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவராலும் வணங்கப்படுபவனும் , மார்த்தாண்டன் என்று போற்றப் படுபவருமான சூரிய பகவானை வணங்குகிறேன்.
21 ) தமோக்னாய ஹிமக்ணாய
ஸ்த்ருக்னாயாமி தாத்மனே
கிருதக்ணக்னாய தேவாய
ஜ்யோதிஷாம் பதயே நம :
இருளைப் போக்குபவரும் பிணியை அளிப்பவரும் , தன்னை வணங்குபவர்களின் எதிரிகளை அளிப்பவரும் ஒளிக்கதிர்களின் தலைவருமான ஞாயிறை வணங்குகிறேன்.
21 ) தப்தசாமீ கராபாய
வஹ்னயே விஸ்வகர்மனே
நமஸ் தமோபி நிக்னாய
ருசயே லோகஸாக்ஷிணே
உருக்கிய தங்கம் போன்ற கிரணங்களை உடையவரும், இருளை அகற்றி உலகிற்கு ஒளியினைத் தருபவரும் , லோக சாட்சி என்று போற்றப் படுபவருமான ஆதித்யனை வணங்குகிறேன்.
22 ) நாசயத்யேஷவை பூதம்
ததேவ ஸ்ருஜதி ப்ரபு :
பாயத்யேஷ தபத்யேஷ
வன்ஷத்யேஷ கபஸ்திபி :
உலகின் தீமைகளைத் தன்னுடைய கிரணங்களால் போக்கி உலகம் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் இவரே காரணாமாக விளங்குகிறார்.
23 ) ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி
பூதேஷு பரிநிஸஷ்டித:
ஏஸ ஏவாக்னி ஹோத்ராஞ்ச
பலம் சைவாக்ணி ஹோத்ரிணாம்
வேள்விக்கு காரணமான அக்னியாகவும் , யாகத்தின் பலனாகவும் விளங்குபவர் இவரே.
24 ) வேதாஸ்ச க்ரதவைஸ் சைவ
க்ரதூனாம் பலமேவச
யானி க்ருத்மானி லோகேஷு
ஸர்வ ஏஷ ரவி ப்ரபு :
வேதங்கள் அது தொடர்பான அனைத்து செயல்களுக்கும் காரணமாகவும் , பலனாகவும் விளங்குபவர் இந்த ரவி பகவானேயாவார்.
25 ) ஏனமாப்தஸு க்ருச் ரேஷு
காந்தாரேஷு பயஷுச
கீர்த்தயன் புருஷ கஸ்சித்
நாவீவஸீததி ராகவ
அகத்தியர் இராமனைப் பார்த்து ஏ ராமனே ஆபத்திலும் மிகுந்த பயத்திலும்
எவர இதைப் படிக்கிறார்களே அவர்களுக்குத் துன்பமேதும் ஏற்படாது.
26 ) பூஜயஸ்வைன மேகாத்ர:
தேவதேனம் ஜகத்பதிம்
எதத் திரிகுணிதம் ஜபத்வா
யுத்தேஷு விஜயிஷ்யஸி
இதை நீ மூன்று முறை பாராயணம் செய்து யுத்தத்தில் வெற்றி
அடைவாய். ஒருமித்த கருத்தோடு நீ சூரியனைப் பூஜை செய்.
நீ இராவணனை வெல்வது நிச்சயம்.
27 ) அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ
ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ
ஜகாமச யதாகதம்
இதைக் கேட்டு வீரனான இராமன் கவலை நீங்கியவராக புத்துணர்ச்சியுடன் யுத்தத்திற்கு கிளம்பினார்
28 ) எதச்ச்ருத்வா மஹாதேஜா
நஷ்ட சோகோ பவத்ததா
தாராயாமாஸஸுப்ரீதோ
ராகவ : ப்ரயதா த்மவான்
சூரியனைப் பார்த்து சந்தோஷமடைந்த இராமர் மகிழ்ச்சியுடன் வில்லை
ஏந்தி யுத்தத்திற்கு தயாரானார்.
29 ) ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜப்த்வாது
பரம் ஹர்ஷ மவப்தவான்
த்ரிராசம்ய ஸுசிர் பூத்வா
தனுராதய வீர்யவான்
மிகுந்த பராக்கிரமம் கொண்ட இராவணனை இராமர் எளிதாக வென்றார்
30 ) ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா
யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்னேன மஹதா
வதே தஸ்ய த்ருதோபவத்
அத ரவீரவதந் நிரிஷ்ய ராமம்
முதிதமனா: பரமம் ப்ரஹ்ஷ்யமான :
நிஸிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா
ஸுரகணமத்யகதோ வசஸ்த்வரேதி
பிறகு சூரியன் இராமர் எதிரில் தோன்றி அரக்கர்களைக் கொன்று

சூரிய நமஸ்காரம்

உலகிற்கு நன்மை எற்படுததுவாய் என்று அருளி மறைந்தார்.
சூரியனை வணங்குதல் என்பது வேதங்களிலும் காணப் படுகிறது. சூரிய நமஸ்காரம் பற்றி ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளவைகளை வரும் பதிவில் காண்போம்.
(தொடரும்)
பதிவிற்கோர் காயத்ரி மந்திரம்
அருள் திரு அத்ரி மகரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
மகா யோகாய தீமஹி
தந்நோ அத்ரி ப்ரசோதயாத்
Thank you very much for posting this. Its very clear and easy to read.
ReplyDelete